உலக கொவிட்-19 தொற்று நிலவரமும் அதற்கேற்ற அணுகுமுறையும்

உலகை இன்­ன­மும் மிரட்­டி­வ­ரும் கொவிட்-19 கிருமி­யைப் பொறுத்­த­வரை சீனா மிக­வும் குறிப்­பி­டத்­தக்க ஒரு நாடு. அந்­தக் கிருமி பிறந்து வளர்ந்த இடம் சீனா­தான். முதன்­மு­த­லாக கடந்த 2019 டிசம்­ப­ரில் சீனா­வின் வூஹா­னில்­தான் கொரோனா கிருமி தலை­காட்­டி­யது.

அங்­கி­ருந்து உல­கம் முழு­வதும் பல்­கிப் பெருகி அது படுத்­திய பாடு­களை, விளை­வித்த பாதிப்பு­களை, மர­ணங்களை மறு­படி­யும் நினைத்துப்­ பார்க்கவே பய­மாக இருக்­கிறது. தடுப்­பூசி, கடுமை­யான கட்­டுப்­பா­டு­கள், உல­களா­விய ஒத்­து­ழைப்பு எல்­லா­வற்­றின் விளை­வாக அந்­தக் கிருமி கட்டுப்­படுத்­தப்­பட்டு இப்­போது ஓர­ள­விற்கு உல­கம் நிம்­மதிப் பெரு­மூச்­சுவிடு­கிறது.

இத்தகைய இக்­கட்­டான ஒரு­ நே­ரத்­தில் மறு­படி­யும் சீனாவே பிரச்­சி­னை­யா­கி­வி­டுமோ என்ற அச்­சம் தலைதூக்கி இருக்­கிறது.

கொரோனா கிரு­மி­யை அறவே ஒழிக்க முடியாது; இனிமேல் உல­கம் கொரோ­னா­வு­டன்­தான் வாழ்ந்­தா­க­வேண்டி இருக்கும் என்று நம்பி, அந்த முடி­வுக்கு வந்து அதற்கு ஏற்ப நாடு­கள் ஆயத்­த­மா­கிவிட்டன.

ஆனால், கொரோனா பிறப்­பி­ட­மான சீனாவோ அந்தக் கிரு­மியை அறவே துடைத்து ஒழிக்க வேண்­டும். கொவிட்-19 இல்­லாத சூழலை எப்படியும் ஏற்­ப­டுத்­தி­விட வேண்­டும் என்று கங்­கணம் கட்டிக்கொண்டு அதையே தன் கொள்கை­யா­கக் கொண்டு செயல்­பட்டு வந்­தது.

சீன அர­சாங்­கம் எவ்வளவோ பாடுபட்டும் 1.4 பில்லி­யன் மக்­கள் வசிக்­கும் அந்த நாட்­டில் விரும்பிய பலன் கிடைக்­க­வில்லை. ஆகை­யால், கிரு­மியை முற்­றி­லும் துடைத்து ஒழிக்க வேண்­டும் என்ற கொள்­கை­யை சீனா கைவிட்­டு­ இப்போது திடீ­ரென்று கட்­டுப்­பாடு­களைத் தளர்த்­தி­விட்டது.

அத்தகைய ஒரு சூழலை எதிர்­பார்த்­துக் கொண்டே இருந்த கொரோனா கிருமி, இதுதான் சாக்கு என்று தன் வேலை­யைக் காட்­டத் தொடங்கி­விட்­டது. தொற்று தாறு­மா­றாக பெரு­கி­விட்­டது.

தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாத மக்­கள் அதிகம் பாதிக்­கப்­பட்டு மருத்­து­வ­ம­னை­கள் திணறு கின்றன; மர­ணங்­கள் கூடி­விட்­டன.

சீன நில­வ­ரம், கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக அனுபவித்­த­வற்றை மறு­டி­யும் எதிர்­நோக்­க­வேண்டி இருக்­குமோ என்று உல­கமே மிர­ளும் அள­வுக்­குப் பயத்­தைக் கிளப்­பி­விட்டு உள்­ளது.

சீனா­வில் என்ன நடக்­கிறது என்­ப­தும் தெளி­வா­கத் தெரி­ய­வில்லை. அங்கு கொரோனா காரண­மாக மர­ணம் அடை­யும் மக்­க­ளின் அதி­கா­ர­பூர்­வ­மான எண்­ணிக்கை உலக அள­வு­டன் ஒப்பிடு கை­யில் குறை­வா­கவேதான் உள்ளது. ஆனால் உண்­மை­யான மரண எண்­ணக்கை மிக அதி­க­மாக இருக்­கும் என்­று­ பர­வ­லாக நம்­பப்­ப­டு­கிறது.

சீனா­வில் கொரோனா தொற்று கார­ண­மாக ஒவ்­வொருநாளும் ஏறக்­கு­றைய 9,000 பேர் மர­ண­ம­டை­யக்­கூ­டும் என்று பிரிட்­ட­னைச் சேர்ந்த சுகா­தார அடிப்­ப­டை­யி­லான தக­வல் நிறு­வ­னம் ‘ஏர்­ஃப­னிட்டி’ கூறு­கிறது.

இது உண்மை என்­றால் சீன நில­வ­ரம் படு­மோசம் என்ற முடி­வுக்­குத்­தான் வரமுடி­யும்.

சீனா­வில் கொரோனா கிருமி இப்­போது எப்­படி பரி­ண­மித்­துள்­ளது என்­பது தெரியவில்லை. கிருமி எந்த அள­வுக்­குப் பரவி இருக்­கிறது என்­ப­தும் புரி­ய­வில்லை. இவை மிகவும் கவலை தரு­கின்­றன.

