‘பிறர் மனதைக் காயப்படுத்துவது நோக்கமல்ல’

மோகன்.ஜி தயா­ரித்து இயக்­கி­யுள்ள படம் 'ருத்ர தாண்­ட­வம்'. நடிகை ஷாலி­னி­யின் சகோ­த­ரர் ரிச்­சர்ட், கெள­தம் மேனன், தர்ஷா குப்தா, ராதா­ரவி உள்­ளிட்ட பலர் நடித்­துள்­ள­னர்.

எதிர்­வ­ரும் அக்­டோ­பர் 1ஆம் தேதி திரை­ய­ரங்­கு­களில் வெளி­யா­கும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில் இப்­ப­டக்­கு­ழு­வி­னர் சென்­னை­யில் செய்­தி­யா­ளர்­களை சந்­தித்­த­னர். அப்­போது பேசிய இயக்­கு­நர் மோகன்ஜி, யார் மன­தை­யும் காயப்­ப­டுத்­தும் நோக்­கம் தமக்கு இல்லை என்­றும் உண்­மைச் சம்­பவத்­தின் அடிப்­ப­டை­யி­லேயே இந்­தப் படத்தை உரு­வாக்­கி­ய­தா­க­வும் விளக்­கம் அளித்­தார்.

இவ­ரது முதல் பட­மான 'திரௌ­பதி' சில சர்ச்­சை­களை ஏற்­ப­டுத்­தி­யது. அத­னால் இரண்­டா­வது படம் குறித்­தும் எதிர்­பார்ப்பு நில­வு­கிறது.

"கிறிஸ்­து­வப் பாதி­ரி­யார் ஒரு­வர் சொன்ன கதை­தான் பட­மாகி உள்­ளது.

'திரௌ­பதி' படத்­தைப் பார்த்­து­விட்டு என் துணிச்­ச­லைப் பாராட்­டு­வ­தா­கச் சொன்­னார்.

அவர் கூறிய கதை திரைப்­ப­ட­மாக எடுக்­கப்­பட்­டால், திரு­நெல்­வேலி, கன்­னி­யா­கு­மரி, தூத்­துக்­குடி ஆகிய தமி­ழ­கக் கட­லோர மாவட்­டங்­களில் பெரிய தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும் என்­றும் மக்­கள் மத்­தி­யில் சில விவ­கா­ரங்­கள் தொடர்­பான விழிப்­பு­ணர்­வும் ஏற்­படும் என்­றும் கூறி­னார். இது­தான் 'ருத்ர தாண்­ட­வம்' உரு­வான கதை," என்­றார் மோகன் ஜி.

'திரௌபதி' படத்தில் நடித்த வகையில் நாயகன் ரிச்சர்ட் தமக்கு நெருங்கிய நண்பராகிவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், ரிச்சர்ட் போன்ற, இயக்குநருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும் நாயகன் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த வரம் என்றார்.

தமக்காக சம்பளம் வாங்காமல் நடித்ததாகவும் அதற்காக ரிச்சர்டுக்கு தாம் கடமைப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!