2023ல் தமிழ் சினிமாவின் மொத்த வருமானம் ரூ.3,500 கோடி

கடந்த 2023ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு உற்சாகமான ஆண்டாக மாறியிருக்கிறது. ஆண்டின் கடைசி வாரமான 29ஆம் தேதி வெளியான 11 படங்களையும் சேர்த்து கடந்த ஆண்டு 256 திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.

இதுவரை எந்த ஆண்டிலும் இத்தனை படங்கள் தமிழில் வெளியானதில்லை என்பதால் இதை ஆரோக்கியமாகப் பார்க்கலாம் என்கிறார்கள் கோலிவுட் விவரப் புள்ளிகள்.

அதேபோல முந்தைய ஆண்டுகளைவிட இந்த ஆண்டு தமிழ் சினிமாவின் மொத்த வருமானமும் அதிகரித்திருப்பதாக தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

கடந்த வருடம் ரூ.2,950 கோடி வசூலித்த தமிழ் சினிமா, இந்த வருடம் ரூ.3,500 கோடி வருமானம் பெற்றிருக்கிறது. சேட்டிலைட், ஓடிடி, இசை, வெளிநாட்டு, டப்பிங் உரிமை உள்ளிட்ட விற்பனையை உள்ளடக்கிய வருமானம் இது.

இதுபற்றி தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறியபோது, “உண்மைதான்” என்றார்.

“அதிகம் வசூல் செய்த 15 படங்களில், ஜெயிலர், லியோ, வாரிசு, துணிவு, பொன்னியின் செல்வன் 2, வாத்தி, மார்க் ஆண்டனி, மாவீரன், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், விடுதலை 1, மாமன்னன், பத்து தல, டிடி ரிட்டர்ன்ஸ், பிச்சைக்காரன் 2, போர் தொழில் படங்கள் அடங்கும்.

“2023ல் வெளியான 256 படங்களில் வெற்றிபெற்ற படங்கள் வெறும் 24தான். இது,மொத்தம் வெளியான திரைப்படங்களில் 9 சதவிகிதம் மட்டுமே. இதில் பல படங்கள் நூறு கோடி ரூபாய் வசூலைத் தொட்டிருக்கிறது.

“அதே நேரம், வெளியான மொத்தப் படங்களில் 188 படங்கள் சிறு பட்ஜெட் படங்கள். இதில், 4 படங்கள் மட்டுமே வெற்றிபெற்றிருக்கின்றன. 10-15 படங்கள் லாபம் இல்லாவிட்டாலும் போட்டது கிடைத்ததால் தப்பித்து இருக்கிறது. மற்ற 168 திரைப்படங்கள் பலத்த நஷ்டத்தைச் சந்தித்து இருக்கின்றன,” என்கிறார் தனஞ்செயன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!