வேற்றுக்கிரகவாசியுடன் இணைந்து செயல்படும் சிவா

‘அயலான்’ படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வந்த நிலையில் படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

இது வேற்றுக்கிரகவாசிகளை மையப்படுத்தி உருவாகும் படம் என்ற தகவல் முன்பே வெளியாகி இருந்தது. தற்போது படம் குறித்த சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார் இயக்குநர் ரவிக்குமார். இவர் ஏற்கெனவே ‘இன்று நேற்று நாளை’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தவர்.

வேற்றுக்கிரகவாசி திடீரென நம் வாழ்க்கைக்குள் வந்தால் எப்படி இருக்கும் என்பதுதான் ‘அயலான்’ படத்தின் கதை.

வேற்றுக்கிரகவாசி பூமிக்கு ஏன் வர வேண்டும்? எப்படி வர முடிந்தது, அதுவும் மனிதனைப் போன்று ஓர் உயிர் என்பதால் அந்த வேற்றுக்கிரகவாசி என்னவெல்லாம் பேசுகிறான், எப்படி நடந்துகொள்கிறான். அதனால் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்கிற கோணத்தில் கதை நகருமாம்.

“நிறைய ஆங்கிலப் படங்களின் வேற்றுக்கிரகவாசி குறித்து விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பார்த்து இந்தப் படத்தை உருவாக்கவில்லை. ஏனோதானோ என்ற அனுமானத்துடன் செயல்பட முடியாது. இதுபோன்ற கதைகளைத் திட்டமிட்டு எடுக்க வேண்டும். தொழில்நுட்ப ரீதியில் பல நுணுக்கமான அம்சங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

“இப்படி அனைத்தும் சரியாக அமைந்தால்தான் செயற்கைத்தனம் இல்லாத படத்தைக் கொடுக்க இயலும்,” என்கிறார் இயக்குநர் ரவிக்குமார்.

இந்தப் படத்தில் இயற்கையை நேசிக்கும் உன்னதமான இளையர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சிவா. இந்த உலகம் அனைத்து உயிர்களுக்குமானது என்பதை நிஜ வாழ்க்கையிலும் அவர் கடைப்பிடிக்கிறார்.

“கதைப்படி கதாநாயகனிடம் உள்ள நல்ல பண்புகளின் காரணமாக வேற்றுக்கிரகவாசியும் சிவாவும் நல்ல நண்பர்களாக மாறிவிடுகிறார்கள். சக உயிர்களுக்கு ஆபத்தும் அழிவும் ஏற்படும்போது அதை தடுப்பதற்குத் துணிவு தேவை. இதற்காக களம் இறங்குபவர்கள் கதாநாயகர்கள் ஆகி விடுகின்றனர். அப்படிப்பட்ட ஒரு நாயகனாக திரையில் வலம் வருவார் சிவா.

“பருவநிலை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் இளம்பெண்ணாக வரும் ரகுல் ப்ரீத் சிங் இயல்பாக நடித்துள்ளார். யோகிபாபு, கருணாகரன், கோதண்டம் ஆகியோர் தங்கள் பங்களிப்பை நிறைவாக அளித்துள்ளனர்.

“சிவகார்த்திகேயனின் தாயாக பானுப்பிரியா நடிக்க, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இஷா கோபிகர் தமிழில் நடித்துள்ளார். இவர்களைத் தவிர இங்கிலாந்தைச் சேர்ந்த டேவிட் என்பவரும் நடித்துள்ளார்.

“நான் இயக்கிய ‘இன்று நேற்று நாளை’ வெளியான இரண்டாவது நாளே சிவகார்த்திகேயன் என்னைத் தொடர்புகொண்டு பேசினார். வேற்றுக்கிரகவாசியை உள்ளடக்கிய கதையை உடனடியாக அவரிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.

“நடிகர் கருணாகரன் மகளுடைய பிறந்தநாள் விழாவுக்கு சிவா வந்திருந்தபோது, அவரிடம் என் கதையை விவரிக்க விரும்புவதாகச் சொன்னேன். பிறகு அவரும் நேரம் ஒதுக்கி கதை கேட்டார்.

“முழுக்கக் கேட்டதும் ரொம்ப நன்றாக இருக்கிறது. மேலும் மெருகேற்றுங்கள். நாம் இணைந்து செயல்படலாம் என்றார். இப்படி ஆரம்பமானதுதான் ‘அயலான்’ படம். என் முதல் படத்தைவிட 25 மடங்கு அதிக செலவில் உருவாகி உள்ளது.

“இந்தப் படம் என்னுடைய எட்டு ஆண்டு கனவு. கடந்த 2018ஆம் ஆண்டிலேயே படப்பிடிப்பைத் தொடங்கிவிட்டோம். முதற்கட்ட படப்பிடிப்பிலேயே 50 விழுக்காடு காட்சிகளை எடுத்துவிட்டோம். அதன் பிறகு நாங்கள் திட்டமிட்டபடி சில விஷயங்கள் நடக்கவில்லை. தயாரிப்பாளருக்குச் சின்னச்சின்ன பிரச்சினைகள் இருந்தன. அனைத்தையும் கடந்து படத்தை முடித்துவிட இயலும் என்ற நம்பிக்கை இருந்தது.

“வயிற்றில் குழந்தை இருக்கும்போது, வேறென்ன யோசிக்கமுடியும்? பிரசவித்துதானே ஆக வேண்டும். அதற்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன். மீண்டும் 2019ஆம் ஆண்டு அடுத்தகட்ட படப்பிடிப்புக்குப் போனோம். ஆனால் மீண்டும் பட வேலைகள் நிலைகுத்தின.

“இந்தப் படத்தைக் கைவிட்டு வேறு படத்தை இயக்குமாறு சிலர் அறிவுறுத்தினர். எனக்கு அதில் உடன்பாடில்லை. இடையில் கொரோனா முடக்க நிலையும் வந்தது. கடைசி ஐம்பது நாள் படப்பிடிப்பை முடிக்க மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. எப்படியோ, எதிர்வரும் பொங்கல் சமயத்தில் ‘அயலான்’ வெளிவருவான்,” என்கிறார் இயக்குநர் ரவிக்குமார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!