சிங்கை, தென்கிழக்காசிய தமிழர் வரலாற்றைக் கூறும் ஆவணம்

கிட்­டத்­தட்ட 2000 ஆண்­டு­க­ளுக்கு மேற்­பட்ட சிங்­கப்­பூர் மற்­றும் தென்­கி­ழக்­கா­சிய தமி­ழர்­க­ளின் வர­லாற்றை ஆவ­ணப்­ப­டுத்­தும் நூலை இந்­திய மர­பு­டைமை நிலை­ய­மும் கொள்கை ஆய்­வுக் கழ­க­மும் இணைந்து பிர­சு­ரித்­துள்­ளன.

‘ஊர் திரும்­பி­ய­வர், வேர் ஊன்­றி­ய­வர்: தென்­கி­ழக்­கா­சி­யா­வி­லும் சிங்­கப்­பூ­ரி­லும் தமி­ழர்’ என்ற தலைப்பு கொண்ட இந்­நூல், இணை­யம் வழி நடந்த மாநாட்­டில் மே 1ஆம் தேதி­யன்று வெளி­யி­டப்­பட்­டது.

தமிழ் மொழி விழா­வின் ஓர் அங்­க­மாக நடை­பெற்ற மாநாட்­டுக்­கும் நூல் வெளி­யீட்­டுக்­கும் தமிழ்­மொழி கற்­றல் வளர்ச்­சிக் குழு மற்­றும் வளர்­த­மிழ் இயக்­கம் ஆத­ர­வ­ளித்­தி­ருந்­தன.

இந்­நூல் முதன்­மு­த­லில் 2019ஆம் ஆண்டு டிசம்­பர் மாதத்­தில் ஆங்­கில மொழி­யில் வெளி­யி­டப்­பட்­டது. 27 இயல்­கள் கொண்டு இரண்டு தொகு­தி­க­ளாக வெளி­யீடு கண்­டது.

அந்த 27ல், 18 இயல்­கள் தேர்வு செய்­யப்­பட்டு ஒரே தொகு­தி­யா­கத் தமி­ழில் உரு­வாக்­கம் கண்­டுள்­ளது.

492 பக்­கங்­கள் கொண்ட வர­லாற்று சிறப்­பு­மிக்க இந்­நூ­லுக்கு திரு அருண் மகிழ்­நன், செல்வி நளினா கோபால் ஆகி­யோர் தொகுப்­பா­சி­ரி­யர்­கள்.

“சிங்­கப்­பூர் தமி­ழர்­க­ளின் வர­லாற்­றில், பிற தென்­க­ழக்­கா­சி­யத் தமி­ழர்­க­ளின் வர­லாற்­றில், சிங்­கப்­பூ­ரின் தமிழ் நூல் வெளி­யீட்டு வர­லாற்­றில், இந்­திய மர­பு­டைமை நிலை­யத்­தின் வர­லாற்­றில், கொள்கை ஆய்­வுக் கழ­கத்­தின் வர­லாற்­றில் இது போன்ற நூல் வெளி­யி­டப்­ப­டு­வது இதுவே முதல் முறை,” என்­றார் கொள்கை ஆய்­வுக் கழ­கத்­தின் சிறப்பு ஆய்வு ஆலோ­ச­க­ரான திரு அருண் மகிழ்­நன், 75.

அதி­கா­ரத்­துவ மொழி­களில் ஒன்­றாக தமிழ் மொழி­யைக் கொண்­டுள்ள சிங்­கப்­பூ­ரில் வெளி­யி­டப்­படும் தமிழ் நூல்­கள் அடை­யா­ளப்­பூர்வ முக்­கி­யத்­து­வம் பெறு­கின்­றன என்­றும் சிங்­கப்­பூர் தமிழ்ச் சமூ­கத்­து­ட­னும் தென்­கி­ழக்­கா­சி­யா­வின் புலம்­பெ­யர் தமி­ழ­ரு­ட­னும் நேர­டி­யா­க­வும் நெருக்­க­மா­க­வும் தொடர்­பு­கொண்ட இந்த நூலைத் தமி­ழில் வாசிப்­பது தமிழ் அறிந்­த­வர்­க­ளுக்கு ஓர் ஆத்­மார்த்­த­மான அனு­ப­வ­மாக அமை­யும் என்­றும் சுட்­டி­னார் திரு அருண்.

அத்­து­டன் கல்­வி­யா­ளர்­க­ளுக்கு மட்­டுமே பய­ன­ளிக்­கா­மல் பொது­மக்­க­ளுக்­கும் உகந்த நூலாக உரு­வாக்­கு­வ­தில் கவ­னம் செலுத்­தப்­பட்­டது என்­றார் அவர்.

