பிரியாவுக்கு முக்கியத்துவம் அளிக்கச் சொன்ன கமல்

தற்போது தமிழ் சினிமாவில் பிரியாவின் காட்டில்தான் வாய்ப்பு மழை பெய்து கொண்டிருக்கிறது.

தெலுங்கிலும் சில படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார். அங்கு கோபிசந்த், சத்யதேவ் ஆகியோரின் படங்களில் நடித்து வருகிறார். இதில் சத்யதேவுடன் நடித்த ‘ஸீப்ரா’ அடுத்த மாதம் திரைக்கு வருகிறது.

இதற்கிடையே, ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகம் வேகமாக வளர்ந்து வருகிறது. இதில் நடிக்கும் பிரியா பவானி சங்கரின் கதாபாத்திரம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. முதல் பாகத்தில் கஸ்தூரி ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் சாயலில் அமைந்துள்ளதாம் பிரியாவின் பாத்திரம்.

தொடக்கத்தில் அதிக முக்கியத்துவம் இன்றி அமைக்கப்பட்டிருந்த இந்தக் கதாபாத்திரத்தை மேலும் மெருகேற்றுமாறு இயக்குநர் சங்கரிடம் கமல் கூறியுள்ளார்.

அதற்கு பிரியாவின் நடிப்புதான் காரணம் என்றும் கமல் சொன்னதில் உள்ள நியாயத்தைப் புரிந்துகொண்டு சங்கரும் சம்மதம் தெரிவித்தாராம்.

ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதுப் படத்திலும் பிரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகி உள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!