ஒரே சாட்சி; வரலாறாக நடமாடும் பிள்ளை சனிக்கிழமை ஒரு சாமானியர்

இந்­தியா சுதந்­தி­ரம் அடைந்தபோது திரு­வா­வ­டு­து­றை­யைச் சேர்ந்த மாணிக்க ஓது­வார் கோளறு பதிகம் ஓத, கட்­ட­ளைத் தம்­பி­ரான் சடைச்­சாமி அவர்­கள், முதல் பிர­தமர் ஜவ­ஹர்­லால் நேரு­வி­டம் மடத்­தின் செங்­கோலை ஒப்­ப­டைத்­தார்­கள் என்­பது வர­லாறு.

இதற்கு நட­மா­டும் ஒரே சாட்சி­யாக திரு­வா­வ­டு­து­றை­யில் ஒரு­வர் இருக்­கி­றார்; அண்மையில் தமி­ழக ஆளு­நர் ஆர்.என். ரவி, அந்த முதியவரைச் சந்­தித்து, வரலாற்று சிறப்­பு­மிக்க தக­வல் களைக் கேட்டறிந்து அவற்றை ஆவணப்­படுத்தி இருக்­கி­றார் என்ற செய்தி கேள்விப்­பட்டு திரு­வா­வடு­து­றைக்கு விரைந்­தேன்.

அங்கு போய் விசா­ரித்த போது, அந்த வர­லாற்று சம்­ப­வத்­திற்கு ஒரே சாட்சி திரு மாசி­லா­மணி பிள்­ளை­தான். திரு பிள்­ளை­தான் இன்­ன­மும் நட­மா­டும் வர­லா­றாக இருக்­கி­றார் என்று பல­ரும் கூற திரு பிள்ளை அவர்­களை அவ­ரின் வீட்­டில் சந்­தித்­தேன்.

“அப்­போது எனக்கு வயது 23. மடத்­தில் வேலை பார்த்­தேன்.

“குரு­மகா சன்­னி­தா­னம் ஸ்ரீல­ஸ்ரீ அம்­ப­ல­வாண தேசிக சுவா­மி­கள் மடத்­தின் 20வது பட்­டத்­தில் இருந்­தார். மன்­னர் காலத்­தின்­போது புதிய மன்­னர் பொறுப்­பேற்­கை­யில் சம­யத் தலை­வர் கையால் செங்­கோல் புதிய மன்­ன­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­படும்.

“இந்த வழ­மை­யைப் பின்­பற்றி இந்­தி­யா­வி­டம் சுதந்­தி­ரத்தை ஒப்­படைக்­க­லாம் என்று அப்­போது மிக முக்­கிய தலை­வர்­களில் ஒரு­வ­ராக இருந்த திரு ராஜாஜி யோசனை தெரி­வித்­தார்.

“அதை­ய­டுத்து மடத்­திற்கு வேண்­டு­கோள் விடுக்­கப்­பட்­டது. குரு­மகா சன்­னி­தா­னம் அவர்­கள், தானே பொறுப்­பெ­டுத்­துக்­கொண்டு ஆறடி நீளத்­திற்­குத் தங்க மூலாம் பூசப்­பட்ட செங்­கோலைத் தயா­ரிக்­கும் பொறுப்பை, அப்­போது சென்­னை­யில் பிர­ப­ல­மாக இருந்த உம்­மிடி பங்­காரு செட்டி நகைக்கடை­யின் உரிமையா­ளரை நேரில் வரவழைத்து பொறுப்பை அவ­ரிடம் ஒப்­ப­டைத்­தார்.

“சொன்­ன­ப­டியே மடத்­திற்­குப் பெரிய பெட்­டி­யில் வைக்­கப்­பட்டு செங்­கோல் வந்­தது.

“செங்கோலுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படலாம் என்பதால் பெட்­டியைத் திறத்து பார்க்­க வேண்டாம் என்று ஆதீன­கர்த்தர் உத்­த­ர­விட்­ட­தால் மடத்­தில் அந்­தப் பெட்டி திறக்­கப்­படவே இல்லை.

“ஆதீனத்­தில் அப்­போது கட்டளைத் தம்­பி­ர­ானாக இருந்த திரு­வ­திகை தம்­பி­ரான் குமார சுவாமி அவர்­களும் மாணிக்க ஓது­வா­ரும் டெல்­லிக்குப் போவது என்று முடிவு செய்­யப்­பட்­டது.

“திரு­வ­திகை தம்­பி­ரான் நீண்ட சடை வைத்து இருப்­பார். அதனால் அவ­ருக்குச் சடைச்சாமி என்று பெயர். மடத்­தின் ஆஸ்­தான நாதஸ்­வர வித்­வா­னாக இருந்த திரு­வா­வ­டு­துறை ராஜ­ரத்­தி­னம் பிள்­ளை­யும் சென்­றார்.

“நல்ல சுப நேர­த்தில் கிளம்பி ரயில் மூலம் எல்­லோ­ரும் சென்னை சென்­று அங்­கி­ருந்து சிறப்பு விமா­னம் மூலம் டெல்லி போய்ச் சேர்ந்­தார்­கள்.

