கமல் படத்தில் துல்கர், ஜெயம் ரவி

நடிகர் கமல்ஹாசனின் 234வது படம் தொடர்பான தகவல்கள் தொடர்ந்து வெளியாகிவருகிறது.

கமல்ஹாசன் நடிக்கும் 234வது படத்தை மணிரத்னம் இயக்க உள்ளார். ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கான நடிகர், நடிகையர் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்றுவருகிறது.

மிகப்பெரும் பொருட்செலவில் இப்படம் தயாராகும் என்று அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இப்படத்தில் நடிக்க ஜெயம் ரவி, திரிஷா, துல்கர் சல்மான் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் படத் தயாரிப்பு குழுவிடம் இருந்து அதிகாரபூர்வத் தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

துல்கர் நடிப்பில் வெளியான ‘சீதாராமம்’ நேரடியாக ஓடிடியில் வெளியானாலும் அப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

அவரின் அண்மையில் நடித்த ஹீரியே இந்தி பாடல், இந்தியா முழுவதும் பிரபலமானது.

மலையாளம், இந்தி, தெலுங்கு என பல மொழி நடிகராகவும் துல்கர் சல்மான் தம்மை மாற்றிக்கொண்டதால் அவரின் பங்கு கமல் படத்தில் அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதற்கு முன்னர் மணிரத்னம் இயக்கிய ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் துல்கர் கதாநாயகனாக நடித்துள்ளார்.

கமலின் மிகப்பெரும் வெற்றிப்படமான விக்ரம் படத்தில் பல முன்னணி கதாநாயகர்கள் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

அதேபோல் இயக்குநர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்திலும் பல முன்னணி நடிகர்கள் இருந்தார்கள்.

அதனால் தமது 234வது படத்திலும் அதே பாணியைப் பின்பற்ற கமலும் மணிரத்னமும் முடிவெடுத்ததாகக் கூறப்படுகிறது.

எனவே இந்த மாதமே படத்தின் அறிவிப்பு தொடர்பான டீசர் படமாக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. 234வது படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது கமல்ஹாசனின் இந்தியன்-2 படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அது இன்னும் சில மாதங்களில் வெளிவரவுள்ளது.

இந்தியன்-2 படத்திலும் சித்தார்த், எஸ் ஜே சூர்யா, சமுத்திரகனி என பல நடிகர்கள் உள்ளனர்.

இந்தியன்-2 அடுத்து கமல்ஹாசன், வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இது, அவரது 233வது படம் ஆகும்.

இதனை கமல்ஹாசனின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பதாக ஏற்கெனவே அறிவிப்பு வெளியானது

இந்தப் படத்திற்காக துப்பாக்கி சுடும் பயிற்சியில் அண்மை காலமாக கமல்ஹாசன் ஈடுபட்டு வருகிறார்.

இது, விவசாயம் சம்பந்தப்பட்ட படம் என்று முன்பு கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இது ராணுவ பின்னணியில் நடக்கும் கதைக்களம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதில் ராணுவ வீரராக கமல் நடிப்பதாகவும் இதற்கான பயிற்சிகளை கமல்ஹாசன் இப்போது மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு இடையில் பிக்பாஸ் 7வது தொடரைத் தொகுத்து வழங்கவுள்ளார் கமல்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!