பாஜக மாநிலங்கள் 12 ஆக உயர்ந்தது; காங்கிரஸ் மாநிலங்கள் 3ஆகக் குறைந்தது

புதுடெல்லி: ஐந்து மாநிலங்களுகளுக்கு சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அவற்றில் மிசோரம் தவிர்த்த நான்கு மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் பாஜக மூன்று தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. அதன்மூலம் பாஜக ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களின் எண்ணிக்கை மூன்றாகக் குறைந்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியை தக்க வைத்துள்ளது. ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் பாஜக தனித்து ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் மகாராஷ்டிரா, மேகாலயா, நாகாலாந்து மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் கூட்டணி ஆட்சியில் பாஜக அங்கம் வகிக்கிறது.

ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வியடைந்து, தெலுங்கானாவில் மட்டும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. எனவே, இனி கர்நாடகா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய 3 மாநிலங்கள் மட்டும் காங்கிரஸ் தனித்து ஆட்சி செய்யும் மாநிலங்களாக உள்ளது. இது தவிர பீகார் மற்றும் ஜார்க்கண்ட் கூட்டணி அரசில் காங்கிரஸ் அங்கம் வகிக்கிறது.

இந்நிலையில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் தேர்தலில் பாஜகவை வெற்றி பெற வைத்த மக்கள் முன்பாக தலைவணங்குகிறோம் என்று பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மிகப்பெரிய எதிர்க்கட்சியானது ஆம் ஆத்மி

இந்தத் தேர்தல் முடிவுகள் மூலம் , வட இந்தியாவில் மிகப் பெரிய எதிர்க்கட்சியாக ஆம் ஆத்மி உருவெடுத்துள்ளது.

பஞ்சாப், டெல்லி ஆகிய இரு மாநிலங்களில் ஆட்சி செய்யும் கட்சியாக ஆம் ஆத்மி உள்ளதால், வட இந்தியாவில் மிகப் பெரிய எதிர்கட்சி ஆம் ஆத்மி என அக்கட்சியின் மூத்த தலைவர் ஜாஸ்மின் ஷா, எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

2024ஆம் ஆண்டில் சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா மற்றும் ஆந்திராவில் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெறவுள்ளன. ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலும் நிலுவையில் உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!