“1947 ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி இந்­தி­யா­வின் கடைசி வைசி­ரா­யாக இருந்த மவுண்ட்­பேட்­டன் பிரபு முன்­னி­லை­யில் மாணிக்க ஓது­வார் கோளறு பதி­கத்­தில் இருந்து ‘அடி­யார்­கள் வானில் அர­சாள்­வர் ஆணை நமதே’ என்ற சைவ சம­யக் குர­வர்­ சம்­பந்­த­ரின் செந்­தமிழ்ப் பாடலை ஓத, ராஜ­ரத்தினம் பிள்­ளை­யின் நாதஸ்­வ­ரம் ஒலிக்க, சடைச்­சாமி அவர்­கள் செங்­கோலை நேரு விடம் ஒப்­ப­டைத்­தார்­.

“இந்­தியா சுதந்­திர நாடாக ஒளி­வீ­சத் தொடங்­கி­யது,” என்­றார் திரு மாசி­லா­மணி பிள்ளை.

திரு­வா­வ­டு­து­றை­யைப் பூர்­வீ­க­மா­கக் கொண்ட திரு பிள்­ளைக்கு வயது 97. தன் துணை­வி­யார் திருமதி ருக்­மணி ஆச்­சி­யு­டன்,87, அவர் திரு­வா­வ­டு­து­றை­யி­லேயே வசித்து வரு­கி­றார். அவரை பிள்ளை என்­று­தான் அங்கு எல்லா­ரும் அழைக்­கி­றார்­கள்.

1952ல் மணம்புரிந்த இத்தம்­பதிக்கு நான்கு மகன்­கள், ஒரு மகள். மகள் குடும்­பத்­தோடு அமெ­ரிக்­கா­வில் வாழ்ந்து வரு­கி­றார். பிள்­ளை­களும் பேரப்­பிள்­ளை­களும் உள்­நாட்­டி­லும் வெளி­நா­டு­களி­லும் வேலை பார்க்­கி­றார்­கள்.

“தமி­ழக ஆளு­நர் ஆர்.என். ரவி, சென்ற ஆண்டு திரு­வா­ வடு­துறை மடத்­திற்கு வந்து இப்­போதைய 24வது ஆதீ­ன­கர்த்­தரிடம் ஆசீர்­வா­தம் பெற்­றார்.

“என்­னைச் சந்­தித்து அந்த வர­லாற்று விவ­ரங்­க­ளைத் திரட்ட வேண்­டும் என்று விரும்பி, மாவட்ட ஆட்­சி­யர் மூலம் அவர் எனக்கு அழைப்பு விடுத்­தார்.

“சென்ற ஆண்டு ஜூலை­யில் சென்னை சென்று ஆளு­நரை ராஜ்பவனில் சந்­தித்­தேன்.

“ஒலி, ஒளிப்­ப­திவு செய்­தார்­கள். நான் தெரி­வித்த விவ­ரங்கள் எல்­லாம் வர­லாற்று ஆவ­ணங்­க­ளா கப் பதி­யப்­படும் என்று ஆளு­நர் கூறி­னார்,” என்­றார் திரு பிள்ளை.

திரு பிள்­ளை­யி­டம் பேசிய போது அவர் ைசவ நெறியாளராக மட்­டு­மன்றி இந்­தக் காலத்திற்கும் பொருத்தமானவராக வாழ்ந்து­வருவது தெரிந்­தது. எனக்கே வியப்பாகிவிட்டது. திரு பிள்ளை தம்பதியிடம் ஆசி வாங்­கி, புறப்­பட்ட­போது அவ­ரின் வாழ்க்கைப் பாணி பற்றி கேட்­டேன்.

“புரிந்­து­ணர்­வு­மிக்க மனைவி கிடைப்­பது பாக்­கி­யம். எனக்­குப் பெரும் பாக்­கி­யம் கிடைத்து இருக்­கிறது,” என்றாரவர்.

நட­மா­டும் வர­லா­றாக மட்டு மன்றி, பழ­மை­மிக்க திரு­வாவடு­ துறைக்கு ராஜ­ க­லை­யா­கவும் திரு பிள்ளை அவர்கள் திகழ்வதாக உடனிருந்தவர்கள் கூறி­னர்.

திரு மாசிலாமணி பிள்ளை தன் துணைவியார் ருக்மணி ஆச்சியுடன் தன் வீட்டிற்கு வெளியே.

திரு பிள்ளை, மடத்தில் ஏறக்குறைய 65 ஆண்டுகள் வேலை பார்த்துள்ளார். ஆறு பண்டார சன்னிதிகளை இவருக்குத் தெரியும். நால்வரின் கீழ் இவர் வேலை பார்த்து இருக்கிறார்.

1947ஆம் ஆண்டு. எனக்கு அப்போது 23 வயது. சென்னையில் இருந்து மடத்திற்கு ஒரு பெரிய பெட்டி வந்தது. செங்கோல் இருந்த அந்தப் பெட்டி, ஆதீனகர்த்தர் கட்டளையின்படி மடத்தில் திறக்கப்படவில்லை என்கிறார் திருவாவடுதுறையைச் சேர்ந்த திரு மாசிலாமணி பிள்ளை, 97.

திருவாவடுதுறை திரு மாசிலாமணி பிள்ளை, 97.

திருவாவடுதுறை ஆதீனம் நந்தி பரம்பரை யில் வந்தது என்பதால் செங்கோலின் உச்சியில் நந்தி இருக்கவேண்டும் என்று ஆதீனகர்த்தர் உத்தரவிட்டார். செங்கோல் இப்போது அலகாபாத் அருங்காட்சியகத்தில் இருக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!