சவால்களை எதிர்கொள்ள தேவையான ஆற்றல்கள்

தமிழ்மொழி விழாவையொட்டிய ஆய்வரங்க மாநாடு

சிங்கப்பூர் சந்திக்கும் பல்வேறு சவால்கள், அவற்றைக் கடந்து முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும் வழிகள், அதற்கான ஆற்றல்கள் குறித்த ஆய்வரங்க மாநாடு ஏப்ரல் 21ஆம் தேதி நடைபெற்றது.

தமிழ்மொழி விழாவையொட்டி சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றம் சார்பில் ‘சிங்கப்பூரின் சவால்களை எதிர்கொள்ள தேவையான ஆற்றல்கள்’ எனும் தலைப்பில் நடந்த இந்த ஆய்வரங்க மாநாடு, உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெற்றது.

மொழி, சுற்றுச்சூழல், சமூக அமைப்பு, கலாசாரம் எனப் பல கூறுகளில் சிங்கப்பூர் சந்திக்கும் சவால்கள் குறித்த கட்டுரைகள் படைக்கப்பட்டன.

இம்மன்றத்தின் மதியுரைஞர்கள் பேராசிரியர் வீரமணி, திருவாட்டி மாலதி பாலா, திருவாட்டி பிரதீபா ராஜேந்திரன், திருவாட்டி அ.மல்லிகா, திரு பாரிசாலன் ஆகியோரது வழிகாட்டுதலுடன் இம்மாநாடு நடந்தேறியது. ஜூரோங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் டான் வு மெங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

13 முதல் 30 வயதுக்குட்பட்ட இளையர்கள் ஒரு பெருங்குழுவாகவும், சமூகத் தலைவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் உள்ளிட்டோர் ஒரு பெருங்குழுவாகவும் கலந்து கொண்டனர். காலை, பிற்பகல் என இரு பிரிவுகளாக நடந்த இம்மாநாட்டில், பெருங்குழுக்கள் 11 அரங்குகளில் பிரிந்து தங்கள் படைப்புகளைக் காட்சிப்படுத்தினர். மொத்தம் 50 கட்டுரைகள் படைக்கப்பட்டன. ஒவ்வோர் அரங்கிலும் ஒரு தலைவரும், நான்கு முதல் ஐந்து படைப்பாளர்களும் இடம்பெற்றிருந்தனர்.

தமிழ்மொழியில் எழுத ஆர்வமுள்ள பலர் சந்திக்கும் சவால்களைச் சுட்டிக்காட்டிப் பேசிய திரு பாலதண்டாயுதம், தொழில்நுட்பக் கருவிகளையும் செயற்கை நுண்ணறிவையும் பயன்படுத்தி அச்சவால்களை முறியடிக்கலாம் என்று பேசினார்.

சிங்கப்பூரின் பேச்சுத்தமிழ் குறித்த ஆழமான ஆய்வறிக்கை வெளியிட்ட திரு நிதிஷ் செந்தூர், தமிழில் உள்ள மலாய் மொழிக் கலப்பு, அதற்கான காரணங்கள், 50களில் வழக்கத்துக்கு வந்த சொற்கள், 90களில் நடந்த நேரடி மொழிபெயர்ப்பினால் வந்த சொற்கள், இளையர் மத்தியில் பிரபலமாக உள்ள தமிழ் சொற்கள் உள்ளிட்டவை குறித்து நயம்படப் பேசி அரங்கத்தில் உள்ளோரை ரசிக்க வைத்தார்.

தேசியக் கல்விக் கழக இணைப்பேராசிரியர் சீதாலட்சுமி தலைவராகச் செயல்பட்ட அரங்கில் பேசிய திருவாட்டி முருகேஸ்வரி ராமசாமி, சிங்கப்பூரில் ஒவ்வொரு தலைமுறையினரும் சந்திக்கும் மொழி அடிப்படையிலான சவால்கள் குறித்து பேசினார். சென்ற தலைமுறையினருக்கு ஏற்பட்ட குழப்பம், இந்தத் தலைமுறையினர் ஆங்கிலப் பயன்பாட்டு ஆதிக்கத்தால் வீட்டில் தமிழ் புழக்கத்தைக் கைவிட்டது குறித்தும், அதனை விடுத்து மொழி ஆர்வம் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

நிகழ்ச்சி இறுதியில் சிங்கப்பூர் ஒளி/ஒலி அலைகளில் செல்வாக்கு மிக்கவர்களின் காணோட்டம் எனும் பொது அமர்வு நடைபெற்றது. இதில் மீடிகார்ப் பிரபலங்கள் ரவி ஜி, அப்துல் காதர், தவனேசன், சமூக ஊடகத்தில் பிரபலமான ரித்திக் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

மாநாட்டின் இறுதியில் 50 கட்டுரைகளில் இருந்து சிறந்த 20 கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவற்றுக்கு 100 வெள்ளி பற்றுச்சீட்டு பரிசாக வழங்கப்பட்டது. கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் 30 வெள்ளி பற்றுச்சீட்டும் வழங்கப்பட்டன.

வருங்காலத்தில் மொழியை முன்வைத்துச் செயல்படும் முன்னணிச் சமூகமாக நம் சமூகம் மாற்றம் காணும் எனும் நம்பிக்கையை இம்மாநாடு விதைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார் மாநாட்டின் ஏற்பாட்டுக்குழுத் தலைவர் அபிஷா முத்துக்குமரன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!