தை பிறந்தால் எங்களுக்கும் வழி பிறக்கிறது சனிக்கிழமை ஒரு சாமானியர்

செய்தி & படங்கள்: எம். கே. ருஷ்யேந்திரன்

தை பிறந்­தால் வழி­பி­றக்­கும் என்­பது எங்­க­ளைப் பொறுத்­த­வரை நூற்­றுக்கு நூறு உண்மை என்­கி­றார்­கள் நெட்டி மாலை தயா­ரிப்­பில் கடந்த 20 ஆண்­டு­களாக ஈடு­பட்டு வரும் செல்­வம்-வேத­வள்ளி தம்­ப­தி­யர்.

திரு செல்­வம், 36, மணக்­குடி என்ற கிரா­மத்­தைச் சேர்ந்­த­வர். அவ­ரு­டைய தந்­தை­யான திரு மகா­லிங்­கம், மாட்­டுப்­பொங்­கல் நெட்டி மாலை தயா­ரிப்­ப­தில் கெட்­டிக்­கா­ரர். 10ஆம் வகுப்­பு­டன் படிப்பை நிறுத்­தி­விட்ட திரு செல்­வம், திரு மகா­லிங்­கம் மறை­வுக்­குப் பிறகு அந்­தத் தொழிலைத் தானே மேற்­கொண்டு நெட்டி மாலை தயா­ரிப்­பில் ஈடு­பட்டு வரு­கி­றார்.

“பருவ காலத்­திற்கு ஏற்­றது போல் பல தொழில்­க­ளைச் செய்து வரு­கி­றேன். பொங்­கல் நெருங்­கி­விட்­டால் நெட்டி மாலை தொழில்­தான் பிர­தா­னம்.

“நவம்­பர் மாத இறு­தி­யில் அல்­லது டிசம்­ப­ரில் வேலை­யைத் தொடங்­கி­வி­டு­வோம். ஆண்­டு­தோ­றும் புது­வைக்­குச் சென்று நீண்டு இருக்கும் நெட்­டிச் செடி தண்டு­களை வெட்டி கட்டி வரு­வது வழக்­கம்.

“மணக்­கு­டி­யில் இருந்து சுமார் 110 கி.மீ. தொலை­வில் இருக்­கும் புது­வைப் பகு­தி­யில் ஏரா­ள­மான ஏரிகள் உள்ளன. அவற்­றில் நெட்­டிச் செடிகள் மண்­டிக்­கிடக்­கும்.

“அவற்றை இரண்டு, மூன்று ஆட்­களை வைத்து பறித்து அங்­கேயே குட்டி லாரி ஒன்றை வாட­கைக்கு அமர்த்தி மணக்­கு­டிக்குக் கொண்டு வரு­வேன்.

“அடுத்­த­தாக, ஏறக்­கு­றைய 40 கி.மீ. தொலை­வில் இருக்­கும் காரைக்­கால் பகுதிக்­குச் சென்­றால் தாழை மடல் நிறைய கிடைக்­கும். அதைக் கொண்டு வந்து மட­லில் இருந்து மேல் மட்­டையைக் கிழித்து எடுத்து ஒவ்­வொன்­றும் ஒன்றரை மீட்­டர் நீளத்­துக்கு நார் நாராக கிழித்து காயபோட்டு வைத்­துக்கொள்­வோம்.

“நெட்டி மாலைக்கு உகந்­தது தாழை நார்தான். தாழை நார் வலு­வாக, உறுதியாக, எளி­தில் அறுந்து போகா­த­தா­க­ இருக்கும். மாலை வளையாமல், துவ­ண்டு விழாமல் இருக்­க உதவும்.

“மூன்­றா­வ­தாக. மேற்கே 40 கி.மீ. தொலை­வில் உள்ள கும்­ப­கோ­ணம் சென்று தண்­ணீ­ரில் கரை­யக்­கூ­டிய வண்­ணப் பொடியை வாங்கி வரு­வேன்.

“இவற்­றுக்­கெல்­லாம் மொத்த செலவு சுமார் ரூ.10,000லிருந்து ரூ.12,000 ஆகும்.

