கேரள ரயிலில் தீ வைத்தது தீவிரவாதச் செயல் - என்ஐஏ

கொச்சி: கேரள மாநிலத்தின் ஆலப்புழாவில் இருந்து கண்ணூரை நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயிலில் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி தீ வைக்கப்பட்டது. அந்தச் சம்பவம் ஒரு தீவிரவாதச் செயல் என்று தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) தெரிவித்து. அதுகுறித்து அந்த முகமை செப்டம்பர் 29ஆம் தேதி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் இவ்வாறு தெரிவித்துள்ளது.

சக பயணிகள் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கோழிக்கோடு காவல்துறை முதலில் வழக்குப் பதிவு செய்தது.

இதில் தொடர்புள்ளதாக நம்பப்படும் டெல்லியைச் சேர்ந்த ஷாருக் சைபி (27) என்பவரை மகாராஷ்டிரா காவல்துறை கைதுசெய்தது. இந்த வழக்கு ஏப்ரல் 17ஆம் தேதி தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டது.

கேரள ரயிலில் தீ வைத்த சம்பவம் தீவிரவாத செயல். இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சைபி மட்டுமே இந்த குற்றத்தை செய்துள்ளார். மக்களிடையே தீவிரவாத அச்சுறுத்தலை ஏற்படுத்துவதற்காக அவர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டதாக என்ஐஏ தனது குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது.

டெல்லியைச் சேர்ந்த சைபி, டெல்லியில் இதுபோன்ற செயலில் ஈடுபட்டால் எளிதில் காவல்துறையிடம் மாட்டிக்கொள்வோம் என்று நினைத்து, கேரளாவுக்குச் சென்று இந்தச் செயலை அரங்கேற்றியுள்ளார் எனவும் என்ஐஏ தெரிவித்துள்ளது.

டெல்லியின் ஷாஹீன் பாக் பகுதியைச் சேர்ந்த இவர், தன்னை யாரும் அடையாளம் கண்டுவிடக்கூடாது என்பதற்காக கேரளாவுக்குச் சென்று இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளார். பொதுமக்கள் மனதில் தீவிரவாத அச்சத்தை ஏற்படுத்திவிட்டு, சொந்த ஊருக்குத் திரும்பி சாதாரண வாழ்க்கைக்கு திரும்பிவிடலாம் என அவர் திட்டமிட்டுள்ளார்.

இதன்படி, அங்கிருந்து மகாராஷ்டிராவுக்குச் சென்றுள்ளார். ஆனால், அம்மாநிலத்தின் ரத்னகிரியில் காவல்துறையிடம் சிக்கியதாக என்ஐஏ-யின் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!