மீண்டும் மக்கள் வெள்ளத்தில் மகா சிவராத்திரி கொண்டாட்டம்

மோன­லிசா

ஈராண்­டு­க­ளாக பெருந்­தொற்­றுக் கட்­டுப்­பா­டு­க­ளு­டன் மகா­ சி­வ­ராத்­திரி வழி­பாடு நடை­பெற்­று­வந்த நிலை­யில், இவ்­வாண்டு கட்­டுப்­பா­டு­கள் அகன்­றதை அடுத்து, 15,000க்கும் மேற்­பட்ட பக்­தர்­கள் கேலாங் ஈஸ்ட் வட்­டா­ரத்­தி­லுள்ள ஸ்ரீ சிவன் கோயில் வழி­பாட்­டில் கலந்­து­கொண்­ட­னர்.

கேலாங் ஈஸ்ட் அவென்யூ 2ல் உள்ள ஸ்ரீ சிவன் கோயி­லில் நேற்று நடை­பெற்ற மகா­ சி­வ­ராத்­திரி கொண்­டாட்­டங்­களில் 5,000க்கும் மேற்­பட்ட பக்­தர்­கள் பால்­கு­டங்­கள் எடுத்து காணிக்கை செலுத்­தி­னர்.

நேற்று இரவு 7 மணி­ய­ள­வில் முதல்­கால பூஜை தொடங்­கிய வழி­பா­டு­கள் இன்று மாலை 5.30 மணிக்கு நடை­பெ­றும் திருக்­கல்­யாண பெரு­வி­ழா­வு­டன் நிறை­வு­பெ­றும். முன்­ன­தாக நேற்று முன்­தி­னம் மாலை 6.30 மணி­ய­ள­வில் ரதப் புறப்­பா­டும் நேற்று பிற்­ப­கல் 3.30 மணி­ய­ள­வில் பிர­தோஷ வழி பாடும் நடை­பெற்­றன.

இவ்­வி­ழா­விற்கு சிறப்பு விருந்­தி­ன­ராக வரு­கை­ய­ளித்த சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் பால்­கு­டம் செலுத்தினார்.

பல இன, பல சமய நல்­லி­ணக்­கத்­தைப் பிர­தி­ப­லிக்­கும் வித­மாக பிற இனத்­த­வர் பல­ரும் இவ்­வ­ழி­பாட்­டில் கலந்­து­கொண்­ட­னர்.

அவ்­வ­கை­யில் தமது மொத்த குடும்ப உறுப்­பி­னர்­கள் 14 பேரு­டன் பால்­கு­டங்­கள் ஏந்தி வழி­பாட்­டில் கலந்­து­கொண்­டார் சீன­ரான 58 வயது லாரன்ஸ் டான்.

பத்து ஆண்­டு­க­ளுக்­கும் மேல் இவ்­வ­ழி­பாட்­டில் தவ­றா­மல் கலந்து­கொள்­வ­தா­க­வும் சிவ­னைத் தரி­சிக்க தொடங்­கி­ய­பின் தங்­கள் குடும்­பத்­தின் நல்­வாழ்வு மேலோங்­கி­யுள்­ள­தைக் என்று தாம் நம்­பு­வ­தா­க­வும் நெகிழ்ச்­சியுடன் கூறி­னார் ஓட்­டு­ந­ரான திரு டான்.

“கோயி­லின் குட­மு­ழுக்கு ஈராண்­டு­களில் நடை­பெ­றும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. மேலும், கோயி­லின் மறு­சீ­ர­மைப்­புப் பணி­க­ளின் முதற்­கட்­டம் தொடங்­கி­யுள்­ளது. இந்நிலை­யில் பக்­தர்­க­ளின் வழிபாட்டில் எந்த இடை­யூ­றும் ஏற்­ப­டாத வண்­ணம் ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டுள்­ளன,” என்று ஸ்ரீ சிவன் கோயி­லின் தலை­வர் யோக­நா­தன் அம்­மை­யப்­பன் கூறி­னார்.

“சனி மகா பிர­தோ­ஷ­மும் மகா­ சி­வ­ராத்­தி­ரி­யும் பல ஆண்­டு­க­ளுக்கு பிறகு ஒரே நாளில் அமைந்­தது இவ்­வாண்டு வழி­பாட்­டின் கூடு­தல் சிறப்­பம்­சம். மேலும் ஈராண்­டு­க­ளுக்குப் பிறகு கட்­டுப்­பா­டு­கள் ஏதும் இல்­லா­மல் கலை­நி­கழ்ச்­சி­க­ளு­டன் நடை­பெற்ற வழி­பாட்­டில் பலர் கலந்­து கொண்டு மகிழ்ந்­த­னர்,” என்று கோயி­ல் துணைத் தலை­வர் சுசிலா கணே­சன் குறிப்­பிட்­டார்.

சென்ற ஆண்டு நடை­பெற்ற சிவ­ராத்­திரி விழா­வில் 170,000 ருத்­ராட்ச மணி­க­ளால் ஆன சிவ­லிங்­கம் அமைக்­கப்­பட்­டி­ருந்­தது.

இவ்­வாண்டு மறு­சு­ழற்சி முறை­யில் அந்த மணி­கள் அலங்­கார அணி­க­லன்­க­ளாக மாற்­றப்­பட்டு பக்­தர்­க­ளுக்­காக விற்­ப­னைக்கு வைக்­கப்­பட்­டி­ருந்­தன.

“அணி­க­லன்­க­ளின் விற்­ப­னை­யி­லி­ருந்து ஈட்­டப்­படும் தொகை கோயி­லின் குட­மு­ழுக்கு தேவை­க­ளுக்­கா­கப் பயன்­ப­டுத்­தப்­படும். முழுக்க முழுக்க தொண்­டூ­ழி­யர்­க­ளால் செய்­யப்­பட்ட இந்­த­மு­யற்­சி­யில் பங்­கு­கொண்­டது மிகுந்த மகிழ்ச்­சி­ய­ளிக்­கிறது,” என்று ஸ்ரீ சிவன் கோயி­லில் கடந்த 17 ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக தொண்­டூ­ழி­யம் செய்­து­வ­ரும் 35 வயது ஆண் தாதி அருள்­கு­மார் உல­க­நா­தன் கூறி­னார்.

1980களில் ஸ்ரீ சிவன் கோயி­லின் முதல் குட­மு­ழுக்­கில் தொண்­டூ­ழி­ய­ரா­கச் சேவை­யாற்­றிய ராஜ­மோ­கன் பழ­னி­யப்­பன், ஒவ்­வோர் ஆண்­டும் தவ­றா­மல் மகா ­சி­வ­ராத்­திரி வழி­பாட்­டில் கலந்­து­கொள்­வது வழக்­கம்.

முதன்மை தொழில்­நுட்­ப­வி­ய­லா­ள­ரா­கப் பணி­பு­ரி­யும் 67 வயது திரு ராஜ­மோ­கன், “இக்­கோ­யில் என் மன­திற்கு நெருக்­க­மா­னது. கொவிட்-19 சூழல் முடிந்து நல்ல முறை­யில் மீண்­டு­வர அருள்புரிந்த இறை­வ­னுக்கு நன்றிகூற வந்தேன்,” என்று கூறி­னார்.

இதே­போல சிங்­கப்­பூ­ரி­லுள்ள பல்­வேறு சிவன் கோயில்­க­ளி­லும் ஆயி­ரக்­க­ணக்­கான பக்­தர்­கள் நேற்று மாலை முதல் இன்று அதி­காலை வரை கண்­வி­ழித்து வழி­பா­டு­களில் கலந்துகொண்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!