‘பசு மட்டுமே உயிர்வாயுவை சுவாசிக்கும், வெளியிடும்’

பிர­யாகை: உத்­தி­ரப் பிர­தே­சத்­தில் பசு­வதைத் தொடர்­பான வழக்கு ஒன்­றில் ஒரு­வ­ருக்கு பிணை அனு­ம­திக்க மறுத்­து­விட்ட சேகர் குமார் யாதவ் என்ற நீதி­பதி, உயிர்­வாயுவை சுவா­சித்து அதை வெளி­யி­டும் ஒரே ஒரு பிராணி பசு­மா­டு­தான் என்று விஞ்­ஞா­னி­கள் நம்­பு­வ­தா­க தன்­னுடைய தீர்ப்­பில் குறிப்­பிட்டார்.

அவர், 12 பக்க தீர்ப்­பில் இந்த விவ­ரத்தை தெரி­வித்­தார். பசும்­பாலில் இருந்து தயா­ரிக்­கப்­படும் நெய் யாகத்­தில் பயன்­ப­டுத்­தப்­படு­வதால் சூரிய கதிர்­க­ளுக்­குப் புதிய தெம்பு கிடைக்­கிறது. இத­னால் மழை பெய்­கிறது என்­றும் அவர் தெரி­வித்­துள்­ளார்.

பசு­வின் முக்­கி­யத்­து­வத்தைத் தனது தீர்ப்­பில் சுட்­டிக்­காட்­டிய அவர், பசும்­பால், தயிர், நெய், கோமி­யம், சாணம் அனைத்­தும் தீர்க்க முடி­யாத பல நோய்­க­ளுக்கு மருந்­தாக இருக்­கிறது என்­றும் குறிப்­பிட்­டார். பசுவை இந்­தி­யா­வின் தேசிய விலங்­காக அறி­விக்க வேண்­டும் என்று இந்த நீதி­பதி அண்­மை­யில் ஒரு தீர்ப்­பின் மூலம் வலி­யு­றுத்­தி­னார்.

இத­னி­டையே, நீதி­பதி யாத­வின் தீர்ப்பு தொடர்­பில் கருத்து தெரி­வித்­துள்ள பல ஊட­கங்­கள், பிபிசி­யின் அறிக்கை ஒன்றை மேற்­கோள் காட்­டின.

எல்லா உயி­ரி­னங்­களும் வெளி­யி­டும் சுவா­சக் காற்­றில் உயிர்­வாயு இருக்­கும் என்­றா­லும் அது உள்ளிழுக்கும் காற்றில் இருக்கும் அளவைவிடக் குறை­வாக இருக்கும் என்­றும் அந்த பிபிசி கூறு­வ­தாக ஊட­கங்­கள் தெரி­வித்­துள்­ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!