ஜிதேந்திர சிங்: 2026ல் ‘சமுத்ராயன்’ திட்டம் நிறைவுபெறும்

புது­டெல்லி: ஆழ்­க­ட­லுக்­குள் மனி­தர்­களை அனுப்­பும் சமுத்­ரா­யன் திட்­டம் எதிர்­வ­ரும் 2026ஆம் ஆண்­டில் நிறை­வு­பெ­றும் என மத்­திய இணை அமைச்­சர் ஜிதேந்­திர சிங் தெரி­வித்­துள்­ளார்.

தாதுக்­கள் போன்ற ஆழ்­க­டல் வளங்­களை ஆய்வு செய்­வ­தற்­காக ‘மத்ஸ்யா 6000’ என்ற ஆய்வு வாக­னத்­தில் ஆறா­யி­ரம் மீட்­டர் ஆழத்­திற்கு மூன்று ஆய்­வா­ளர்­களை அனுப்­பும் நோக்­கில் சமுத்­ரா­யன் திட்­டம் உரு­வாக்­கப்­பட்­டுள்­ள­தாக நாடா­ளு­மன்­றத்­தில் அவர் கூறியுள்­ளார்.

மக்­க­ள­வை­யில் எழுப்­பப்­பட்ட கேள்­விக்கு அறி­வி­யல் தொழில்­நுட்­பத்­துறை இணை­ய­மைச்­ச­ரான அவர் எழுத்­து­பூர்­வ­மாக வழங்­கிய பதி­லில் இவ்­வாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

“புவி அறி­வி­யல் அமைச்­சின் கீழ் செயல்­படும் சென்னை தேசிய கடல் தொழில்­நுட்ப நிறு­வ­னம் ஆழ்­க­டல் ஆய்­வுக்­கான ‘மத்ஸ்யா 6000’ வாக­னத்தை வடி­வ­மைத்து உரு­வாக்கி உள்­ளது. இப்­போது அந்த வாக­னத்­தைக் கொண்டு சில சோத­னை­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

“ஆழ்­க­டல் வளங்­கள், பல்­லு­யிர் மதிப்­பீட்டை ஆராய்­வ­தற்­காக சுரங்க இயந்­தி­ர­மும் ஆளில்லா வாக­னங்­களும் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன,” என்று அமைச்­சர் ஜிதேந்­திர சிங் தெரி­வித்­துள்­ளார்.

இந்­தி­யா­வின் ஒன்­பது மாநி­லங்­களும் 1,382 தீவு­களும் கடற்­க­ரை­யோ­ரம் அமைந்­துள்­ளன.

கட­லடி ஆய்­வுப் பணி­களை மேற்­கொள்­வ­தற்­கான நீர்­மூழ்கி கலத்­தைப் பெற்­றுள்ள அமெ­ரிக்கா, ரஷ்யா, ஜப்­பான், பிரான்ஸ், சீனா போன்ற நாடு­க­ளின் வரி­சை­யில் இந்­தி­யா­வும் இணை­கிறது என ஊட­கத் தக­வல் தெரி­விக்­கிறது.

இதற்­கி­டையே, இந்­தி­யா­வின் முதல் மனித விண்­வெளி பய­ணம் 2024ல் மேற்­கொள்­ளப்­படும் என்­றும் இணை­ய­மைச்­சர் கூறி­யுள்­ளார்.

“மனித விண்­வெ­ளிப் பய­ணத்­திற்கு நிய­மிக்­கப்­பட்ட விண்­வெளி வீரர்­கள் அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ள­னர். மேலும், மனி­தர்­களை சுமந்து செல்­லும் ‘ககன்­யான்-1’ கலம் சோத­னைக்கு உட்­ப­டுத்­தப்­படும்.

“விண்­வெ­ளிக்­குச் செல்­லும் வீரர்­க­ளின் பாது­காப்பை மன­திற் கொண்டு உரிய நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கிறது,” என்­றும் அமைச்­சர் ஜிதேந்­திர சிங் தமது எழுத்­து­பூர்வ பதி­லில் மேலும் குறிப்­பிட்­டுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!