நல்ல உறக்கத்திற்கு மூளைக்குப் பயிற்சி அளிக்க உதவும் மூன்று குறிப்புகள்

இன்றைய பரபரப்பான உலகில் உறக்கமின்மை என்பது தீராத நோயாக இருந்து வருகிறது.

நமது முன்னோர்கள் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு உறங்க ஆரம்பித்து சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து ஆரோக்கியமாக வாழ்க்கையை வாழ்ந்தார்கள்.

இன்றும் கிராமப்புறங்களில் இந்த வழக்கம் இருந்து வந்தாலும் காலப்போக்கில் மறைந்து வருகிறது.

இயற்கையான சூரிய ஒளிக்குப் பதிலாக இன்று கணினி, தொலைக் காட்சி, கைபேசி, விளையாட்டுச் சாதனங்களிலிருந்து வீசும் நீல நிற ஒளி உறக்கத்தைக் கெடுத்து வரு கிறது. இயற்கை அளித்த உறக்கத்தை தற்போதைய செயற்கை சாதனங்கள் மாற்றிவிட்டன. அந்த சுகமான நேரத்தை மீண்டும் பெற வேண்டுமானால் அதற்கு ஏற்ப நமது மூைளயைப் பழக்க வேண்டும்.

அதற்கு மூன்று குறிப்புகளைத் தருகிறார் அரிசோனா பல்கலைக் கழகத்தின் மனோவியல் மற்றும் உறக்க நிபுணர் மைக்கல் கிராண்ட்னர்.

சூழ்நிலைக்கு ஏற்ப தூக்கத்தை வரவழைக்க முடியும். அதனால் உங்களுக்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்குங்கள். அடிக்கடி இதைச் செய்தால் மூளை அதற்குப் பழகி உறக்கம் வரும் என்று அவர் கூறுகிறார்.

உறக்கத்திலிருந்து

எழும் பழக்கம்:

மெல­டோ­னின் எனும் ஹார்­மோன் உறக்­கம் வரும்­போ­தும் உறக்­கத்திலிருந்து எழும்­போதும் உட­லில் சுரக்கிறது. இரவு நேரத்­தில் மெல டோனின் அளவு அதி­க­ரித்து, 'உறங்­கு­வ­தற்­கான நேரம் வந்து விட்­டது' என முக்­கிய சமிக்­ஞையை அது அனுப்­பு­கிறது. இர­வில் மெல டோனின் சுரப்பி நின்­று­வி­டு­கிறது. இத­னால் மெல­டோ­னின் அளவு குறைந்து பகல் நேர வெளிச்­ச­மும் நெருங்­கு­வ­தால் உறக்­கம் போய் விடு­கிறது. மெல­டோ­னின் குறிப்பிட்ட நேரத்­தில் மட்­டுமே சுரக்­கிறது. உறங்­கச் செல்­லும் நேர­மும் எழுந் திருக்­கும் நேர­மும் மாறி­னால் வழக்­க­மான உறங்க வேண்­டிய நேரத்தை உடல் கணிக்க முடி­யா­மல் போய்­வி­டும்.

இத­னால் உறங்­கும் நேர­மும் எழுந்­தி­ருக்­கும் நேர­மும் மாறா­மல் இருப்­பது அவ­சி­யம். நல்ல உறக்­கம் வராத இர­வி­லும் குறிப்­பிட்ட நேரத்­தில் எழ பழக வேண்­டும்.

"தூக்­கம் வரும் நேரத்தை நாம் கட்­டுப்­ப­டுத்த முடி­யாது. ஆனால் எழுந்­தி­ருக்­கும் நேரத்­தைக் கட்­டுப் படுத்த முடி­யும். எழுந்­தி­ருக்­கும் நேரத்தை நாம் கட்­டுப்­ப­டுத்­தி­னால் மூளை சிறிய கெடி­கா­ரம் போலச் செயல்­பட்டு தூங்­கு­வ­தற்­கான நேரத்தை அமைத்­துக் கொடுக்­கும்.

