குஜராத்தில் ஆயுர்வேத மருந்து குடித்த 5 பேர் உயிரிழப்பு

காந்திநகர்: குஜராத் மாநிலத்தின் கேதா மாவட்டத்தில் ஆயுர்வேத மருந்து குடித்து 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இவர்களைத் தவிர, மேலும் இரண்டு பேர் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுதொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், கேதா மாவட்டத்தில் உள்ள பிலோதரா என்னும் சிற்றூரில் உள்ள கடை ஒன்றில் “கல்மேகசாவ்- அசாவா அரிஷ்டா” என்கிற பெயரில் ஆயுர்வேத மருந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது.

இந்த மருந்து குறைந்தது 50 பேருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த மருந்தில் நச்சுத்தன்மை கொண்ட மெத்தில் ஆல்கஹால்’ என்கிற வேதிப்பொருள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும், அந்த மருந்தை உட்கொண்ட பிலோதாரவை சேர்ந்த ஒருவரின் ரத்த மாதிரியும் சோதனை செய்யப்பட்டது. அதில், மெத்தில் ஆல்கஹால் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேதா காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் காதியா தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக மேற்கொண்டு விசாரணைக்காக கடைக்காரர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!