தமிழ் வரலாற்று ஆர்வலர் சுப்பையா லெட்ச்சுமணன் மறைவு

பொன்­மணி உத­ய­கு­மார்

சிங்­கப்­பூர் தமி­ழர் வர­லாற்று ஆர்­வ­லர் சுப்­பையா லெட்ச்­சு­ம­ணன் நேற்று முன்­தி­னம் மார­டைப்­பால் கால­மா­னார். அவ­ருக்கு வயது 59.

அவர்­தம் பெற்­றோர், மனைவி, மகள், மகன், குடும்­பத்­தி­னர் ஆகி­யோரை விட்­டுச் சென்­றுள்­ளார்.

சிங்­கப்­பூர் இந்­திய மர­பு­டைமை, இங்­குள்ள தமி­ழர் வர­லாறு, செட்­டி­யார் சமூ­கம் ஆகி­ய­வற்­றில் ஆர்­வம் அதி­க­முள்ள திரு லெட்ச்­சு­ம­ணன், சிங்­கப்­பூர் இந்­தி­யச் சமூ­கத்­தின் வர­வாற்­றைப் பதிவு செய்து எடுத்­து­ரைப்­ப­தில் அளப்­ப­ரிய பங்­காற்­றி­ய­வர்.

“ஒரு நூற்­றாண்­டுக்கு மேலாக சிங்­கப்­பூ­ரில் வசித்­து­வ­ரும் அவ­ரது குடும்­பம் பாது­காத்து வந்த பழ­மை­யான பொக்­கி­ஷங்­கள் பல­வற்றை அருங்­காட்­சி­ய­கங்­க­ளுக்கு அவர் வழங்­கி­யுள்­ளார்.

அருங்­காட்­சி­ய­கங்­க­ளின் தொண்­டூ­ழி­யர்­க­ளுக்கு சிங்­கப்­பூர் இந்­தி­ய­ரின் வர­லாற்­று­டன் செட்­டி­யார் சமூ­கத்­தின் வர­லாறு குறித்த தக­வல்­க­ளை­யும் அவர் கற்­றுத் தந்­துள்­ளார்,” என்று அந்­தாதி எனும் ஆய்வு நிறு­வ­னத்­தின் நிறு­வ­ன­ரும், ஆய்­வா­ள­ரு­மான நளினா கோபால் கூறி­னார்.

திரு லெட்ச்­சு­ம­ணன், சிங்­கப்­பூர் மர­பு­டைமை வளர்ச்­சிக்கு பெரும் பங்­காற்­றி­ய­வர் என்­றும் அவர் ஓர் அரிய மனி­தர் என்­றும் திரு­வாட்டி நளினா வரு­ணித்­தார்.

“நிதித்­துறை நிபு­ண­ரா­கிய திரு லெட்­ச்சு­ம­ணன் ஒரு சீரிய வர­லாற்­றா­ள­ரா­க­வும் தொண்­டாற்றி வந்­தார். தொடக்க கால இந்­தி­யச் சமூ­கத்­தைப் பற்றி, குறிப்­பா­கச் செட்­டி­யார் சமூ­கம் பற்றி சுவை­யான பல தக­வல்­களை அவர் அளித்­துள்­ளார். அக்­கா­ல­கட்­டத்­தில் தமிழ்த் தலை­வர்­க­ளைப் பற்­றி­யும் பதி­வு­செய்­துள்­ளார்,” என்­றார் சிங்­கப்­பூர்த் தமிழ்ப் பண்­பாட்டு மையத்­தின் தலை­வர் அருண் மகிழ்­நன். திரு லெட்ச்­சு­ம­ணன், அவ்­வ­மைப்­பில் செயல்­பட்டு வந்­தார்.

திரு லெட்ச்­சு­ம­ண­னின் மறைவு இந்­திய சமூ­கத்­திற்­குப் பேரி­ழப்பு என்­றும் திரு அருண் குறிப்­பிட்­டார்.

“1970களில் மறைந்­து­போன கிட்­டங்­கி­களைச் சுற்­றிய செட்­டி­யார் சமூ­கத்­தின் வாழ்­வி­ய­லைத் துல்­லி­ய­மாக அவர் ஆய்வு செய்­தார்,” என்று சிராங்­கூன் டைம்ஸ் மாத இதழின் ஆசிரியர் முகம்­மது காசிம் ஷாந­வாஸ் ஃபேஸ்புக்கில் பதி­விட்­டார்.

இன்று பிற்­ப­கல் 4.45 மணிக்கு 33 மூன்­பீம் வாக் சிங்­கப்­பூர் 277243 எனும் முக­வ­ரி­யி­லி­ருந்து புறப்­படும் திரு சுப்­பையா லெட்ச்சு­ம­ண­னின் நல்­லு­டல் மாண்­டாய் தக­னச்­சா­லைக்கு எடுத்­துச்­செல்­லப்­பட்டு மண்­ட­பம் 4ல் மாலை 5.45 மணி­ய­ள­வில் தக­னம் செய்யப்படும் என்று அவ­ரது குடும்­பத்­தார் தெரி­வித்­த­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!