அறிவியல் அறிவோம்: ‘3டி’ அச்சுத் தொழில்நுட்பத்தின் அதிசயங்கள்

அறிவியல் அறிவோம்: ‘3டி’ அச்சுத் தொழில்நுட்பத்தின் அதிசயங்கள்

2 mins read
10241a49-9ec8-4e4e-a577-b418c66b8dac
மனித உயிரணுவைவிட சிறிய யானை அச்சிடப்பட்டுள்ளது. - படம்: ஜோசஃப் ஸ்டெஃபான் கழகம்
Google News Preferred Icon

மனித வாழ்க்கையைப் பெரிய அளவில் மாற்றியமைக்கும் ஒரு தொழில்நுட்பமாக முப்பரிமாண அச்சுத் தொழில்நுட்பம் (3D Printing) உருவெடுத்துள்ளது. 

உயிரணுவைவிடச் சிறிய யானை

மனித உயிரணுவைவிடச் (Cell) சிறிதான யானையின் வடிவத்தை விஞ்ஞானிகள் அச்சிட்டுள்ளனர்.

தூசித் துகளைவிடச் சிறிதாக உள்ள அந்த யானையின் நீளம் 10 மைக்ரோமீட்டர்.

இது தொடர்பான தகவல்களை, ஸ்லோவேனியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அறிவித்தனர். 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்தக் கண்டுபிடிப்பு அறிவிக்கப்பட்டது. 

இந்த யானைக்கு அடுத்து நுண்ணுயிரிகளைப் போலச் சிறிதான இயந்திரங்கள் இனிமேல் உருவாகலாம். இதனால் நோய்களைக் குணமாக்கும் புதிய தீர்வுகள் கண்டுபிடிக்கப்படலாம். நுண்ணுயிர்களைப் பற்றிய நம் அறிவு விரிவடையலாம்.

அச்சு வழித் தயாராகும் உணவு

உணவுப் பொருள்களைப் பெருமளவில் தயாரிக்க, அவற்றில் சில வகைகள் தற்போது அச்சிடப்பட்டு வருகின்றன.

சாக்லேட், கேக் உள்ளிட்ட பலகார வகைகளைத் தயாரிக்க அச்சுத் தொழில்நுட்பம் பயன்பட்டு வருகிறது.

3டி அச்சு  முறையில் உருவாக்கப்பட்ட ‘குரூப்பர்’ மீன் துண்டுகளைக் கொண்ட உணவு
3டி அச்சு முறையில் உருவாக்கப்பட்ட ‘குரூப்பர்’ மீன் துண்டுகளைக் கொண்ட உணவு - படம்: ராய்ட்டர்ஸ்

2020ஆம் ஆண்டு அக்டோபரில் ரஷ்ய விண்வெளி வீரர்கள் மாமிசத்தை அச்சிட்டனர். 

சமைக்கப்பட்ட கேரட், கீரை, பச்சைப் பட்டாணி போன்றவை இப்போது அச்சிடப்படலாம். பசை வடிவில் அச்சு வழி உருவாக்கப்படும் இந்த உணவு வகைகள், பற்கள் இல்லாத முதியோர் சாப்பிடுவதற்கு வசதியாக இருக்கும்.

கட்டடங்கள் பலவிதம்

முப்பரிமாண அச்சு இயந்திரங்களைப் பயன்படுத்தி பெரிய வீடு ஒன்றைச் சில நாள்களிலேயே கட்ட முடியும்.

மிகப் பிரம்மாண்டமான 3D இயந்திரங்கள் கான்கிரீட் கலவையைக் கொண்டு இவற்றை உருவாக்குகின்றன.

தென்னமெரிக்காவில் உள்ள சிலி எனும் நாட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட வீடு.
தென்னமெரிக்காவில் உள்ள சிலி எனும் நாட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட வீடு. - படம்: ராய்ட்டர்ஸ்

இந்த இயந்திரங்கள் வீடுகளை அடுக்கடுக்காக மிக வேகமாகக் கட்டி முடிக்கின்றன.

மிகவும் வலிமையாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் இத்தகைய வீடுகளில் தற்போது பல குடும்பத்தினர் வசிக்கின்றனர்!

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்