கேரளாவில் பிரார்த்தனைக் கூட்டத்தின்போது வெடிப்புகள்

கொச்சி: கேரளாவின் கலமசேரி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிறிஸ்துவ சமயப் பிரார்த்தனைக் கூட்டத்தின்போது வெடிப்புகள் ஏற்பட்டதை அடுத்து, குறைந்தது ஒருவர் மாண்டார். ஏறத்தாழ 23 பேர் காயமடைந்தனர். ஐவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

பிரார்த்தனைக் கூட்டம் தொடங்கி சில நிமிடங்களில் அந்த வெடிப்புகள் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பிரார்த்தனைக் கூட்டத்தில் கிட்டத்தட்ட 2,000 பேர் கலந்துகொண்டனர்.

மையத்தில் இருந்தவர்கள் வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது முதல் வெடிப்பு நிகழ்ந்ததாக அங்கிருந்தவர்கள் கூறினர்.

அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு வெடிப்புகள் நிகழ்ந்ததாக மையத்தில் இருந்த மூதாட்டி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தீப்பிடித்து எரிந்த மையத்திலிருந்து தீயணைப்புப் படையினரும் காவல்துறையினரும் பலரை மீட்பதைக் காணொளிக் காட்சிகள் காட்டின. சிறுவர்கள் உட்பட மையத்தில் இருந்தவர்கள் பயத்தில் அலறிய சத்தத்தை அவற்றில் கேட்க முடிந்தது.

காயமடைந்தோர் உடனடியாக மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டன.

வெடிப்பு நிகழ்ந்த மையத்தைச் சுற்று அதிகாரிகள் தற்போது தடுப்பு போட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வெடிப்புச் சம்பவத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்தார்.

இதுதொடர்பான விசாரணையை கேரளாவின் உயர் அதிகாரிகள் நடத்துவர் என்றும் மத்திய அரசாங்கத்தின்கீழ் செயல்படும் துறைகளிமிருந்து உதவி நாடப்படும் என்றும் அவர் கூறினார்.

சம்பவத்தில் காயம் அடைந்தவர்களுக்கு மிகச் சிறந்த சிகிச்சை அளிக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.

வெடிப்புக்கான காரணம், காரணமானவர் இன்னும் தெரியவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.

இஸ்‌ரேல்-பாலஸ்தீனம் போரின் எதிரொலியாக இந்தத் தாக்குதல் இருப்பதற்கான சாத்தியம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

விசாரணையை முழுமையாக நடத்திய பிறகே தாக்குதலுக்கான காரணம் தெரியவரும் என்று கேரள தொழில்துறை அமைச்சர் பி. ராஜீவ் தெரிவித்தார்.

இதையடுத்து, வெடிப்பின் காரணமாகக் காயமடைந்தோருக்குச் சிகிச்சை அளிக்க கேரளாவில் உள்ள சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் தயார்நிலையில் உள்ளனர். அம்மாநிலத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் ரத்த வங்கிகளும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

வெடிப்புகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் அதிர்ச்சி தெரிவித்தார். அதற்குக் காரணமாவர்களைக் கண்டுபிடிக்க கேரள காவல்துறை துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

அனைத்து சமயத் தலைவர்களும் ஒன்றிணைந்து இத்தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இதற்கிடையே, குண்டுவெடிப்பு சம்பவத்தில் கொச்சியை சேர்ந்தவர் திரிச்சூர் காவல் நிலையத்தில் சரணடைந்திருப்பதாக இந்திய ஊடகம் தெரிவித்தது. காவல் நிலையத்தில் சரணடைந்த அந்த நபரிடம் ரகசிய இடத்தில் கேரள காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கோட்டு வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!