ஒலிம்பிக்கில் முதல்முறையாக மின்னிலக்க விளையாட்டுகள்

உலகின் முதல் மின்னிலிக்க விளையாட்டுகளுக்கான ஒலிம்பிக் போட்டி இவ்வார வியாழக்கிழமையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை வரை சன்டெக் சிங்கப்பூர் கண்காட்சி மையத்தில் நடைபெறுகிறது. 

100க்கும் மேற்பட்ட விளையாட்டாளர்கள் 10 மெய்நிகர் விளையாட்டுகளில் போட்டியிட உள்ளனர். 

அனைத்துலக ஒலிம்பிக் வாரியத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இப்போட்டி மின்னிலக்க விளையாட்டாளர்கள் மத்தியில் பலத்த விமர்சனத்தைப் பெற்று வருகிறது.

இப்போட்டியில் இடம்பெறும் விளையாட்டுகள் பாரம்பரிய விளையாட்டு வடிவங்களின் மெய்நிகர் வடிவங்களாக உள்ளனவே தவிர மின்னிலக்க விளையாட்டுகளுக்கான போட்டியாக இல்லையென்று பல மின்னிலக்க விளையாட்டாளர்கள் குரல் எழுப்பியுள்ளனர்.

பிரபல மின்னிலக்க விளையாட்டுகளான “டோட்டா 2”, “லீக் ஆப் லெஜெண்ட்ஸ்”, “ஃபிஃபா” போன்ற விளையாட்டுகள் இப்போட்டியில் சேர்க்கப்படாததே இதற்கு காரணமாகக் கருதப்படுகிறது. 

சில மின்னிலக்க விளையாட்டாளர்கள் வன்முறை நிறைந்த விளையாட்டுகள் ஒலிம்பிக் வாரியத்தின் கொள்கைகளுக்கு எதிரானவையாக இருப்பதால் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். 

சிங்கப்பூரை “ஃபிஃபா” விளையாட்டில் பல முறை பிரதிநிதித்துள்ள திரு அம்ரான் காணி, அவ்விளையாட்டு போட்டியில் இல்லாதது ஆச்சரியமளிப்பதாகக் கூறினார்.

உலகின் ஆக பிரபல விளையாட்டின் மின்னிலக்க வடிவான “ஃபிஃபா” எதிர்காலத்திலாவது போட்டியில் சேர்த்துக்கொள்ளப்படும் என்று கடல்சார் துறையில் செயற்பாட்டு மேலாளராக பணிபுரியும் அவர் நம்புகிறார். 

அவரது விளையாட்டு போட்டியில் இல்லையென்றபோதிலும், அனைத்துலக ஒலிம்பிக் வாரியம் மின்னிலிக்க விளையாட்டுகளை அங்கீகரித்து இத்தகையப் பிரம்மாண்டமான போட்டியை நடத்துவது மனதிற்கு மகிழ்ச்சியளிப்பதாக அவர் கூறினார். 

வேறு சில விளையாட்டாளர்களுக்கு மாறாக, திரு அம்ரான் இப்போட்டியில் மெய்நிகர் விளையாட்டுகளின் சேர்ப்பு மின்னிலிக்க விளையாட்டு சூழலை மேலும் வலுப்படுத்தும் என்று நம்புகிறார்.

இம்மெய்நிகர் விளையாட்டுகள் அதிகளவிலான ரசிகர்களை மின்னிலக்க விளையாட்டுகளின் பக்கம் ஈர்க்குமென அவர் எண்ணுகிறார். 

ஆனால், சற்று பிரபலமற்ற மெய்நிகர் விளையாட்டுகளுக்கு எவ்வாறு போட்டியாளர்களை ஒலிம்பிக் வாரியம் தேர்ந்தெடுக்கிறதென்பது கேள்விக்குறியாகவே உள்ளது என்பது அவரின் கருத்து. 

“பிரபலமான மின்னிலக்க விளையாட்டுகளை ஏற்கனவே பல ஆண்டுகளாக விளையாடி வரும் தொழில்முறை விளையாட்டாளர்கள் உள்ளோம். அதனால், அத்தகைய விளையாட்டுகளுக்குப் போட்டியாளர்களைத் தேர்ந்தெடுப்பது சுலபமாக இருக்கும். ஆனால், புது மெய்நிகர் விளையாட்டுகளுக்குப் போட்டியாளர்களைத் தேர்ந்தெடுப்பது கடினமான காரியம்.” என்று 29 வயதான அம்ரான் கூறினார்.

மின்னிலக்க மோட்டார் விளையாட்டிற்காக இப்போட்டியில் சிங்கப்பூரை பிரதிநதிக்கும் 24 வயது திரு முகமது அலீஃப், ஞாயிற்றுக்கிழமை 11 மணிக்கு நடைபெறவுள்ள அவரது போட்டியை எதிர்பார்த்து காத்திருப்பதாகக் கூறினார். 

ஒலிம்பிக்ஸ் போன்ற பெருமைக்குரிய மேடையில் சிங்கப்பூரைப் பிரதிநிதிப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் வெற்றிப்பெற தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாகவும் அவர் பகிர்ந்துகொண்டார். 