“நெட்­டிச் செடி தண்டின் நடுவே இயற்கையாகவே துவாரம் இருக்­கும். தக்­கைப் போன்று இருப்­ப­தால் அதை நம் விருப்­பத்­திற்கு ஏற்ப எப்­படி வேண்டு­மானாலும் செதுக்கி பல வடி­வங்­களில் செய்துகொள்­ள­லாம்.

“எங்­கள் வீட்­டின் கொல்லைப் புறத்தில் வேலை­யைத் தொடங்­கு­வோம். நெட்டியைப் பதப்­ப­டுத்தி, அதைக் கத்தியால் பூ, கரணை, பட்டை, சதுரப் பட்டை, கூந்­தல், குஞ்­சம் போன்ற பல வடி­வங்­களில் பலவிதமாக முத­லில் செதுக்­கிக்கொள்­வோம்.

“பிறகு அதிக வேலைப்­பா­டுள்ள பூ, குஞ்சம், கூந்­தல் போன்­ற­வற்றை விட்­டு­விட்டு மற்­ற­வற்றை மொத்­த­மாக சிவப்பு, பச்சை, இளஞ்­சி­வப்பு, மஞ்­சள், ஊதா உள்­ளிட்ட பல வண்ணச் சாயத்­தில் நனைத்து எடுத்­து­வி­டு­வோம்.

“எல்­லா­வற்­றை­யும் வெய்­யி­லில் காய­வைத்து பிறகு தாழை நாரைக் கொண்டு கோத்து மாலை­யாக உரு­வாக்­கு­வோம்.

“மாலை உரு­வான பிறகு பூ, குஞ்­சம், கூந்­தல் போன்­ற­வற்றைத் தனித்­த­னி­யாக பல வண்­ணங்­களில் நனைத்து எடுத்து கொடி­யில் கட்டி காய­ விட்­டு­வி­டு­வோம்.

“பொங்கலுக்கு ஒரு வார காலம் இருக்­கை­யில் இவ்வளவு வேலை­களையும் முடித்துவிடுவோம்.

“இப்­படி நாங்­கள் 1,000 முதல் 3,000 மாலை­கள் வரை தயா­ரிக்­கி­றோம். அவற்றை மொத்த விற்­ப­னைக்கு என்­றால் ஒரு மாலை ரூ.12 விலைக்கு விற்­கி­றோம். சில்­லறை விற்­பனை­யில் ஒரு ஜோடி மாலை ரூ.50க்கு கொடுக்­கி­றோம். 3,000 மாலை தயா­ரித்­தால் ஏறக்­கு­றைய ரூ.20,000 லாபம் கிடைக்­கும். பொங்­கல் செலவு போக கொஞ்­சம் பணம் மிஞ்­சும்.

“இப்போது பிளாஸ்டிக் மாலைகள் வந்துவிட்டாலும் எங்களுக்குத் தொழில் ஏற்ற இறக்கமின்றி நடந்து வருகிறது.

“மொத்­தத்­தில் தை பிறந்­தால் நெட்டி மாலை வடி­வில் எங்­க­ளுக்கு வழி பிறக்­கிறது,” என்று திரு செல்­வ­மும் திரு­மதி வேத­வள்ளி செல்­வ­மும் கூறினர்.

நெட்டி மாலை செய்­ப­வர்­க­ளைத் தேடி அலைந்­த­போது மணக்­கு­டிக்­குச் சென்றால் சில­ரைப் பார்க்­க­லாம் என்று வழி­யில் சிலர் கூறி­யதை அடுத்து அங்கு சென்­ற­போது ஒரு வீட்­டில் நெட்டி மாலை கொடி­யில் காய்ந்துகொண்டு இருந்­தது.

அந்த வீட்டை விசா­ரித்­த­போது திரு செல்­வம் கொல்லைப்புறத்­தில் இருந்து வெளியே வந்­தார். அப்­போது அவ­ரும் துணை­வி­யா­ரும் மாலை­க­ளுக்­குச் சாயம் நனைத்­துக்கொண்டு இருந்­த­னர்.

இத்­தம்­ப­திக்கு தருண், 7, கார்த்­தி­கேயன், 5, என்ற மக­ன்கள் இருக்­கிறார்­கள். அவர்­கள் படித்து வரு­கி­றார்­கள்.

