‘தூக்குதுரை’யின் கதை

முழு­நீள நகைச்­சு­வைப் பட­மாக உரு­வாகி வரு­கிறது ‘தூக்­கு­துரை’. டென்­னிஸ் மஞ்­சு­நாத் இயக்­கும் இப்­ப­டத்­தில் யோகி பாபு நாய­க­னாக நடிக்­கி­றார். நீண்ட இடை­வெ­ளிக்­குப் பிறகு மீண்­டும் கதா­நா­ய­கி­யாக நடிக்­கி­றார் இனியா.

ஏற்­கெ­னவே ‘ட்ரிப்’ என்ற படத்தை இயக்­கி­யுள்ள டென்­னிஸ் மஞ்சுநாத், மூன்று வெவ்­வேறு கால­கட்­டங்­களில் நடக்­கும் சம்­ப­வங்­க­ளின் தொகுப்­பாக தனது அடுத்த படத்தை இயக்கி உள்­ளா­ராம்.

“பொது­வாக தமி­ழ­கத்­தில் உள்ள சில கிரா­மங்­களில் சிறு, குறு­நில மன்­னர்­க­ளு­டைய வகை­ய­றாக்­கள் இன்­ற­ளவும் வாழ்ந்து வரு­கி­றார்­கள். ஒரு காலத்­தில் ஆட்சி பீடத்­தில் அமர்ந்­தி­ருந்­த­வர்­கள் இன்று எந்­த­வி­த­மான வசதியும் இல்­லா­மல், பொது மக்­களில் ஒரு­வ­ராக வலம் வரு­கி­றார்­கள். எல்­லா­ரை­யும் மாமன், மச்­சான் என்று குறிப்­பிட்டு, எந்­த­வித பந்­தா­வும் இன்றி பேசிப் பழ­கு­வ­தை­யும் பார்த்­தி­ருப்­போம்.

“என்­ன­தான் பட்­டம், பதவி, வசதி இல்லை என்­றா­லும் கோவில் திரு­விழா, முக்­கி­ய­மான நிகழ்ச்­சி­கள் என்று வந்­து­விட்­டால் போதும், இந்த மன்­னன் வகை­ய­றாக்­க­ளுக்­குத்­தான் முதல் மரி­யாதை கிடைக்­கும். அந்­தக் குடும்­பத்­தில் யாரா­வது ஒரு­வ­ருக்கு இந்த மரி­யாதை செலுத்­தப்­படும்.

“எனவே ‘மன்­னர்’ என்ற தலைப்­பைத்­தான் முத­லில் தேர்வு செய்­தோம். ஆனால் ‘மாமன்­னன்’ என்ற பெய­ரில் ஏற்­கெ­னவே ஒரு படம் உரு­வாகி வரு­வ­தால் அதைக் கைவிட்­டோம்.

“முன்­பெல்­லாம் மன்­னர்­களை துரை என்­றும் குறிப்­பிடு­வ­துண்டு. தனக்­கான மரியாதையைத் தூக்­கும் துரைதான் இந்த ‘தூக்­கு­துரை’,” என்று விளக்­கம் அளிக்­கி­றார் இயக்­கு­நர் டென்­னிஸ் மஞ்சுநாத்.

கதா­நா­யகி இனி­யா­வுக்கு துணிச்­சல் மிகுந்த இளம்­பெண் கதா­பாத்­தி­ர­மாம். அதன் தன்­மையை நன்கு உள்­வாங்­கிக்­கொண்டு சிறப்­பாக நடித்­துள்­ள­தா­கச் சொல்­கி­றார் இயக்­கு­நர்.

‘வாகை சூடவா’ படத்­தில் நடித்த இனி­யா­வுக்கு விரு­து­களும் பாராட்டு­களும் குறை­வின்­றிக் கிடைத்­தன. சில நல்ல படங்­கள் அமைந்­த­போதி­லும் இன்­று­வரை பெரிய வெற்­றிப் படத்­தில் நடித்­த­தில்லை என்ற மனக்­குறை உள்­ள­தா­கச் சொல்­கிறார்.