"உறக்­கம் குறிப்­பிட்ட நேரத்­தில் இருப்­ப­தை­யும் அதை முன்­கூட்­டியே கணிப்­ப­தை­யும் மூளை விரும்­பு­கிறது. தின­மும் குறிப்­பிட்ட நேரத்­தில் எழுந்­தி­ருக்க வேண்­டும், எழுந்த வுடன் சில உடல் அசை­வு­களில் ஈடு­பட வேண்­டும். அப்­ப­டிச் செய்­து­வந்­தால் உறங்­கு­வ­தற்­கான நேரத்தை மூளை ஏற்­ப­டுத்­தித் தரும்," என்று கிராண்ட்­னர் கூறு கிறார்.

படுக்­கை­யில் தூங்­கா­மல்

விழித்­தி­ருக்­கா­தீர்­கள்:

படுத்த பிறகு தூங்­கா­மல் விழித்­தி­ருக்­கக் கூடாது. இது­தான், தூக்­கம் வரு­வ­தற்­கான சிறந்த குறிப்பு என்று கூறு­கி­றார் கிராண் ட்னர்.

இரவு தொடங்­கும் நேர­மாக இருந்­தா­லும் நள்­ளி­ர­வாக இருந்­தா­லும் தூக்­கம் போய்­விட்­டால் எழுந்­தி­ருக்க வேண்­டும். படுக்கை யிலேயே புரண்டு புரண்டு உறங் காமல் இருக்­கக் கூடாது. படுக்கை யிலேயே தூங்­கா­மல் இருந்­தால் மூளை அதற்­குப் பழகிவிட­லாம். இத­னால் தூக்கமின்­மைக்கு வழி வகுக்­கும். அமை­தி­யாக உறங்க வேண்­டிய இடம், அப்­ப­டி­யும் இப்­ப­டி­யும் திரும்­பிப் படுத்து சோர்­வு­டன் எழுந்­தி­ருக்­கும் இட­மாக மாறி­வி­டும் என்று கிராண்ட்­னர் தெரி­வித்­தார்.

படுக்­கையை உறங்­கு­வ­தற்­கான இட­மாக வைத்­துக்கொள்ள வேண்­டும். சீக்­கி­ர­மாக உறங்­கச் செல்­வது நல்­லது என்­றும் அவர் கூறு­கி­றார்.

தூக்­கத்­தைப் பற்­றிய

எண்­ணத்தை மாற்­றுங்­கள்:

வீட்டு வேலை, பள்ளி வேலை, அலு­வ­லக வேலை, தொலைக்­காட்சித் தொடர்­களைப் பார்ப்­பது என எல்­லா­வற்­றை­யும் முடித்த பிறகு தூக்­கத்தை இறுதி வேலை­யாக பலர் வைத்­தி­ருக்­கி­றார்­கள். அந்த எண்­ணத்தை மாற்ற வேண்­டும் என்­கி­றார் கிராண்ட்­னர்.

ஒரு நாள் முழுவதும் எல்லா வேலைகளையும் முடித்த பிறகு எஞ்சிய நேரத்தில் மட்டுமே தூங்க வேண்டும் என்ற எண்ணம் கூடாது. உங்களுடைய தூக்கத்திற்கு போது மான நேரம் இருக்க வேண்டும். மறுநாள் பயனுள்ளதாக இருக்க வேண்டுமானால் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும்.

பெரும்பாலான பெரியவர்களுக்கு முழுமையாக உறங்க ஏழு முதல் எட்டு மணி நேரம் தேவைப்படுவதாக அமெரிக்காவின் நோய்க் கட்டுப் பாட்டு, தடுப்பு நிலையத்தின் தகவல் தெரிவிக்கிறது.

இதன்படி ஒருவர் காலை 7.00 மணிக்கு எழுந்திருக்க வேண்டு மானால் எட்டு மணி நேரத்திற்கு முன்னதாக இரவு 11.00 மணிக் கெல்லாம் உறங்கச் செல்ல வேண்டும்.

இதை ஒழுங்காக பின்பற்ற வில்லை என்றால் மறுநாள் மன அழுத்தத்தை உண்டாக்கும் என்று கிராண்ட்னர் கூறுகிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!