திரு செல்­வத்­தின் உற­வி­னர்­களும் நெட்டி மாலை தொழி­லைத் தலை­முறை தலை­மு­றை­யா­கச் செய்து வரு­கி­றார்­கள்.

நான்கு நாள்கள் கொண்டாடப்படும் தமிழர்­க­ளின் பொங்கல் பண்­டிகை அவர்களின் வாழ்­வில் மிக முக்­கி­ய­மான ஒன்று. நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்­ச­ பூ­தங்­க­ளுக்­கும் நன்றி சொல்­வ­தோடு மட்­டு­மின்றி கால்­நடை­க­ளுக்­கும் தமி­ழர்­கள் நன்றி கூறி மனநிறைவடையும் விழா பொங்கல்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்று தொன்றுதொட்டு நம்பப்படுகிறது.

அறுவடையானதும் தை முதல் தேதி வரும் பொங்­கல் பண்­டிகை மங்­க­லகர மானது. மாட்­டுப் பொங்­கல் மேலும் அலங்­கா­ர­ம­ய­மா­னது.

மாட்­டுப் பொங்­கல் அன்று பொங்­கல் பானை­களுக்கு மட்­டு­மன்றி பசு, காளை, கன்­று­கள் ஆகி­ய­வற்றைச் சுத்­த­மா­கக் குளிப்பாட்டி கொம்புகளுக்குச் சாயம் தீட்டி, மஞ்சள், குங்குமம், சந்தனப் பொட்டு வைத்து, கள்ளிப்பால் திருஷ்டிப் பொட்டு வைத்து நெட்டி மாலை­, மாவிலை, வேப்ப இலைத் தோரணமாலை, கரும்பு, வாழைப்­பழ மாலைகளை அவற்றுக்குப் போட்டு ஜோடிப்பார்கள்,

மாடுகளுக்குப் படையல் வைத்து, உலக்கையைப் போட்டு தாண்ட வைத்து, வீட்டின் உள்ளே அழைத்துச் சென்று நடக்கவிட்டு அவற்றுக்கு நன்றி கூறு­வது தமி­ழர்­க­ளின் சிறப்பு. இப்­போது நாய், பூனை உள்­ளிட்ட செல்லப் பிராணி­க­ளை­யும் நெட்டி மாலையால் அலங்­க­ரிக்­கத் தொடங்­கி­விட்­டார்­கள்.

“மங்கலகரமான மாட்டுப் பொங்கலை மேலும் மங்கலகரமானதாக ஆக்கும் வகை­யில் நாங்­கள் நெட்டி மாலை தொழிலில் ஈடு­பட்டு வரு­கி­றோம்.

“மாட்­டுப் பொங்­க­லன்று காளை­களும் பசுக்களும் கன்­று­களும் எங்கள் வண்ண வண்ண மாலை­களு­டன் கொண்­டாட்டத்­தில் கலந்­து­கொள்­வதைக் காண எங்­க­ளுக்கு மட்­டுமன்றி உங்­களுக்கும் கண்­ கோடி வேண்டும். அதற்கு எத்தனை கோடி கொடுத்தாலும் ஈடாகாது,” என்று செல்­வம் தம்­ப­தி­யர் கூறி­னர்.

பொங்கல் மங்கலகரமான கொண்டாட்டம். நன்றி சொல்லும் விழா. காளை, பசு மாடுகளை வணங்கி அவற்றுக்குப் படைத்து மகிழும் பண்டிகை மாட்டுப் பொங்கல். நாங்கள் தயாரிக்கும் மாலைகளுடன் காளைகளை, பசுக்களை, கன்றுகளைப் பார்ப்பதில் கிடைக்கும் மனநிறைவுக்கு எத்தனை கோடி கொடுத்தாலும் ஈடாகாது.

திரு செல்வம், 36.

மணக்குடி என்ற கிராமத்தில் தன் வீட்டுக் கொல்லைப் புறத்தில் தன் மனைவி வேதவள்ளி உதவியுடன் திரு செல்வம், மாலைக்குச் சாயம் நனைக்கிறார். விற்பனைக்குத் தயாரான வண்ண நெட்டி மாலை ஒன்றின் மொத்த விற்பனை விலை ரூ.12 என்றார் செல்வம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!