300 பெண்களுடன் உல்லாசம்: பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம்

பெங்களூரு: முந்நூற்றுக்கும் அதிகமான பெண்களுடன் உல்லாசமாக இருந்தது தொடர்பான காணொளிகள் வெளியான நிலையில், தேவகவுடாவின் பேரனும் ஜேடிஎஸ் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணாவை மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி இடைநீக்கம் செய்துள்ளது.

கர்நாடக மாநிலம், ஹூப்ளியில் நடைபெற்ற மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் உயர்மட்டக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 30) இந்த முடிவு எடுக்கப்பட்டது.

பாஜக கூட்டணியுடன் கைகோத்து ஜேடிஎஸ் வேட்பாளராக ஹாசனில் ரேவண்ணா போட்டியிட்டுள்ள சூழலில், தற்போது கட்சியில் இருந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடகா முன்னாள் முதல்வர் தேவகவுடாவின் மகன் ரேவண்ணா. முன்னாள் அமைச்சரான இவர், ஹாசன் மாவட்டம், ஹொலேநரசிப்புரா எம்எல்ஏவாக தற்போது உள்ளார். இவரது மகன் பிரஜ்வல் ரேவண்ணா. இவர் ஜேடிஎஸ் கட்சியின் ஹாசன் மக்களவைத் தொகுதி எம்.பி.யாக உள்ளார்.

அவர் தற்போது நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து ஹாசன் தொகுதியில் ஜேடிஎஸ் கட்சி சார்பில் போட்டியிட்டுள்ளார். கடந்த 26ஆம் தேதி இந்தத் தொகுதிக்கு தேர்தல் முடிவடைந்தது.

இந்தச் சூழலில், பெண்களுடன் ரேவண்ணா நெருக்கமாக இருக்கும் ஆபாசக் காணொளிகள் தீயாகப் பரவத் தொடங்கியது.

ரேவண்ணாவின் கட்சியில் உள்ள பெண்கள், உதவி கோரி வரும் பெண்கள், அரசுப் பெண் அதிகாரிகள் என 300க்கும் மேலானோருக்குப் பாலியல் தொல்லை கொடுத்து, அதனை காணொளியாக எடுத்து வைத்துக்கொண்டு மீண்டும் மீண்டும் காட்டி பாதிக்கப்பட்டோரை மிரட்டியதாகவும் இதுதொடர்பாக 2,976 காணொளிகளை அவர் ‘பென்டிரைவில்’ சேமித்து வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தக் காணொளிகளில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் பெண் அரசு அதிகாரிகள் என்ற அதிர்ச்சித் தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.

இதனிடையே, அவர் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றுவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆபாசக் காணொளிகள் குறித்து விசாரணை நடத்தும்படி சிறப்பு விசாரணை குழுவை நியமித்து கர்நாடக அரசு உத்தரவிட்டது. அவர்கள் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஆபாசக் காணொளி சர்ச்சையில் சிக்கியுள்ள ரேவண்ணாவை விசாரணை முடியும் வரை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் உயர்மட்டக் குழுத் தலைவர் தேவ கவுடா, “ரேவண்ணாவுக்கு எதிராக சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். இந்த விசாரணை முடியும்வரை அவரைக் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்ய பரிந்துரை செய்துள்ளோம்,” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், மஜத கட்சித் தலைவருமான ஹெச்.டி.குமாரசாமி, “சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணை முடியும் வரை பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்,” என்றார்.

முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த ஹெச்.டி.குமாரசாமி, “எங்கள் குடும்பத்தின் நற்பெயரைக் கெடுக்க காங்கிரஸ் செய்த சூழ்ச்சியே இது. எனக்கோ, தேவகவுடாவுக்கோ இதில் எந்தப் பங்கும் இல்லை. இவை எதற்கும் நாங்கள் பொறுப்பல்ல.

“இது ரேவண்ணாவின் தனிப்பட்ட பிரச்சினை. நான் ரேவண்ணாவுடன் தொடர்பில் இல்லை. அவரை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியது மாநில அரசின் பொறுப்பு. ரேவண்ணாவை நாங்கள் பாதுகாக்கப் போவதில்லை. அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம்,” என்று கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!