மன்மோகன் சிங் உண்மையான அரசியல்வாதி: காங்கிரஸ் புகழாரம்

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மன்மோகன் சிங்கின் பேச்சைக் காட்டிலும் அவரது செயல்களே பேசுகின்றன என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், “2004 மற்றும் 2014 க்கு இடைப்பட்ட காலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியின் தலைமையிலான ஆட்சியில் பிரதமராக இருந்து நாட்டை வழிநடத்தினார்.

“1991-96 ஆம் ஆண்டில் பி வி நரசிம்ம ராவ் தலைமையிலான மத்திய அரசில், இந்தியாவின் நிதியமைச்சராகவும் இருந்தார், அந்தக் காலம் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய சீர்திருத்தங்களால் நாட்டின் பொருளாதாரம் மேம்பட்டதாக அமைந்திருந்ததாகக் கூறப்படுகிறது.

மன்மோகன் சிங் 1932ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி, இப்போது பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருக்கும் மேற்கு பஞ்சாப்பின் கா என்னும் இடத்தில் பிறந்தார்.

மன்மோகன் சிங்கின் 91வது பிறந்தநாளுக்கு வாழ்த்துத் தெரிவித்த காங்கிரஸ் தலைவர் கார்கே, அரசியலில் எளிமை, கண்ணியம் மற்றும் கருணைக்கு உதாரணமாக திகழ்பவர் என்று பாராட்டியுள்ளார்.

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தேசத்தைக் கட்டியெழுப்ப மன்மோகன் சிங்கின் பங்களிப்புகளை குறிப்பிட்டு பாராட்டியுள்ளார். முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் நேர்மை, தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவை எனக்கு எப்போதும் உத்வேகமாக இருக்கும்,” என்று ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், காங்கிரஸ் தலைவர்களும் பிரதமர் நரேந்திர மோடியும், மன்மோகன் சிங்குக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!