‘இண்டியா’ கூட்டணிக்கு சோனியா தலைமை ஏற்கலாம்

புதுடெல்லி: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கி உள்ள ‘இண்டியா’ கூட்டணியின் தலைவராக சோனியா காந்தி நியமிக்கப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேபோல கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் நியமிக்கப்படுவார் என்றும் தெரிகிறது.

2024 ஏப்ரலில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளை ஒன்றுதிரட்டும் முயற்சியில் நிதிஷ்குமார் ஈடுபட்டார்.

அதன் விளைவாக, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், திமுக, ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, தேசியவாத காங்கிரஸின் சரத் பவார் அணி, சிவசேனாவின் உத்தவ் தாக்கரே அணி, தேசிய மாநாட்டுக் கட்சி, ஜேகேபிடிபி, ஆர்எஸ்பி, ஐயுஎம்எல், கேரள காங்கிரஸ் (எம்), சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, இடது முன்னணி ஆகியவை ஓரணியில் திரண்டுள்ளன.

தமது மாநிலத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர்களை வரவழைத்த நிதிஷ் குமார், பாட்னாவில் ஜூன் 23ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

தொடர்ந்து ஜூலை 17,18 தேதிகளில் பெங்களூருவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டத்தில் கூட்டணி உருவாக்கப்பட்டு, அதற்கு ‘இண்டியா’ (இந்தியன் நேஷனல் டெவலப்மென்ட்டல் இன்க்ளூசிவ் அலயன்ஸ்) என்று பெயரிடப்பட்டது.

இந்தக் கூட்டணியின் 3வது ஆலோசனைக் கூட்டம் மகாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பையில் ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் நடத்தப்பட இருக்கிறது.

கூட்டணியின் நிர்வாகிகள் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் இந்தக் கூட்டத்தில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

‘இண்டியா’ கூட்டணியை வழிநடத்திச் செல்லும் பொறுப்பை ஏற்கும் வகையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்தி கூட்டணித் தலைவராக அறிவிக்கப்படுவார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

அதேநேரம் 11 பிரதிநிதிகள் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழு ஒன்று ஏற்படுத்தப்படும் என்றும் அந்தக் குழுவுக்குத் தலைவராக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் நியமிக்கப்படுவார் என்றும் உறுதிபடுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!