மெஹ்ரீன்: என் மனநிலை இன்னும் மாறவில்லை

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திரையுலகில் அறிமுகமானபோது பெரிய எதிர்பார்ப்புகள் இல்லை. எனினும், இந்தப் பயணத்தின்போது 24 படங்களில் நடித்து முடித்திருப்பது மனநிறைவு அளிக்கிறது என்கிறார் இளம் நாயகி மெஹ்ரீன் பிர்சாடா.

கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான ‘ஃபில்லௌரி’ இந்திப் படம்தான் இந்தியத் திரையுலகில் இவரது அறிமுகப்படம். தமிழில் ‘பட்டாஸ்’ படத்தில் நடித்திருப்பவர் தற்போது வசந்த் ரவியுடன் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் இரு படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார்.

“திரையுலகுக்கான கதவுகளை திறந்துவிட்டது இந்திப் படம் என்றாலும் தென்னிந்திய மொழிகளில்தான் எனக்கு அதிக வரவேற்பு உள்ளது என்பதை அறிவேன். தெலுங்கில் அதிக படங்களில் நடித்துவிட்டேன். எனவே இந்த ஆண்டு தமிழில் கூடுதல் கவனம் செலுத்த விரும்புகிறேன்,” என்று சொல்லும் மெஹ்ரீன், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியில் ‘சுல்தான் ‘ஆஃப் டெல்லி’ என்ற இணையத் தொடரில் நடித்து முடித்துள்ளார்.

மேலும் தமிழிலும் தெலுங்கிலும் ஒருசேர உருவாகும் ‘ஸ்பார்க்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இ்ந்நிலையில், அண்மைய பேட்டியில் தனது எதிர்காலத் திட்டங்கள், பட வாய்ப்புகள் குறித்து விவரித்துள்ளார் மெஹ்ரீன்.

அவற்றுள் நடிகை மதுபாலாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நாயகியாக நடிக்க வேண்டும் என்பதுதான் முதன்மையானதாம்.

ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான திறமை தம்மிடம் இருப்பதாக கருதும் பட்சத்தில் அந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ள இவர், மதுபாலா கதாபாத்திரத்தில் தம்மால் சிறப்பான நடிப்பை வழங்க முடியும் என உறுதியாகக நம்புகிறாராம்.

“நான் பழம்பெரும் இந்தி நடிகை மதுபாலாவின் தீவிர ரசிகை. என்னுடைய கைப்பேசியில் எனது படங்களைவிட அவரது படங்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கும். கடந்த சில ஆண்டுகளில் மட்டும் அவரது நூற்றுக்கணக்கான புகைப்படங்களைச் சேகரித்து வைத்துள்ளேன்.

“சில கோணங்களில் நான் அவரைப் போன்ற சாயலில் இருப்பதாகப் பலரும் கூறியுள்ளனர். அவரது கதாபாத்திரத்தை உள்வாங்குவதில் எனக்கு அதிக சிரமங்கள் இருக்காது. திரையிலும் நிஜத்திலும் அவரது ஒவ்வொரு அசைவையும் நான் மிக உன்னிப்பாகக் கவனித்து வந்துள்ளேன்.

“முப்பது வயதுக்குள் இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் நடிகை என்று பெயரெடுத்தவர். அழகாலும் திறமையாலும் ரசிகர்களைக் கட்டிப்போட்டவர். மதுபாலாவின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் படத்தில் நடிப்பது எனது பெருங்கனவுகளில் ஒன்று,” என்று மனம்நிறைந்த எதிர்பார்ப்புடன் பேசுகிறார் மெஹ்ரீன்.

மதுபாலாவின் வாழ்க்கையை மையமாக வைத்து ஒரு படத்தை உருவாக்குவதற்கான முயற்சி கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வருகிறது. எனினும் அதில் மெஹ்ரீன் நடிப்பதாக அதிகாரபூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.

எந்தவொரு பட வாய்ப்பும் எளிதில் கிடைத்துவிடாது என்பதை தாம் நன்கு உணர்ந்துள்ளதாகக் குறிப்பிடும் மெஹ்ரீன், தமது பட வாய்ப்புக்காக மெனக்கெட்டதை பேட்டியில் விவரித்துள்ளார்.

“கதாநாயகிக்கான நடிப்புத் தேர்வு நடைபெறுவதைக் கேள்விப்பட்டு நானும் விண்ணப்பித்தேன். நேரில் வரச்சொல்லி விவரங்களைக் கேட்டறிந்த பின்னர் இரண்டரை நாள்களுக்கு அத்தேர்வு நடைமுறைகள் நீடித்தன. ஒப்பனை, நடிப்பு, உடல்மொழி என்று பலவிதமான சோதனைகளுக்குப் பிறகே என்னைத் தேர்வு செய்தனர்.

“அன்று எத்தகைய மனநிலையில் இருந்தேனோ, அப்படித்தான் இப்போதும் உள்ளேன். ஒவ்வொரு படத்தையும் எனது அறிமுகப் படமாகவே கருதி அதிகம் உழைக்கிறேன்.

“எனது தோற்றம், கவர்ச்சி, நிறம் ஆகியவை எனக்கான முதல் வாய்ப்பைப் பெற்றுத் தரவில்லை. நடிப்புத் திறமையே இதுவரை எனக்கு உரிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்துள்ளது. தென்னிந்திய மொழிகளில் சினிமாத்துறை மீது நமக்குள்ள ஈடுபாட்டை கவனித்து அதற்கேற்ப வரவேற்பு அளித்து ஆதரிக்கிறார்கள். மொழி வேறுபாடுகளைக் கடந்து பாராட்டி ஊக்கம் அளிக்கிறார்கள்.

“அந்த வகையில் தொடக்கத்தில் என்னை அரவணைத்து வாய்ப்பளித்த தெலுங்கு திரையுலகத்தினருக்கு நன்றி. தமிழில் நான் நடித்து வரும் படங்கள் அடுத்தடுத்து வெளியாகும்,”என்கிறார் மெஹ்ரீன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!