வணங்கான் வழிகாட்டுவாரா?

‘வணங்கான்’ படத்தில் நடித்திருக்கும் தனக்கு திரையுலகம் வழிகாட்டுமா என்ற கேள்வியுடன் காத்திருக்கிறார் படத்தின் நாயகி ரோஷினி.

மைசூர் பெண் ரோஷினி பிரகாஷ். ‘சதாப்தி எக்ஸ்பிரஸ்’ என்ற தெலுங்குப் படத்தில் அறிமுகமான இவர் அதன்பிறகு கன்னட படங்களில் நடித்தார்.

‘ஏமாலி’ என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். ‘ஜடா’ என்ற படத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடித்தார். தற்போது அவர் பாலா இயக்கும் ‘வணங்கான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு சினிமாவில் அறிமுகமானாலும் ரோஷினி நடித்திருப்பது மொத்தம் 10 படங்கள்தான். ‘வணங்கான்’ பாலா நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கும் படம் என்பதால் நிறைய எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்தப் படத்திற்கு பிறகு தனக்கு தமிழ் சினிமாவில் நல்ல இடம் கிடைக்கும் என்று நம்புகிறார் ரோஷினி.

‘வணங்கான்’ படத்தை’ சுரேஷ் காமாட்சியின் ‘வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ்’ தயாரிக்கிறது. அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். முக்கிய வேடங்களில் சமுத்திரக்கனி, மிஷ்கின், சண்முகராஜன் ஆகியோர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

‘வணங்கான்’ படத்தின் முதல் சுவரொட்டி வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள ‘வணங்கான்’ படத்தின் விளம்பரக் காட்சியும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.

விளம்பரக் காட்சி வெளியான ஒரே நாளிலேயே 4 மில்லியன் ரசிகர்கள் அதைப் பார்த்து ரசித்துள்ளனர். தற்போது ‘வணங்கான்’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் மாதம் படம் வெளியாகும் என்று தெரிகிறது.

இந்தப் படத்தில் நடிகர் சூர்யாதான் நடிப்பதாக இருந்தது. இவருக்கும் இயக்குநர் பாலாவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதால் அந்தப் படத்தில் இருந்து சூர்யா விலகினார்.

படம் வெளியான பின்னர், சூர்யா இந்தப் படத்தைத் தவற விட்டோமே என்று வருந்துவாரா இல்லை நடிக்காமல் விட்டது நல்லது என்று மகிழ்வாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!