புதுமணம் பரப்பும் ‘தமிழ்ச் சோலை’

ஆ. விஷ்ணு வர்தினி

கலை­யும் இலக்­கி­ய­மும் வர­லா­றும் சங்­க­மிக்­கும் இட­மாக உரு­வெ­டுத்­துள்ள சிங்­கப்­பூர் தேசிய நூல­கத்­தின் 'தமிழ்ச் சோலை' தமிழ் வாச­கர்­க­ளுக்கு ஒரு புதை­யல். புதி­னம், புதி­னம் அல்­லா­தவை, பழங்­கா­லப் படைப்­பு­கள், நவீன தமிழ் ஆக்­கங்­கள் என ஏராளமான வளங்­களைக் கொண்­டுள்­ளது உட்­லண்ட்ஸ் வட்டார நூல­கத்­தில் நேற்று அதி­கா­ர­பூர்­வ­மா­கத் தொடங்­கப்­பட்ட 'தமிழ்ச் சோலை'.

தமிழ்­மொழி வாச­கர்­க­ளுக்­கான மைய­மாக விளங்­கிய அங் மோ கியோ நூல­கத்­தைக் காட்­டி­லும் அதிக இட­வ­ச­தி­யோடு, அணு­கு­வதற்கு எளி­தாக அமைந்­துள்­ளது உட்­லண்ட்ஸ் வட்­டார நூல­கத்­தின் இந்­தத் தமிழ்ப் பிரிவு.

இத­னால், தமிழர்கள் அதி­க அளவில் தமிழ்ச் சோலைக்கு வருகை­பு­ரி­வர் என்றும் அவர்­கள் இவ்­வ­ளங்­களை பெரி­தும் பயன்­படுத்­து­வர் என்றும் தேசிய நூலக வாரி­யம் நம்புவதாகத் தெரி­வித்­தார் தேசிய நூலக வாரி­யத்­தின் தமிழ்­மொ­ழிச் சேவை­கள் பிரி­வின் தலை­வர் அழ­கிய பாண்­டி­யன்.

"தமிழ்ச் சோலை மக்­க­ளி­டையே தமிழ்ப் புழக்­கத்தை மேலும் ஊக்கு­விக்­கும் என்று நம்­பு­கி­றோம்," என்றார் திரு பாண்டியன்.

வாச­கர்­கள் அதி­க­முள்ள இடம் தேடிச் சென்று விரி­வாக்­கம் கண்டுள்ள தமிழ் நூலக மையம், தமி­ழர்­க­ளுக்­கான அதி­க­மான வளங்­கள், வச­தி­க­ளோடு, பிற மொழி­யி­ன­ருக்­கும் தமிழ் குறித்த கூடு­தல் வளங்­க­ளைக் கொண்­டு இருக்கிறது.

தமிழ்­மொழி வாசிப்பு குறித்­துப் பேசிய நூல­கர் ரேணு சிவா, "கொவிட்-19 சூழ­லில் தமிழ் நூல் வாசிப்பு குறைந்­தது. ஆனால், மின்­னூல்­கள் தொடர்ந்து வாசிப்­புக்­குக் கைகொ­டுத்து வந்­தன. எங்­க­ளது மின்­னூல் தொகுப்பை விரி­வு­ப­டுத்தி­ உள்­ளோம்," என்­றார்.

தமிழ்ச் சோலை­யில் இருக்­கக்­கூ­டிய மின்­னி­லக்­கப் பல­கை­களில் தமிழ் மின்­னூல்­க­ளை­யும் மின்­சஞ்­சி­கை­க­ளை­யும் பற்றி அறிந்­து­கொள்­ள­லாம். அவற்­றின் முன்­னோட்­டங்­க­ளைப் படித்து, நூல­கக் கைப்­பேசிச் செய­லி­யைக் கொண்டு இர­வல் பெறும் வச­தி­யும் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

வாசிப்பு இன்­பத்தை வாச­கர்­களுக்கு அளிக்­கும் வண்­ணம் முழு­மை­யா­ன­தொரு வாசிப்பு அனு­பவத்­தைத் தரும் இட­மாக தமிழ்ச் சோலை அமைந்­துள்­ள­தா­கக் கூறி­னார் மற்­றொரு நூல­க­ரான திரு­மதி நிர்­மலா நாரா­ய­ண­சாமி.

தமிழ்­மொழி வளங்­களை ஒருங்­கி­ணைப்­ப­தோடு, வாசிப்பு குறித்த நிகழ்­வு­க­ளுக்­கும் இது ஆத­ர­வ­ளிக்­கும். வாசிப்பு வட்­டங்­கள், மொழி­பெ­யர்ப்பு சார்ந்த நிகழ்­வு­கள், எழுத்­தா­ளர் சந்­திப்­பு­கள் போன்ற நிகழ்ச்சிகள் வரும் நாள்­களில் இடம்­பெ­றும். நேரடி நிகழ்­வு­க­ளுக்கு முன்­ப­திவு அவ­சி­யம்.

மேல் விவ­ரங்­கள் அறிய: https://go.gov.sg/tamilcholaipro grammes எனும் இணை­யப்பக்­கத்தை நாட­லாம்.

'குரல்கள்' கண்காட்சி

தொடக்க காலம் முதல் இக்­கா­லம் வரை­யி­லான புலம்­பெ­யர் தமி­ழர்­களின் இலக்­கி­யங்­கள் 'குரல்­கள்' கண்­காட்சியில் இடம்பெற்றுள்ளன. 1800களில் சிங்­கப்­பூர்த் தமி­ழர்­களால் இயற்­றப்­பட்ட கவி­தை­கள், பக்­திப் பாடல்­கள் முத­லி­ய­வற்­றி­ல் இ­ருந்து சில பக்­கங்­கள் மக்­கள் பார்­வைக்கு வைக்­கப்­பட்­டுள்­ளன.

