டெல்லியை வாட்டிய கடும் குளிர்: இந்தப் பருவத்தில் பதிவான மிகக் குறைந்த வெப்பநிலை

புதுடெல்லி: தேசிய தலைநகர் டெல்லியில் இந்தப் பருவத்தின் மிகவும் குளிரான காலை என வெள்ளிக்கிழமை காலை (ஜனவரி 12) பதிவானது.

டெல்லியின் குறைந்தபட்ச வெப்பநிலை 3.8 டிகிரி செல்சியசாக இருந்தது. அடர்பனி போர்வை போல நகரின் மீது படர்ந்து காணப்பட்டதால் காட்சி தெரியும்நிலை பூஜ்ஜியமாக இருந்தது. இதனால் ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

டெல்லியில் கடும் குளிா், அடா்த்தியான மூடுபனி, தெளிவற்ற பார்வைத் திறன் தொடர்ந்து நிலவி வருவதால், டெல்லிக்கு வரவேண்டிய ரயில்களில் ஏறக்குறைய 39 ரயில்கள் 6 மணிநேரம் வரை தாமதமாக இயங்கும் என வடக்கு ரயில்வே அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலைய பகுதியில் பனிமூட்டம் காரணமாக காட்சி தெரியும் நிலை பூஜ்ஜியமாக இருந்தது.

விமானங்கள் புறப்பாடு மற்றும் வருகை ஒன்றிலிருந்து நான்கு மணிநேரம் வரை தாமதமாகின. விமானம் தொடர்பான தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளுமாறு பயணிகளுக்கு டெல்லி விமான நிலையம் வலியுறுத்தியுள்ளது.

டெல்லியில் பகல் நேரத்திலும் மிதமான மூடுபனி நிலவியதை அடுத்து, மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடும் பனிமூட்டம் காரணமாக வடமாநிலங்களுக்கு வெள்ளிக்கிழமை (ஜனவரி 12) ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், உத்தரப்பிரதேசம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் இரு நாள்களுக்கு பனிமூட்டம் நிலவும்; இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார், மேற்கு வங்கத்தில் அடர் பனி நீடிக்கும்; ராஜஸ்தான் மாநிலத்தில் கடும் குளிர் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் குளிர்நிலை குறைவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. அடர்பனி காரணமாக காட்சி தெரியும் நிலை பூஜ்ஜியம் நிலையில் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே வியாழக்கிழமை டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 5.8 டிகிரி செல்சியசாக இருந்தது. அது சராசரி வெப்பநிலையை விட இரண்டு டிகிரி குறைவாகவும், அதிகபட்ச வெப்பநிலை 18.1 டிகிரி செல்சியசாக இருந்தது. இதுவும் சராசரியை விட இரண்டு டிகிரி குறைவு.

இதனிடையே வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனவரி 12 முதல் 16ஆம் தேதி வரை பஞ்சாப்பின் சில பகுதிகள் மற்றும் ஹரியானா மற்றும் சண்டிகாரின் உள்ளடங்கிய பகுதிகளில் காலை சில மணி நேரங்களுக்கு அடர்த்தி முதல் மிக அடர்த்தியான பனி மூட்டம் நிலவும்.

அதேபோல், ஜனவரி 12ஆம், 13ஆம் தேதிகளில் கிழக்கு உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு உத்தரப்பிரதேசத்தின் உள்ளடங்கிய பகுதிகளில் காலையில் சில மணி நேரங்களுக்கு அடர்த்தி மற்றும் மிக அடர்த்தியான பனி மூட்டம் காணப்படும். ஜனவரி 12, 13 தேதிகளில் இமாச்சலப்பிரதேசம், உத்தராகண்ட், பீகார், மேற்கு வங்கத்தின் இமாலயப்பகுதிகள், சிக்கிம், வடக்கு மத்தியப் பிரதேசம் பகுதிகளிலும், ஜனவரி 12 முதல் 16ஆம் தேதி வரை அசாம், மேகாலயா, மிசோரம், மற்றும் திரிபுரா பகுதிகளில் மிகவும் அடர்த்தியான பனி மூட்டம் காணப்படும்.

ஜனவரி13 முதல் 15ஆம் தேதி வரை பஞ்சாப்பின் உள்ளடங்கிய பகுதிகளில் குளிர்நிலை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!