வாகன வெளிச்சத்தில் தேர்வெழுதிய மாணவர்கள்

பாட்னா: பீகார் மாநி­லத்­தின் கிழக்கு சம்­ப­ரான் மாவட்­டத்­தில் உள்ள மோதி­ஹரி நக­ரில் நேற்று முன்

­தி­னம் 400க்கும் மேற்­பட்ட மாண­வர்­கள் வாக­னங்­க­ளின் விளக்கு வெளிச்­சத்­தில் 12ஆம் வகுப்பு இந்தி தேர்வு எழு­தி­னர்.

மகா­ராஜா ஹரேந்­திர கிஷோர் சிங் கல்­லூ­ரி­யில் பிற்­ப­கல் 1.45 மணிக்­குத் தொடங்க வேண்­டிய தேர்வு, மாண­வர்­க­ளுக்­கான இருக்­கை­களை சரி­வர அமைப்­ப­தில் தாம­தம் ஏற்­பட்­டது.

அத­னால் மாலை 4 மணிக்கு மாண­வர்­கள் தேர்வு எழு­தத் தொடங்­கி­னர். சற்று நேரத்­தில் இருட்­டி­விட்­டது. ஆனால் கல்­லூ­ரி­யில் மின்­வி­ளக்கு வசதி இல்லை.

அத­னால் மாண­வர்­களை அழைத்து வந்த பெற்­றோர், தங்­க­ளது கார் உள்­ளிட்ட வாக­னங்­க­ளின் முகப்பு விளக்கை எரி­ய­விட்­ட­னர்.

காருக்­குள் பெற்­றோர் அமர்ந்­தி­ருக்க மாண­வர்­கள், வாகன வெளிச்­சத்­தி­லேயே 3 மணி நேரத் தேர்வை எழுதி முடித்­த­னர். முன்­ன­தாக, கல்­லூ­ரி­யில் போதிய அடிப்­படை வச­தி­கள் இல்­லா­ததை எதிர்த்து பெற்­றோர்கள் போராட்­டம் நடத்­தி­னர்.

வாகன வெளிச்­சத்­தில் தேர்வு எழு­திய விவ­கா­ரம் வெளிச்சத்துக்கு வந்ததால் அதுகுறித்து மாவட்ட கல்வி நிர்­வா­கம் விசா­ரித்து வரு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!