அத­னைத் தொடர்ந்து, இரண்­டாம் உல­கப் போருக்­கு­முன் சமூ­கப் பிரச்­சி­னை­க­ளுக்­குக் குரல் கொடுக்கும் நோக்கில் தொடங்­கப்­பட்ட தமிழ்ப் பத்­தி­ரிகை­க­ளின் தொடக்க கால ஆவ­ணங்­க­ளை­யும் சமூக எழுச்சி நூல்­க­ளை­யும் இங்கு காண­லாம்.

'அடுக்குவீட்டு அண்­ணா­சாமி' போன்ற, 2000களில் எழு­தப்­பட்டு தேசிய அடை­யா­ளத்­தின் வளர்ச்­சிக்கு உர­மிட்ட புகழ்­பெற்ற இலக்­கி­யங்­களை இக்­கண்­காட்சி நினைவு­கூர்­கிறது.

கடை­சிப் பகு­தி­யாக, தற்­போ­தைய கால­கட்­டத்­தில் உல­க­ம­ய­மாக்கலின் தாக்­கங்­க­ளோடு காணப்­படும் நவீன இலக்­கிய நூல்­களும் தொகுத்து வைக்­கப்­பட்­டுள்­ளன. இந்­நூல்­களும் தமிழ்ச் சோலை­யில் இடம்­பெ­று­கின்­றன.

திருக்குறள் சங்கமம்

அரபு, கன்­ன­டம், சீனம் உட்­பட 17 மொழி­களில் திருக்­கு­றள் மொழி­பெ­யர்ப்பு நூல்­கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பழங்­கா­லத் தமிழ் எழு­தப்­பட்­டுள்ள பனை­ ஓ­லை­யும் இடம்­பெற்­றுள்­ளது இதன் சிறப்­பம்­சம். பூட்டு தயா­ரித்­தல், பானை வனை­தல், சிற்­பக்­கலை, நட­னக்­கலை என தமி­ழர் பண்­பாட்­டின் பல்­வேறு கூறு­க­ளைக் கொண்­டுள்­ளது இக்­காட்­சிப்­பேழை.

சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம்

உலக அள­வில் முதல் முயற்­சி­யாக உரு­வெ­டுத்­துள்­ளது 'சிங்­கப்­பூர்த் தமிழ்க் கலைக்­க­ளஞ்­சி­யம்'. புலம்­பெ­யர் தமி­ழர்­க­ளுக்­கென தனித்­த­தொரு மின்­னி­லக்­கக் கலைக்­க­ளஞ்­சி­யம் உரு­வாக்­கப்­ப­டு­வது வேறெந்த நாட்­டி­லும் சிங்­கப்­பூ­ரி­லும் இது­வரை எடுக்­கப்­ப­டாத முயற்­சி என்பது குறிப்பிடத்தக்கது.

இம்­மு­யற்­சி குறித்து விவ­ரித்த சிங்­கப்­பூர்த் தமிழ்ப் பண்­பாட்டு மையத்­தின் தலை­வர் திரு அருண் மகிழ்­நன், "சிங்­கப்­பூர்த் தமி­ழர் கலைக்­க­ளஞ்­சி­யம் இங்கு முதன்­மு­றை­யாக உரு­வாக்­கப்­ப­டு­கிறது. வெளி­நாட்­ட­வ­ருக்­கும் பய­ன­ளிக்­கும் வகை­யில் இக்­க­லைக்­க­ளஞ்­சி­யம் தமிழ், ஆங்கிலம் என இரு­மொழி­களி­லும் உரு­வாக்­கப்­படும்," என்­றார். தமிழ் நூலக ஆலோ­ச­னைக் குழு­வின் தலை­வரு­மான அவர், தேசிய நூலக வாரி­யத்­தின் தொழில்­நுட்ப உத­வி­யு­டன் இம்­மு­யற்சி சாத்­தி­ய­மா­கின்­றது என்­றும் கூறி­னார்.

சிங்­கப்­பூர்த் தமிழ்ப் பண்­பாட்டு மைய­மும் தேசிய நூலக வாரி­ய­மும் இணைந்து மேற்­கொள்­ள­வுள்ள இத்திட்­டத்­திற்கு 2005ஆம் ஆண்­டில் வெளி­யிடப்பட்ட 'சிங்­கப்­பூர் இன்­ஃபோ­பீ­டியா' ஒரு முக்­கி­யத் தாக்­கம்.

சமூக முயற்­சி­யாக முன்­னெ­டுக்­கப்­படும் இத்­திட்­டம், இக்கா­லத்­திலும் வருங்­கா­லத்­தி­லும் சிங்­கப்­பூ­ரின் முக்­கிய வளங்­க­ளா­கத் திக­ழக்­கூ­டும் எனக் குறிப்பிட்டார் திரு அருண் மகிழ்­நன்.

சிங்­கப்­பூ­ரின் தமிழ்ப் பண்­பாட்­டைத் தமி­ழர்­களும் தமி­ழர் அல்­லா­தோரும் புரிந்­து­கொள்­வ­தற்­கும் பகிர்ந்­து­கொள்­வ­தற்­கும் ஏது­வான முயற்­சி­களை முன்­னெ­டுக்­கும் நோக்­கில் 2019ஆம் ஆண்­டில் சிங்­கப்­பூர்த் தமிழ்ப் பண்­பாட்டு மையம் தொடங்­கப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!