இன்னமும் நிச்சயமில்லாத சூழலில்தான் பொருளியல் நிலவரங்கள்

பொரு­ளி­ய­லைப் பொறுத்­த­வரை, இந்த ஆண்­டில் எதை­யும் கணித்துக் கூற இய­லா­த­படி நிச்­ச­ய­மில்­லாத ஒரு நிலையே தொட­ரும்போல் தெரி­கிறது. ஒரு பக்­கம் சாத­க­மான நில­வ­ரங்­கள், மறு­பக்­கம் பாத­க­மான சூழல்­கள். எல்­லா­வற்­றை­யும் எடை­போட்டு சீர்­தூக்­கிப் பார்த்து முடி­வுக்கு வரும்­போது இப்படித்தான் கருத முடிகிறது.

பண­வீக்­கம் இறங்­கத் தொடங்கி இருக்­கிறது; அமெ­ரிக்காவில் வேலைச் சந்தை மீள்­தி­ற­னு­டன் திகழ்­கிறது; ஐரோப்­பிய ஒன்­றி­யமோ கடும் மந்தத்­தில் சிக்­கா­மல் தப்­பி­வி­டக்­கூ­டும் என்று தெரிகிறது;

கொரோனா கிரு­மியை அறவே இல்­லா­மல் ஒழித்­துக்கட்­டப்­போ­வ­தாக சூளு­ரைத்து, பூஜ்­ஜிய கொரோனா கொள்­கை­யைக் கடைப்­பி­டித்து­வந்த சீனா, அது முடியா­மல் போனதால் அந்­தக் கொள்கையைக் கைவிட்டுள்ளது. அதன் விளை­வாக அந்த நாட்டின் பொருளி­யல் வளர்ச்சி சூடு­பி­டிக்­கும் சாத்தியங்கள் தெரி­கின்­றன;

சுவிட்­சர்­லாந்­தில் டாவோஸ் நக­ரில் நடந்த உலகப் பொரு­ளி­யல் அரங்­க அமைப்­பின் கூட்­டத்­தில் பேசிய அனைத்­து­லக பண நிதி­யத்­தின் நிர்­வாக இயக்­கு­ந­ரான கீதா கோபி­நாத், இந்த மாதப் பிற்­ப­கு­தி­யில் தனது நிதி­யம் அதன் பொரு­ளி­யல் மதிப்­பீ­டு­களை உயர்த்­தப்­போ­வ­தாக கோடி­காட்டி இருக்­கி­றார். இதை வைத்­துப் பார்க்­கை­யில் இந்த ஆண்­டின் பிற்­பா­தி­யில் பொருளி­யல் மேம்­படும் என்று எதிர்­பார்க்க இடம் உண்டு. இவை எல்­லாம் சாதக­மான அம்­சங்­க­ளாக இருக்­கின்­றன.

மறு பக்­கத்­தைப் பார்க்­கும்­போது நில­வ­ரங்­கள் வேறு வித­மாகத் தென்­ப­டு­கின்­றன.

உலகப் பொரு­ளி­யல் வாய்ப்புகள் என்ற தனது அறிக்­கையை உலக வங்கி இந்த மாதத் தொடக்கத்தில் வெளி­யிட்­டது. முன்­னே­றிய நாடு­களில் வளர்ச்சி குறை­யும் என்­றும் அந்த அளவுக்கு இருக்­காது என்­றா­லும் வள­ரும் நாடு­கள், தலையெடுக்­கும் நாடு­க­ளின் வளர்ச்­சி­யும் இறங்­கும் என்றும் உலக வங்கி தெரி­வித்­தது.

இது ஒரு­பு­றம் இருக்­கட்­டும்; நாண­யக் கொள்கை தொடர்ந்து இறுக்­கும் சூழல்; உக்­ரேன் போர்; அமெ­ரிக்கா, ஐரோப்­பிய ஒன்­றி­யம், ஜப்­பான் ஆகியவற்றின் பொரு­ளி­யல் பல­வீ­ன­மாக இருந்­து­வ­ரும் நிலை; உல­கின் பல நாடு­கள் சுமக்கும் கடு­மை­யான கடன் சுமை எல்­லாம்­ பா­தக அம்­சங்­க­ளாக இருக்­கின்­றன.

சீனா தன்­னு­டைய கொரோனா கட்­டுப்­பாடு­களைத் தளர்த்­து­வ­தால், தாராள பொருளியல் கொள்­கை­களை நடை­மு­றைப்­படுத்துவதால் அதன் வளர்ச்சி சூடு­பி­டிக்­கும்.

என்­றா­லும்­கூட, அந்த நாட்­டில் தொற்று நில­வரத்தின் போக்கு, அதன் கார­ண­மாக விதிக்­கப்­படும் கட்­டுப்­பாடு­கள் எல்­லாம் எந்த அள­வுக்கு இருக்­கும் என்­பதைப் பொறுத்தே அதன் வளர்ச்சி ஏற்ற இறக்­க­மா­ன­தாக இருப்­ப­தற்­கான வாய்ப்­பும் உண்டு.