“சிங்­கப்­பூர் இந்­தி­யச் சமூ­கங்­களில் ஆகப் பெரி­தான தமிழ்ச் சமூ­கத்­தின் அம்­சங்­களை ஆழ­மா­க­வும் துல்­லி­ய­மா­க­வும் ஆரா­யும் நோக்­கம் கொண்­டது இந்த நூல். பண்­டைக் காலத்­தில் தென்­கி­ழக்­கா­சி­யா­வு­டன் தமி­ழர் கொண்­டி­ருந்த தொடர்­பு­கள், குடி­யேற்­றம், தாக்­கம் ஆகி­ய­வற்­றின் தட­யங்­களை இந்­நூல் தேடிச் செல்­கிறது. சிங்­கப்­பூ­ரில் குறு­கிய காலம் தங்­கிச் சென்­ற­வர்­க­ளாக மட்­டும் இருந்து வந்த தமி­ழர் எங்­ங­னம் காலப்­போக்­கில் இங்­கேயே நிரந்­த­ர­மாக வாழத் தொடங்கி இந்த நாட்­டின் குடி­மக்­க­ளா­கி­னர் என்­னும் வர­லா­றும் இந்த நூலின் கருப்­பொ­ரு­ளாக விளங்­கு­கிறது,” என்று குறிப்­பிட்­டார் அருண்.

சிங்­கப்­பூர் உட்­பட இந்­தியா, ஆஸ்­தி­ரே­லியா, பிரான்ஸ், இந்­தோ­னீ­சியா, தாய்­லாந்து, அமெ­ரிக்கா எனப் பல நாடு­க­ளைச் சேர்ந்த 20 ஆசி­ரி­யர்­க­ளின் பங்­க­ளிப்­பில் நூலின் கட்­டு­ரை­கள் அமைந்­துள்­ளன.

இவர்­கள் அகழ்­வாய்­வா­ளர் (archaeologist), வர­லாற்­றாய்­வா­ளர் (historian), கல்­வெட்டு பொறிப்­பி­யல் நிபு­ணர் (epigraphist), கலை வர­லாற்­றாய்­வா­ளர் (art historian) என்று பல துறை­க­ளி­லும் முறை­யான கல்­வி­யை­யும் பயிற்­சி­யை­யும் பெற்­ற­வர்­கள் என்று விளக்­கி­னார் திரு அருண்.

“அவர்­கள் படைத்­தி­ருக்­கும் கட்­டு­ரை­கள் விரி­வா­னவை மட்­டு­மின்றி அவ­ர­வர் துறை­களில் கிடைத்­தி­ருக்­கும் ஆக அண்­மைய ஆதா­ரங்­கள், புரி­தல்­கள் ஆகி­ய­வற்­றை­யும் உள்­ள­டக்­கி­யவை. தென்­கி­ழக்­கா­சி­யா­வில் தமி­ழர் வர­லாற்­றைக் குறித்து இவ்­வ­ளவு ஆதா­ரங்­க­ளை­யும் ஆய்­வு­க­ளை­யும் கொண்ட அரி­தான நூல்­க­ளுள் ஒன்று இந்த நூல்.

“தென்­கி­ழக்­கா­சி­யா­வில் தமி­ழர் குறித்த தக­வல்­களை அதி­க­மாக அளிப்­ப­தோடு மட்­டு­மல்­லா­மல் தமி­ழர் வர­லாற்­றின் பெரும் இடை­வெ­ளி­களை ஓர­ளவு குறைப்­ப­தை­யும் இந்­நூல் நோக்­க­மா­கக் கொண்­டுள்­ளது,” என்று மேலும் விளக்­கி­னார் திரு அருண்.

தமி­ழாக்­கம் செய்­யும் முயற்சி கிட்­டத்­தட்ட ஓராண்டு காலம் எடுத்­தது என்­றார் இந்­திய மர­பு­டைமை நிலை­யத்­தில் காப்­பா­ள­ராக பணி­பு­ரி­யும் செல்வி நளினா, 37.

“மொழி­பெ­யர்ப்பு வல்­லு­நர்­களை அணுகி இந்த தமிழ் நூலை உரு­வாக்­கி­யுள்­ளோம். சிங்­கப்­பூர், தென்­கி­ழக்­கா­சிய தமி­ழர்­க­ளுக்­கும் கல்வி ஆய்­வா­ளர்­க­ளுக்­கும் இந்­நூல் பய­ன­ளிக்­கும்,” என்­றார் நளினா.

நூலின் மின்­ன­லக்க வடி­வம் தற்­போது இணை­யம் வழி $42.80 என்ற விலை­யில் கிடைக்­கும்.

நூலின் அச்சு வடி­வத்தை வாங்க விரும்­பு­வோர், இம்­மா­தம் 28ஆம் தேதிக்­குப் பிறகு இணை­யம் மூல­மா­கவோ இந்­திய மர­பு­டைமை நிலை­யத்­திற்கு நேர­டி­யா­கச் சென்றோ வாங்­க­லாம்.

நூலை வாங்க விரும்புவோர் இந்த இணையப்பக்கத்தை நாடலாம்: readabook.store/collections/national-heritage-board/products/9789811458200

இந்­திய ஆட்­சிப்­பணி அலு­வ­லர் மற்­றும் தற்­போ­தைய தமி­ழக அர­சின் தொல்­லி­யல் ஆணை­யர் திரு த. உத­ய­சந்­தி­ர­னின் கீழடி அகழ்­வா­ராய்ச்சி குறித்த உரை, இணைய மாநாட்­டின் சிறப்பு அங்­க­மாக அமைந்­தது.

முழு நிகழ்ச்­சி­யைக் காண விரும்­பு­வோர் இந்த இணைப்பை நாட­லாம்: youtu.be/fEEBgcS7LX0

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!