கமலுக்காக ஒன்றிணைந்த திரைப் பிரபலங்கள்

கமல்ஹாசன் நடித்து முடித்திருக்கும் ‘இந்தியன் 2’ படத்தின் அறிமுகக் காணொளியை பல மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிட்டார்கள்.

கமல் நடிப்பில் கடைசியாக ‘விக்ரம்’ படம் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இப்படம் வசூலில் சாதனை செய்தது. இப்படத்தினை தொடர்ந்து புதிய படம் எதிலும் ஒப்பந்தம் ஆகாத கமல் ஏற்கெனவே துவங்கப்பட்ட ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்கத் தொடங்கினார். பிரமாண்ட இயக்குநர் சங்கரின் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ளது இப்படம்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக இதன் படப்பிடிப்பு துவங்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த விபத்து, கொரோனா உள்ளிட்ட காரணங்களால் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு தடைப்பட்டது.

இதனையடுத்து நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு மீண்டும் துவங்கப்பட்டது. லைகா நிறுவனத்தின் தொடர் முயற்சிக்கு பின்னர் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஒரு வழியாக துவங்கியது.

ஒருபக்கம் தெலுங்கில் ராம்சரண் நடிப்பில் ‘கேம் சேஞ்சர்’, மற்றொரு பக்கம் ‘இந்தியன் 2’ படம் என ஒரே சமயத்தில் இரண்டு படங்களையும் இயக்கி வந்தார் சங்கர்.

கடந்த சில மாதங்களாகவே இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வந்த நிலையில், அண்மையில் இதன் படப்பிடிப்பை முழுவதுமாக நிறைவு செய்தார் கமல். இதனையடுத்து அண்மையில் இப்படத்திற்கான குரல் பதிவு வேலைகளில் இறங்கி, தற்பொழுது படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

இப்படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், பாபி சிம்ஹா உள்ளிட்ட ஏகப்பட்ட திரைக்கலைஞர்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில் ‘இந்தியன் 2’ படத்தின் அறிமுகக் காணொளி வெளியானது. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியிட்டனர்.

அதன்படி தமிழ் பதிப்பை, நடிகர் கமலின் நெருங்கிய நண்பரும் தமிழ்த் திரையின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த் நேற்று மாலை 5:30 மணியளவில் வெளியிட்டார்.

தெலுங்குப் பதிப்பை பிரமாண்ட இயக்குநர் ராஜமவுலி, இந்தி பதிப்பை நடிகர் அமீர்கான், கன்னட பதிப்பை கிச்சா சுதீப், மலையாள பதிப்பை மோகன்லால் ஆகியோர் ஒரே நேரத்தில் வெளியிட்டனர்.

இதற்கான அறிவிப்பை தனித்தனி சுவரொட்டிகளுடன் அறிவித்துள்ளனர். அந்த சுவரொட்டிகளின் பின்னணியில் உள்ள பிரபலங்கள் 90 காலக்கட்டத்தில் எப்படி இருந்தார்களோ அந்தப் படத்தைப் போட்டு வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் அறிமுக காணொளியில் “எங்கு தப்பு நடந்தாலும் கண்டிப்பா நான் வருவேன்” போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ள இந்த காணொளியை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

‘இந்தியன்’ படத்தின் முதல்பாகம் 1996ல் வெளியானது. தற்போது இரண்டாம் பாகம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகி வருகிறது. அதைக் குறிக்கும் வகையில் சுவரொட்டிகளில் 96, 23 என குறிப்பிட்டுள்ளனர் படக்குழுவினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!