இவை ஒரு­பு­றம் இருக்க, உள்­ளூர் நில­வ­ரங்­கள், வட்­டார நில­வ­ரங்­க­ளைப் பார்க்­கை­யில் பாத­க­மான அம்­சங்­கள் பல­வும் தென்­ப­டு­கின்­றன.

சிங்­கப்­பூ­ரின் முக்­கி­ய­மான ஏற்­று­மதிகளில் மின்­ன­ணுப் பொருள்­கள் குறிப்­பி­டத்­தக்­கவை. அவை உட்­பட சிங்­கப்­பூ­ரின் ஏற்­று­ம­தி­கள் சென்ற ஆண்டின் கடைசிக் காலாண்­டில் சுருங்கிவிட்டன.

எண்­ணெய் சாராத உள்நாட்டு ஏற்­று­ம­தி­கள் சென்ற ஆண்டு முழு­மைக்­குமே வெறும் 3%தான் கூடியது. இந்த அளவு, அதி­கா­ரத்­துவ மதிப்­பீட்­டில் பாதி­தான் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

மொத்த பண்­டக வர்த்­த­கம், எண்­ணெய் சாராத உள்­நாட்டு ஏற்­று­ம­தி­கள் வளர்ச்சி இந்த ஆண்­டில் முறையே பூஜ்­ஜி­யத்­திற்­குக் கீழே 2% அள­வுக்­கும் பூஜ்­ஜி­யம் அள­வுக்­கும் குறைந்து விடும் என்று எண்­டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூர் அமைப்பு கணித்துள்ளது. சிங்­கப்­பூ­ரின் மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யில் உற்­பத்­தித்­துறை சுமார் கால்­பங்­குக்­குப் பொறுப்­பாக இருக்­கிறது. இந்­தத் துறை ஏற்­கெ­னவே மந்தத்­தில் இருப்பதாக பொரு­ளி­யல் வல்லுநர்­கள் சிலர் கணிக்­கி­றார்­கள்.

சீனா எல்­லை­க­ளைத் திறக்­கிறது. இதன் கார­ண­மாக அந்த நாட்­டி­னர் வெளி­நா­டு­க­ளுக்கு அதி­கம் பய­ணம் செய்­வார்­கள். அதே வேளை­யில், அதி­கம் பேர் சீனா­வுக்­கும் சொல்­வார்­கள்.

இத­னால் விமா­னப் போக்­கு­வ­ரத்து, சுற்­று­லாத் துறை­கள் சூடு­பி­டிக்­கும். இருந்­தா­லும், இந்­தச் சாதக நில­வ­ரம் படிப்­ப­டி­யாகவே அதி­க­ரிப்­ப­தாகத்தான் இருக்­கும். இந்த ஆண்­டின் பிற்­பாதியில்­தான் சாதக அம்­சங்­கள் தலையெடுக்கும் என்று எதிர்­பார்க்­கப்­படு­கிறது. சீனா நீங்­க­லாக இதர நாடு­களில் தேவை­கள் குறைவாகவே இருக்­கக்­கூ­டும். முன்னே­றிய நாடு­க­ளுக்­கான ஏற்­று­மதி­கள் குறை­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

மொத்­தத்­தில் எல்­லா­வற்­றையும் எடைபோட்டுப் பார்க்­கை­யில், இந்­தப் பாத­கங்­கள் எல்­லாம், சுற்றுலா, பய­ணத் துறை­யில் இடம்­பெ­றக்­கூ­டிய சாத­கங்­க­ளை­விட அதி­க­மா­கவே இருக்­கும் என்று உலக வங்கி எச்­ச­ரித்து உள்­ளது.

இத்தகைய ஒரு சூழலில், நம்பிக்கை தரக்கூடிய அம்சங்களும் தலைகாட்டி இருக்கின்றன.

நாணயக் கொள்கைகள் இறுக்கப்படுவது முன்னதாகவே முடிவுக்கு வந்துவிடும்; சீனாவில் எதிர்பார்க்கப்பட்டதைவிட வலுவான வளர்ச்சி ஏற்படும்; பெரிய பொருளியல் நாடுகள் மந்தத்தில் இருந்து தப்பிவிடும் என்றெல்லாம் கணிக்கப்பட்டு இருக்கின்றன.

உலக நில­வ­ரங்­கள், வட்டார நில­வ­ரங்­கள் உள்ளூர் நில­வ­ரங்­கள் எல்­லா­வற்­றை­யும் அடிப்­படையாக வைத்து, இந்த ஆண்­டில் 0.5% முதல் 2.5% வரை வளர்ச்சி இருக்கும் என்று சிங்­கப்­பூர் அர­சாங்­கம் கணித்து உள்­ளது.

இப்­போ­தைக்கு இதை மாற்­ற­வேண்­டிய தேவை இருப்­ப­தா­கத் தெரி­ய­வில்லை. மொத்தமாக பொருளியலைப் பொறுத்தவரை இந்த ஆண்டில் இப்போதுவரை நிச்சயமில்லாத ஒரு நிலவரம்தான் கண்ணுக்கும் கணிப்பிற்கும் தென்படுகிறது.

போகப்போக நிலவரங்கள் சாதகமாகத் திரும்பும். பொருளியல் சூடுபிடிக்கும் என்பதே நம்பிக்கையாக இருக்கிறது.

முரசொலி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!