நிதிப் பகிர்வைத் தீர்மானிப்பது நான் அல்ல: நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி: மக்களவையில் திங்கட்கிழமை (பிப்ரவரி 5) நிகழ்வின்போது பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கு நிதி பகிர்வில் ஓரவஞ்சனை காட்டப்படுவதாக காங்கிரஸ் மக்களவை குழுத் தலைவர் ஆதிரஞ்சன் சவுத்ரி குற்றம் சாட்டினார்.

இதற்கு பதில் அளித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.

“ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு நிதி வழங்கப்பட வேண்டும் என்பதை தீர்மானிப்பது நான் அல்ல; நிதிக்குழுதான். நிதிக்குழுவும் தாங்களாகவே பகிர்ந்து அளிக்கப்பட வேண்டிய நிதி குறித்து முடிவு செய்வதில்லை. அனைத்து மாநிலங்களுக்கும் நிதிக்குழு அதிகாரிகள் நேரில் சென்று கலந்து ஆலோசனை செய்து அறிக்கை சமர்ப்பிக்கின்றனர்.

“நிதிக்குழு பரிந்துரைப்பதைதான் நான் பின்பற்றுகிறேன். நிதிக்குழுவின் பரிந்துரையைதான் ஒவ்வொரு நிதி அமைச்சரும் பின்பற்றுகிறார்கள். பிடித்த மாநிலம், பிடிக்காத மாநிலத்திற்கு ஏற்றார்போல நிதியை மாற்றுவதற்கு எனக்கு எந்த உரிமையும் இல்லை. மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் எவ்வித பாகுபாடும் காட்டவில்லை,” என்று திருமதி நிர்மலா பேசினார்.

அதனை தொடர்ந்து 2024-25ம் ஆண்டிற்கான ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் மதிப்பிடப்பட்ட வரவுகள் மற்றும் செலவினங்களின் அறிக்கையை மக்களவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மேலும் 2023-24ம் ஆண்டிற்கான மானியங்களுக்கான துணை கோரிக்கைகள், இரண்டாம் தொகுதியைக் காட்டும் அறிக்கையை வழங்கினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!