2018ஆம் ஆண்டு முதல் தொழில்முறை மின்னிலக்க விளையாட்டாளராக உள்ள இவர், “ஒலிம்பிக்ஸ் வாரியம் முதல் முறை இப்போட்டியை நடத்துவதால் சில குறைபாடுகள் இருப்பது சாத்தியமே. ஆனால், இப்போட்டியிலிருந்து கற்றுக்கொண்டு அடுத்த முறை சிறப்பாக ஏற்பாடு செய்வார்கள் என்று நம்புகிறேன்.” என கூறினார். 

இப்போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கு உலக ஊக்க மருந்து ஆணையம், ஊக்க மருந்தின் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள், அவற்றால் அவர்கள் விளையாட்டு வாழ்வில் ஏற்படக்கூடிய விளைவுகள் ஆகியவற்றை விளக்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாடங்கள் நடத்துகிறது.

மின்னிலிக்க விளையாட்டுகளில் நீண்ட நேரம் திரையைப் பார்த்துக்கொண்டிருப்பது அவசியம் என்பதாலும், “ஜஸ்ட் டான்ஸ்” போன்ற மெய்நிகர் விளையாட்டுகளில் உடலளவிலான சோர்வு ஏற்படும் என்பதாலும் சில விளையாட்டாளர்கள் கூடுதல் உதவி பெற ஊக்க மருந்துகளை உட்கொள்வது உண்டு என அவ்வாணையம் குறிப்பிட்டது.

இப்பாடங்கள் ஊக்க மருந்துகள் குறித்து முக்கியமான தகவல்களைக் கற்பிப்பதாகவும் அவை பயனுள்ளதாக உள்ளன என்றும் விளையாட்டாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

ஒலிம்பிக் மின்னிலிக்க விளையாட்டு வாரப் போட்டிகள்

அம்பெய்தல்

இப்போட்டி “டிக் டாக் போ” என்ற திறன்பேசி அம்பெய்தல் விளையாட்டைப் பயன்படுத்தி நடக்கவுள்ளது. ஒன்பது சிறு கட்டங்கள் கொண்ட ஒரு பெரிய கட்டத்தில் வரிசையாக மூன்று சிறு கட்டங்களைக் கைப்பற்றுவதே போட்டியின் இலக்காகும்.

அடிப்பந்தாட்டம்

“வர்ல்ட் பேஸ்பால் சாஃப்ட்பால் கன்படரேஷன்: ஈ-பேஸ்பால்” என்ற மின்னிலக்க விளையாட்டைப் பயன்படுத்தி இப்போட்டி நடைபெறவுள்ளது.

சதுரங்க ஆட்டம்

“செஸ்.காம்” இணையத்தளம் வழி மின்னிலக்க முறையில் சதுரங்காட்ட போட்டி நடைபெறும்.

மிதிவண்டி ஓட்டுதல்

“ஸ்விஃப்ட்” என்ற ஊடாடும் மெய்நிகர் தளம் வாயிலாக இப்போட்டி நடைபெறும். போட்டியாளர்கள் ஒரே இடத்தில் பொருத்தப்பட்டிருக்கும் மிதிவண்டிகளை ஓட்டி போட்டியில் ஈடுபடுவர்.

நடன விளையாட்டு

இப்போட்டி “ஜஸ்ட் டான்ஸ்” என்ற அசைவு அடிப்படையிலான மின்னிலக்க விளையாட்டின் வழி நடத்தப்படவுள்ளது. போட்டியாளர்கள் திரையில் தெரியும் நடனமணிகளின் அசைவுகளை முடிந்தளவு அதே போல ஆட வேண்டும்.

மோட்டார் விளையாட்டு

மின்னிலக்க கார் பந்தய விளையாட்டான “கிரான் டரிஸ்மோ” விளையாட்டின் வழி போட்டியாளர்கள் இபோட்டியில் பங்கெடுப்பர்.

பாய்மர படகோட்டம்

இணைய விளையாட்டு தளமான “வர்ச்சுவல் ரெகாட்டா” வழி 11 போட்டியாளர்கள் இப்போட்டியில் பங்கெடுப்பர்.

சுடுதல்

உலகப்புகழ்பெற்ற “போர்ட்நைட்” விளையாட்டின் வழி போட்டியாளர்களின் சுடுதல் துல்லியத்தை இப்போட்டி மதிப்பிடும்.

டெக்வாண்டோ

உலக டெக்வாண்டோ வாரியமும் “ரிஃப்ராக்ட் டெக்னாலஜிஸ்” நிறுவனமும் இணைந்து, அசைவுகளை ஆராயும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மெய்நிகர் விளையாட்டு ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த போட்டியில் போட்டியாளர்கள் நேரடியாக மோதிக்கொள்ளாமல் மெய்நிகர் வாயிலாக மோதிக்கொள்வர். 

டென்னிஸ்

“டென்னிஸ் கிளாஷ்” என்ற இணைய விளையாட்டின் வழி இப்போட்டி நடைபெறவுள்ளது. 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!