நான் பயங்கரவாதி அல்ல: பஞ்சாப் முதல்வர் ஆவேசம்

சண்­டி­கர்: ஒரு மாநி­லத்­தின் முதல்­வரான தாம் பயங்­க­ர­வா­தி­யைப்போல் நடத்­தப்­ப­டு­வதை ஏற்க இய­லாது என்­று பஞ்­சாப் முதல்­வர் சரண்­ஜித் சிங் சன்னி தெரி­வித்­துள்­ளார்.

பிர­த­மர் மோடி­யும் அவ­ரது தரப்­பி­ன­ரும் தம்மை பழி­வாங்க முயற்சி செய்­வ­தாக அவர் சாடி­யுள்­ளார்.

பஞ்­சாப் மாநில சட்­டப்­பே­ர­வைத் தேர்­தல் பிர­சா­ரத்­துக்கு பிர­த­மர் மோடி நேற்று முன்­தி­னம் ஜலந்­தர் நக­ருக்கு வந்­தி­ருந்­தார். அதே­வேளை­யில், சண்­டி­க­ரில் இருந்து தேர்­தல் பிர­சா­ரத்­துக்­காக ஹெலி­காப்­ட­ரில் புறப்­பட இருந்­தார் முதல்வர் சரண்­ஜித் சிங் சன்னி.

ஆனால், பாது­காப்பு கார­ணங்­க­ளுக்­காக சண்­டி­க­ரில் ஹெலி­காப்­டர் ­பறக்­கத் தடை விதிக்­கப்­பட்­டது. இதை­ய­டுத்து அவர் பய­ணம் ரத்­தா­னது.

இது­கு­றித்து செய்­தியாளர்­களி­டம் பேசிய முதல்­வர் சரண்­ஜித் சிங், சொந்த மாநி­லத்­தி­லேயே தமது பிர­சா­ரத்­துக்கு தடை­வி­திக்­கப்­ப­டு­வதா­கப் புகார் எழுப்­பி­னார்.

"கடந்த மாதம் ஃபெரோஸ்­பூர் பகு­தி­யில் தாம் தடுத்து நிறுத்­தப்­பட்­ட­தால் என் மீது பிர­த­மர் மோடி வருத்­தத்­தில் உள்­ளார். அத­னால் என்­னை­யும் விவ­சா­யி­க­ளை­யும் பஞ்­சாப் மக்­க­ளை­யும் அவர் பழி­வாங்க முயற்சி செய்­கி­றார்.

"நான் பஞ்­சா­பி­யர்­க­ளின் பக்­கம் நிற்­பேன். மீண்­டும் என்னை தாக்­கவோ, ஏன் கொலை செய்­யவோ முயன்­றா­லும் அஞ்­ச­மாட்­டேன்," என்றார் முதல்வர் சரண்­ஜித் சிங்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!