2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற கடைசி தேதி நீட்டிப்பு

புதுடெல்லி: புதிதாக புழக்கத்தில் விடப்பட்ட ரூ. 2000 நோட்டுக்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளப்படும் என்று கடந்த மே 10ஆம் தேதி இந்திய மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.

அதன்படி செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் வங்கிகளில் ரூ. 2000 நோட்டுக்களைக் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று அது கூறியிருந்தது.

சுமார் நான்கு மாதம் அவகாசம் இருந்த நிலையில் 93 விழுக்காடு ரூ. 2000 நோட்டுக்கள் திரும்பப் பெற்றுள்ளதாக செப்டம்பர் 1ஆம் தேதி ரிசர்வ் வங்கி தெரிவித்தது.

இந்த நிலையில் செப்டம்பர் 30ஆம் தேதி காலக்கெடு முடிவடைந்தது.

ஆனால் ரூ. 2000 நோட்டை மாற்றுவதற்கான காலக்கெடுவை நீட்டித்து புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதாவது அக்டோபர் 7ஆம் தேதி வரை ரூ. 2000 நோட்டுக்களை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம். இந்த நோட்டுக்களை தங்களுடைய வங்கிக் கணக்கிலும் வரவு வைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

அக்டோபர் 7ஆம் தேதி காலக்கெடுவுக்குப் பிறகும் ரிசர்வ் வங்கியின் 19 கிளைகளில் மட்டும் மாற்ற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது..

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!