ஆகை­யால், கொரோனா பற்­றிய துல்­லி­ய­மான விவ­ரங்­க­ளைத் தெரிந்­து­கொள்ள ஏது­வாக உலக சுகா­தார நிறு­வ­னம் சீன நாட்டு அறிவியல் அறிஞர்­க­ளைச் சந்­தித்து இருக்­கிறது.

தொற்று பர­வல், மருத்­து­2வ­ம­னை­கள் நில­வரம், மர­ணங்­கள், தடுப்­பூசி ஆகி­யவை பற்­றிய தகவல்­களைத் தன்­னி­டம் பகிர்ந்­து­கொள்­ளும்­படி சீன அறி­வி­யல் அறி­ஞர்­க­ளுக்கு ஐநா அமைப்பு அழைப்பு விடுத்து இருக்­கிறது.

சீனா தன்­னு­டைய எல்­லை­களை இன்று முதல் திறந்­து­வி­டு­வ­தாக அறி­வித்து இருக்­கிறது.

சீனா­வில் இருந்து வரும் பய­ணி­கள் தங்­க­ளுக்­குத் தொற்று இல்லை என்­பதை மெய்ப்­பித்­தால்­தான் அவர்­க­ளுக்கு அனு­மதி கிடைக்­கும் என்று முன்­ன­தா­கவே அமெ­ரிக்கா, ஜப்­பான் உள்­ளிட்ட பல நாடு­கள் அறி­வித்துவிட்டன.

இந்த அறி­விப்பு சீனா­வுக்குக் கோப­மூட்டி இருக்­கிறது. சீனா­வின் கொரோனா நில­வ­ரம் கட்­டுப்­பாட்­டின்கீழ்­தான் இருக்­கிறது. சீனா­வின் இப்­போ­தைய சூழ்­நி­லையை வைத்­துக்­கொண்டு யாரும் உள்­நோக்­கத்­து­டன் செயல்­ப­டக்­கூ­டாது. இல்­லா­ததை இருப்­ப­தாக பெரிதுபடுத்­தக்­கூ­டாது. அர­சி­யல் நடத்­தக் கூடாது என்று சீனா கடு­மை­யாக எச்­ச­ரித்து இருக்­கிறது.

ஆனாலும் தானும் இதர நாடு­களும் கைக்­கொள்­ளும் அணு­கு­முறை சரி­யான ஒன்­று­தான் என்று அமெ­ரிக்கா தெரி­வித்து வரு­கிறது.

மொத்­தத்­தில் பார்க்­கை­யில், சீன நில­வ­ரம் மீண்டும் மிரட்­டலை ஏற்­ப­டுத்­து­வ­தாக உள்ளது.

இப்­போ­தைய உல­கில் ஒவ்­வொரு நாடும் மிக அணுக்­க­மா­கத் தொடர்பு கொண்டு இருக்­கின்றன.

ஒரு தொற்று தலை­யெ­டுக்­கிறது என்­றால் அதைக் கட்­டுப்­ப­டுத்த வேண்­டிய பொறுப்பு எல்லா நாடு­க­ளுக்­கும் இருக்­கிறது. கொரோனா போன்ற கிரு­மி­கள் எல்­லை­க­ளுக்குக் கட்­டுப்­ப­டாத ஒன்று என்­பதை கடந்த மூன்­றாண்டு கால­மாக உல­கம் உணர்ந்து இருக்­கிறது.

எல்லா நாடுகளுமே இதைக் கவ­னத்­தில் கொண்டு செயல்­பட வேண்­டும். சிங்­கப்­பூரை பொறுத்­த­வரை சீனா­வில் இருந்து வரும் பய­ணி­களால் அவ்­வ­ள­வாக பாதிப்பு இருக்­காது என்றே தெரி­ய­வ­ரு­கிறது.

கார­ணம் சிங்­கப்­பூர் மக்­கள் தடுப்­பூசி சாதனை நிகழ்த்தி இருக்­கி­றார்­கள். அவர்­க­ளி­டம் மீள்­திறன் அதி­க­மாக இருக்­கிறது. சீனா­வில் இருந்து இங்கு அதிக பய­ணி­கள் வரும் பட்­சத்­தில் தொற்று காரண­மாக இலே­சாக பாதிக்­கப்­ப­டு­வோ­ரின் எண்­ணிக்கை வேண்­டு­மா­னால் கூட­லாம்.

சிங்­கப்­பூர் அர­சாங்­கம் அனைத்­து­லக கிருமி பரி­ண­மிப்­பிற்கு ஏற்ப தன்­ அணு­கு­மு­றையை மாற்றி அமைத்துக்கொண்டு இருக்­கிறது.

சிங்­கப்­பூரர்­கள் கடந்த மூன்­றாண்­டு­களில் பல பாடங்­க­ளைக் கற்­று­கொண்டு இருக்­கி­றார்­கள்.

கிருமி எந்த அள­வில் மீண்­டும் எப்படி தலை­தூக்­கினா­லும் எந்த அள­வுக்கு அது மிரட்­ட­லாக உரு­வெ­டுத்­தா­லும் அதை உட­ன­டி­யா­கச் சமா­ளித்து வெற்­றி­பெற ஒரே சமூ­க­மாக விவே­க­மாக சிங்­கப்­பூ­ரர்­கள் எப்­போ­தும் ஆயத்­த­மாக இருக்க வேண்­டும். இருப்பார்கள் என்பதே நம்பிக்கை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!