சிங்கப்பூர்ச் சிறுகதை நூற்றாண்டு பற்றிய கலந்துரையாடல்

மத்தியப் பொது நூலகத்தில் ஏப்ரல் 21ஆம் தேதி பிற்பகல் 2 முதல் 4 மணி வரை, ‘சிங்கப்பூர்ச் சிறுகதை நூற்றாண்டு (1924-2024): ஒரு வரலாற்றுப் பார்வை’ எனும் கலந்துரையாடல் நடைபெற்றது. அதை எழுத்தாளர் சிவானந்தம் வழிநடத்தினார்.

அன்றைய ஆங்கிலேய எழுத்தாளர்களும் சிறப்பான சிறுகதை எழுத்தாளராகக் கருதிய திரு எஸ். ராஜரத்தினத்தைப் பாராட்டித் தன் உரையைத் தொடங்கினார் சிவானந்தம். படம்: ரவி சிங்காரம்

“சிங்கை நேசன் பத்திரிகையில் 1888ல் சி.கு.மகுதூம் சாயபு வெளியிட்ட உரையாடல் தொகுப்பான ‘வினோத சம்பாஷணை’யை சிங்கப்பூரின் முதல் தமிழ்ச் சிறுகதை என ஆய்வாளர் நா.கோவிந்தசாமி 1989ல் முன்வைத்தார்.

“ஆனால் அந்த ஆய்வின் முடிவைத் திரு பாலபாஸ்கரன் 2009ல் மறுத்தார். பொதுஜன மித்திரனில் 1924, மே 28ஆம் தேதி வெளியான “பாவத்தின் சம்பளம் மரணம்” என்ற சிறுகதையே சிங்கப்பூரின் முதல் தமிழ்ச் சிறுகதை என அவர் கூறியிருந்தார்,” என்றார் சிவானந்தம்.

சமூகச் சிந்தனைகளை வளர்த்த முக்கியச் சிங்கப்பூர்ச் சிறுகதைகளையும் சுட்டினார் சிவானந்தம்.

முதல் கால்நூற்றாண்டை இதழ்களின் காலம், அடுத்த அரைநூற்றாண்டை இயக்கங்களின் காலம், 21ஆம் நூற்றாண்டை இலக்கிய நுண்ணுணர்வின் காலம் என்று வகைப்படுத்தினார் சிவானந்தம். படம்: ரவி சிங்காரம்
அடுக்குமாடிக் கட்டட வாழ்வில் நல்லிணக்கத்தை வலியுறுத்திய சே.வெ.சண்முகத்தின் ‘சிங்கப்பூர்க் கதைகள்’, சிங்கப்பூரின் வளர்ச்சியில் சுற்றியிருந்த தீவு மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளைக் காட்டிய லதாவின் ‘அலிசா’ போன்ற சிறுகதைகளைச் சுட்டினார் சிவானந்தம். படம்: ரவி சிங்காரம்
அன்று ஒரு சிறுகதையாகத் தொடங்கியது; இன்று 4,500-5,000 சிங்கப்பூர்த் தமிழ்ச் சிறுகதைகளாக அதிகரித்துள்ளன.
எழுத்தாளர் சிவானந்தம்

பின்பு, ‘த சிராங்கூன் டைம்ஸ்’ மாத இதழின் முதன்மை ஆசிரியரும் எழுத்தாளருமான ஷாநவாஸ், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்திவரும் கதைக்களத்தின் முதல் அமைப்பாளரும் எழுத்தாளருமான இராம வயிரவன் ஆகியோருடன் கலந்துரையாடலையும் வழிநடத்தினார் சிவானந்தம்.

பேராசிரியர் சிவகுமாரன் வெளியிட்ட ‘சிங்கப்பூர்ச் சிறுகதைக்கொத்து’ தொகுப்பை, பயிற்சித் தமிழாசிரியர்கள் 10 பேர், எழுத்தாளர் ஜெயமோகனின் வழிகாட்டுதலோடு எழுதினர். படம்: ரவி சிங்காரம்

“மாதத்திற்கு ஒரு சிறுகதை எழுதுவது மிகக் கடினம். ஊர் சிறுகதைகளை ‘சிங்கப்பூர்ப்படுத்த’ வேண்டும். எனினும், ஓர் இதழின் உயிர் என்பது சிறுகதையே,” என்றார் ஷாநவாஸ்.

“கதைக்களம், அதிக எழுத்தாளர்களை உருவாக்கித் தமிழ்நாட்டிலும் பேசப்படுவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது,” என்றார் இராம வயிரவன்.

“இந்நிகழ்ச்சி புதுமையானது. எனினும், சிறுகதை எழுதும் பயிலரங்குகளோடு ஒப்பிடுகையில் இது இளையர்களைவிடப் பெரியவர்களுக்கே பொருத்தமாக இருந்தது,” என்றார் நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியின் பிரணாம்பிகா பாஸ்கரன்.

“இந்தச் சிறுகதை நூற்றாண்டைப் பற்றித் தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடத்தினால் அது இலக்கிய வளர்ச்சியாக இருக்கும்,” என்றார் எழுத்தாளர் ரமா சுரேஷ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!