இனி கதாநாயகனாக மட்டுமே நடிக்கப் போவதாக முடிவு செய்துள்ளார் காளிதாஸ் ஜெயராம்.
மற்ற நடிகர்களைப் போலவே தன்னுடைய அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர உள்ளதாக சமூக ஊடகப் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
“எனது நடிப்பை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்ல விரும்புகிறேன். எனவே முழுநீள கதாபாத்திரங்கள் கொண்ட படங்களில் மட்டுமே நடிக்க உள்ளேன்.’
|இனி தீவிர முயற்சிகள் தேவைப்படும் கதாபாத்திரங்கள், திரைப்பட ஆர்வலர்களை மகிழ்விக்கும்படியான படங்களில் என்னைப் பார்க்க முடியும். இந்த புதிய முடிவின்படி பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் புதுப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளேன்,” என்கிறார் காளிதாஸ் ஜெயராம்.