“இடை­யில் வாய்ப்­பு­கள் கிடைக்­க­வில்லை என்­பது உண்­மை­தான். அத­னால்­தான் தொலைக்­காட்­சித் தொட­ரி­லும் நடிக்க முடி­வெ­டுத்­தேன். எனி­னும் ‘கண்­ணான கண்ணே’ என்ற தொட­ரில் கௌரவ வேடத்­தில் நடித்­த­தோடு, மீண்­டும் சின்­னத்­திரை பக்­கம் போக­வில்லை.

“அண்­மை­யில் வெளி­யான ‘விலங்கு’ இணை­யத் தொட­ரில் நடி­கர் விம­லின் மனை­வி­யாக நடித்­த­தற்கு நல்ல பாராட்­டு­கள் கிடைத்­தன. இப்­போது இணை­யத் தொடர்­க­ளி­லும் கவ­னம் செலுத்தி வரு­கி­றேன்,” என்­கி­றார் இனியா.

இதற்­கி­டையே சமூக ஊட­கங்­களில் வெளி­யான இவ­ரது கவர்ச்­சிப் படங்­க­ளுக்கு நல்ல வர­வேற்பு கிடைத்­துள்­ளது. இத­னால் ‘இனியா கவர்ச்­சிப் பாதைக்குத் திரும்­பி­விட்­டார்’ என்று சில ஊட­கங்­கள் செய்தி வெளி­யிட்­டன. அதை அறவே மறுக்­கி­றார் இனியா.

“தற்­போது நடித்து வரும் ‘தூக்­கு­துரை’ படத்­துக்கு எந்த வகை­யி­லும் கவர்ச்சி தேவைப்­ப­டாது. இது முழுக்க நகைச்­சு­வைப் படம். எனக்­கான கதா­பாத்­தி­ரம் அழ­காக வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ள­தால் மன­நி­றை­வு­டன் நடிக்­கி­றேன்.

“இதே­போல் அறி­முக இயக்­கு­நர் அஜய் கிருஷ்­ணா­வின் ‘காப்பி’ படத்­தி­லும் நான் கவர்ச்சி நாய­கி­யாக நடிக்­க­வில்லை. ஆனால் ஒரு­சி­லர் தொடர்ந்து கவர்ச்சி நாயகி என எனக்கு முத்­திரை குத்­தப் பார்க்­கி­றார்­கள்,” என்று ஆதங்­கப்­ப­டு­கிறார் இனியா.

‘தூக்­கு­துரை’ என்ன மாதி­ரி­யான படம்?

“பொது­வாக அடி­தடி, காதல் படங்­க­ளுக்­கான கதைக்­களத்தை எளி­தில் விவ­ரித்­து­வி­ட­லாம். வர­லாற்­றுப் பின்­னணி கொண்ட படங்­களை உருவாக்கு­வது சவா­லான பணி. அதேபோல் நகைச்­சுவைப் படங்­களை இயக்கு­வ­தும் பெரும் சவால் என்­பேன். அந்த வகை­யில், இயக்­கு­நர் டென்­னிஸ் கடு­மை­யாக உழைத்து இந்­தப் படத்தை உரு­வாக்கி உள்­ளார்,” என்­கிறார் இனியா.

‘தூக்­கு­துரை’ படத்­தில் மொட்­டை­ராஜேந்­தி­ரன, மகேஷ், பால­ச­ர­வ­ணன், சென்­றா­யன், ‘கும்கி’ அஷ்­வின் என பெரிய நடிப்­புப் பட்­டா­ளத்­தையே கள­மி­றக்கி உள்­ள­னர்.

“குடும்­ப­மா­கச் சென்று ஒரு கிரா­மத்து திரு­வி­ழா­வுக்குச் சென்று திரும்­பி­னால் எப்­படி இருக்­கும். அப்­ப­டிப்­பட்ட அனு­ப­வத்தை இந்­தப் படம் கொடுக்­கும்,” என்­கி­றார் இயக்­கு­நர் டென்­னிஸ் மஞ்சுநாத்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!