தயாரிப்பாளர்: ‘அயலான்’ படம் பாகுபலியைப் போன்றது

தயாரிப்பாளர் பேசியதற்கு நான் பொறுப்பல்ல

‘அயலான்’ படத்தின் தயாரிப்பாளர் இசை வெளியீட்டின்போது படத்தைப் பற்றி பெருமையாகப் பேசியிருந்தார். அவர் பேசியதற்கு நான் பொறுப்பல்ல என்று நிகழ்ச்சியில் பேசியுள்ளார் சிவகார்த்திகேயன்.

‘அயலான்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மிகப் பெரிய அளவில் நடக்காமல் சென்னையில் உள்ள தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் குறைந்த எண்ணிக்கையிலான ரசிகர்களுடனே நடத்தப்பட்டது.

மாரி செல்வராஜ் உள்ளிட்ட சில பிரபலங்கள் மட்டுமே கலந்துகொண்டனர். ஏ.ஆர். ரஹ்மான், ரவிக்குமார் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் கோட்டபாடி ஜெயம் ராஜேஷ் பேசும்போது, “தெலுங்குக்கு ‘பாகுபலி’, கன்னடத்திற்கு ‘கேஜிஎஃப்’ போல தமிழுக்கு ‘அயலான்’ படம் இருக்கும் என்று பெருமையாகப் பேசினார்.

நிகழ்ச்சியின் இறுதியில் மேடை ஏறிப் பேசிய சிவகார்த்திகேயன், “இடம் சின்னதா இருந்தாலும் நம்ம சத்தம் பெருசா இருக்கும்,” என்று பேசி அங்கு வந்திருந்த ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

மேலும், “தயாரிப்பாளர் பேசியதற்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. படத்தைப் பற்றிய கருத்து அவருடையது. படம் மீதுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையில் அவர் அப்படி பேசியுள்ளார்.

“அயலான்’ படத்தில் பவுடர் ரத்தத்தை நம்பாமல் ஏலியனை நம்பி எடுத்திருக்கிறோம். நிச்சயமாக தமிழில் வெளியாக உள்ள ஒரு நல்ல படமாகவே ‘அயலான்’ இருக்கும்.

“இந்தப் படத்தின் விளம்பரத்தைவிட ஜனவரி 5ஆம் தேதி வெளியாகும் முன்னோட்டக் காட்சி மிகவும் பரபரப்பாக இருக்கும்,” என்றும் தன்னடக்கத்துடன் சிவகார்த்திகேயன் பேசினார்.

மேலும், “அவரை முந்தணும், இவரை முந்தணும் என்ற எந்தவொரு போட்டியும் எனக்கு இல்லை. தமிழ் சினிமாவுக்கு என்னால் முடிந்த நல்ல படங்களைக் கொடுக்க விரும்புகிறேன். ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தவேண்டும்,” என தனுஷுடனான ‘கேப்டன் மில்லர்’ - ‘அயலான்’ போட்டிக்கு மறைமுகமாக பதில் சொல்லி இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

முன்னதாக ‘அயலான்’ படம் பொங்கல் போட்டியில் இருந்து பின்வாங்கப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில், அதற்கு வாய்ப்பே கிடையாது என்பதையும் பல தடைகளைக் கடந்து பொங்கலுக்கு எந்தப் படம் வந்தாலும் ‘அயலான்’ படம் கண்டிப்பாக வெளியாகும் என்ற உறுதியை சிவகார்த்திகேயனின் பேச்சு கொடுத்துள்ளது என்றனர் படக்குழுவினர்.

காரணம் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் வாங்கி இருந்த பணத்தைத் திரும்ப கொடுக்கவில்லை என்றால் படத்தை வெளியிடக்கூடாது என்று நீதிமன்றம் கூறியதையடுத்து படம் வெளியாவது சந்தேகம்தான் என்று பலரும் கூறி வந்தனர்.

அதுபற்றி சிவகார்த்திகேயன் கூறுகையில், “சம்பளம் வேண்டுமா, ‘அயலான்’ படம் வெளியாக வேண்டுமா என்பதுதான் கேள்வியாக இருந்தது. இந்தப் படம் ஒரு தொலைநோக்குப் பார்வை. இந்த பட்ஜெட்டில், நம் ஊரில் இவ்வளவு பெரிய படத்தை உருவாக்க முடியும் என்று காட்டுவதற்காகத்தான் இப்படத்தை ஆரம்பித்தோம்.

“தமிழில் ஏன் இப்படி ஒரு படம் எடுக்க முடியாது? இதைத் தெரிந்துகொண்டால் இதைப்போல நிறைய படம் தொடர்ந்து வரும் என்ற நோக்கத்தில்தான் இதனை எடுத்தோம்.

“ஆனால் துரதிர்ஷ்டவசமாக தயாரிப்பாளருக்கு நிறைய சிக்கல்கள். இந்த தொலைநோக்குப் பார்வை நிறைவேற வேண்டும் என்றால், அதற்கு ஒரே வழி ‘எனக்கு சம்பளம் வேண்டாம். படத்தை எப்படியாவது வெளியிடுங்கள்’ என்று சொல்லிவிட்டேன்” என்று சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் இந்த நல்ல உள்ளத்தை படக்குழுவினரும் படத்தில் சம்பந்தப்பட்டவர்களும் பாராட்டி வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!