இறையுணர்வு நிறைந்த தைப்பூசத் தொண்டூழியர்கள்

இம்மாதம் 24ஆம் தேதி களைகட்டிய தைப்பூசத் திருவிழா சிறப்பாக நடைபெற ஏராளமான தொண்டூழியர்கள் அருந்தொண்டாற்றினர்.

தண்ணீர், அன்னதானப் பந்தல்கள், அவசர மருத்துவ சேவை என பல்வேறு வசதிகள் தொடர்ந்து பெய்த மழையில் காவடியும் பால்குடமும் சுமந்து சென்ற பக்தர்களுக்கு பேருதவியாக இருந்தன.

கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக ஐந்து குடும்பங்கள் கைகோத்து ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் தண்ணீர்ப் பந்தலை அமைத்து பக்தர்களுக்கு இலவசமாகக் குளிர் பானங்களை வழங்கி வருகின்றன.

“எனக்கு முருகப்பெருமானை மிகவும் பிடிக்கும். ஒவ்வோர் ஆண்டும் எங்களுக்கு மிக நெருக்கமான இதர குடும்பங்களோடு இணைந்து தண்ணீர்ப் பந்தல் அமைப்பது மனத்துக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது,” என்றார் இல்லத்தரசி மாலா சுந்தர்ராஜா, 47.

“இம்முறை மழை விடாமல் பெய்ததால் பலர் தண்ணீர் பந்தலுக்கு வரவில்லை. என்றாலும் காலையிலிருந்து இரவு வரையில் நாங்கள் பந்தலில் இருந்தோம் என்று கூறினார் குடும்பங்களில் ஒன்றைச் சேர்ந்த ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஜி. கஸ்தூரி, 29.

வாரநாளாக இருந்தாலும் ஏராளமான பக்தர்கள் தைப்பூசத் திருநாளில் கலந்துகொண்டனர். கூட்ட நெரிசலில் மக்கள் அலைமோதாமல் இருக்க, தொண்டூழியர்கள் பலர் சாலை ஓரங்களில் நின்று பக்தர்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

சிராங்கூன் சாலை ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் தொடங்கி, தேங்க் ரோட் அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில் வரையிலான நான்கு கிலோமீட்டர் பாதையை பக்தர்கள் பாதுகாப்பாகக் கடக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பொறியாளர் நடராஜன் திருக்குமரன், 46, 12 ஆண்டுகளுக்கு மேலாக கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் தொண்டூழியப் பொறுப்புகளில் ஈடுபட்டு வருகிறார்.

“வெயில், மழை பாராமல் நானும் எனது தொண்டூழியக் குழுவினரும் கூட்ட நெரிசலைப் பாதுகாக்கும் பொறுப்புகளில் ஈடுபடுகிறோம். எவ்வளவு கூட்டமாக இருந்தாலும் தைப்பூசம் மிக கோலாகலமான திருநாள்,” என்று மகிழ்வோடு சொன்னார்.

இந்து அறக்கட்டளை வாரியத்தைச் சேர்ந்த அவசர மருத்துவ சேவை தொண்டூழியர் குழுவில் இந்த ஆண்டு முதல்முறையாக தொண்டூழியப் பணிகளைக் கையாண்ட 65 வயது அருள் கோவிந்தசாமிக்கு அது மனநிறைவான அனுபவமாக அமைந்தது.

“நான் 45 ஆண்டுகளாகத் தாதியாகப் பணியாற்றி வருகிறேன். தைப்பூசத் திருநாளில் சிலர் திடீரென மயக்கம் போட்டு கீழே விழலாம் அல்லது அவர்களுக்கு மருத்துவ உதவி தேவைப்படலாம். நம் மக்களுக்கு சேவையாற்றுவது எனக்குப் பெருமையாக உள்ளது,” என்றார் அவர்.

மலேசியாவின் பத்துமலை தைப்பூசத் திருவிழா உணர்வை சிங்கப்பூரிலும் கொண்டு சேர்த்தார் 43 வயது ராமநாதன். ஆறாவது ஆண்டாகத் தண்ணீர்ப் பந்தல் அமைத்திருந்த அவர், “சிங்கப்பூரர்கள் அனைவராலும் தைப்பூசத்துக்கு பத்துமலை செல்ல முடியாது. அதனால் எங்கள் பந்தலில் பத்துமலை முருகன் சிலையை வைத்திருந்தோம்,” என்றார்.

34 ஆண்டுகளாக குடும்பத்தினர், நண்பர்களுடன் தைப்பூசத்தில் பங்கெடுத்து வருகிறார் எஸ்.சண்முகநாதன், 64. இந்த ஆண்டு பக்தர்களுக்கு மூன்று வேளையும் அவர்கள் உணவு அளித்தனர். அவர் குடும்பத்தைச் சேர்ந்த மாதர்கள் சிலர், உற்சாகத்துடன் முருகப்பெருமான் பாடல்களை பாடி பக்தர்களை மகிழ்வித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!