நடிகை சுகன்யா பாடகியாக அவதாரம் எடுத்துள்ளார்.
அடிப்படையில் நல்ல நடனக்கலைஞரான இவர் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற பாடலைப் எழுதி தாமே இசையமைத்து பாடியுள்ளார்.
இந்தப் பாடல் ஒலி வடிவில் வெளியாகி உள்ளது. விரைவில் காணொளியாகவும் வெளியிட திட்டமிட்டுள்ளனர். பாடல் வரிகளை ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்க உள்ளனர்.
“அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ள வேளையில் என்னுடைய சிறு பங்களிப்பாக இந்தப் பாடலை உருவாக்கி உள்ளேன். ஸ்ரீராமரின் மகிமை, ராமாயணச் சுருக்கம், அயோத்தி கோயிலை நாம் நேரில் காணும் பாக்கியம் அமைந்திருப்பது உள்ளிட்ட அம்சங்களை இந்தப் பாடலில் வெளிப்படுத்தி உள்ளோம்” என்கிறார் சுகன்யா.