நீதிமன்றம்: பணமோசடி குற்றச்சாட்டைக் காரணம் காட்டி பாஸ்போர்ட் புதுப்பிப்பை மறுக்கக்கூடாது

மும்பை: பணமோசடிக் குற்றச்சாட்டை எதிர்நோக்கும் ஒருவரது கடப்பிதழைப் புதுப்பிக்க அவர் எதிர்நோக்கும் குற்றச்சாட்டு வழக்குகளைக் காரணம் காட்டக்கூடாது. இவ்வாறு மும்பை நீதிமன்றம் ஒரு வழக்கில் தீர்ப்பளித்துள்ளது.

மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் மற்றும் அவரது மகன் சலில் தேஷ்முக் உள்ளிட்டோர் மும்பையில் உள்ள பார்கள் மற்றும் உணவகங்களில் இருந்து ரூ.4.70 கோடியை வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

மேலும், இந்த வழக்கில் இருவரது கடப்பிதழ்களையும் அமலாக்கத் துறை பறிமுதல் செய்தது.

இந்த நிலையில், கடந்த 2022 ஜனவரி மாதம் காலாவதியான தனது கடப்பிதழைப் புதுப்பிக்க உள்ளதால், அமலாக்கத்துறை கையகப்படுத்தி வைத்திருக்கும் தனது கடப்பிதழை ஒப்படைக்கக்கோரி நீதிமன்றத்தில் சலில் தேஷ்முக் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

நேற்றுமுன்தினம் அவரது மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, சலில் தேஷ்முக் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும், அவர் தலைமறைவாவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்றும் அதனால் மனுவை தள்ளுபடி செய்யக்கோரி அமலாக்கத் துறை சார்பில் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆர்.என். ரோகடே , “கடப்பிதழைப் புதுப்பிப்பதற்கான அனுமதியை மறுப்பதற்கு பணமோசடி தடுப்புச் சட்டப் பிரிவு 4-ன் கீழ் வழக்கு தொடர்ந்ததை மட்டும் போதிய காரணமாக கூற முடியாது.

எனவே, சலில் கடப்பிதழைப் புதுப்பிப்பதற்கு விண்ணப்பிக்க ஏதுவாக பழைய கடப்பிதழை வழங்க அமலாக்கத் துறைக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால், புதுப்பித்த பிறகு சலில் தனது புதிய கடப்பிதழை அத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும்,” என்று தீர்ப்பளித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!