ஸீ தமிழில் பாடும் சிங்கப்பூர் சிறுவர்கள்

‘ஸீ தமிழ் ஆசிய பசிபிக்’ ஒளிவழியில் சிங்கப்பூர்ச் சிறார் பாடுவதைக் காணும் நாள் நெருங்கிவிட்டது.

‘ஸீ தமிழ் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ்’ வருடாந்தர பாடல் போட்டியின் ஆசிய பசிபிக் சிறப்பு அங்கத்தில் மலேசியா, சிங்கப்பூரிலிருந்து கிட்டத்தட்ட 40 சிறார் பங்கேற்றனர்.

செப்டம்பர், அக்டோபரில் இணையம்வழி நடந்த தேர்வுச் சுற்றுக்குச் சிறுவர்கள் தாம் பாடிய 3-4 நிமிடப் பாடல் காணொளிகளை அனுப்பியிருந்தனர்.

ஐவர் மட்டுமே அக்டோபர் 28ஆம் தேதி கோலாலம்பூரில் நடந்த இரண்டாம் சுற்றுக்குத் தகுதிபெற்றனர். அவர்களில் இருவர் - அனன்யா சனூப், சஞ்ஜெய் கார்த்திகேயா சுரேஷ் குமார் - சிங்கப்பூரில் வசிப்பவர்கள்.

மற்ற மூவர் - நிஷாந்தினி நித்யஸ்ரீ நேசன், ஹேமித்ரா ரவிச்சந்திரன், சஹானா நவிந்திரன் - மலேசியாவைச் சார்ந்தவர்கள்.

இப்பயணத்திற்குச் சிறப்பு சேர்க்க, பிரபல பாடகர், இசையமைப்பாளர் மற்றும் முன்னாள் ‘சரிகமப’ போட்டியாளருமான அருள் பிரகாசம், இரண்டாம் சுற்றுக்குமுன் ஐவருக்கும் தனித்தனியாக பாடல் பயிற்சியும் வழங்கினார்.

இரண்டாம் சுற்றின் காணொளிகள் சென்னைக்கு அனுப்பப்பட்டன. அவற்றில் அனன்யா, நிஷாந்தினி பாடியவை, சென்ற சனி, ஞாயிறு மாலை 6 மணிக்கு ‘ஸீ தமிழ் ஆசிய பசிபிக்’ ஒளிவழியில் ஒளிபரப்பாகின.

இந்த சனி, ஞாயிறு சஞ்ஜெய், சஹானாவின் காணொளிகளும், அடுத்த சனிக்கிழமை ஹேமித்ராவின் காணொளியும் மாலை 6 மணிக்கு சிங்கப்பூர் மக்களுக்காக ஒளிபரப்பாகும்.

‘சரிகமப லிட்டில் சேம்ப்ஸ்’ நிகழ்ச்சியின் புகழ்பெற்ற நடுவர்கள் அவற்றை மதிப்பிட்டு தம்மோடு சென்னையில் நேரடியாக இணைய, இரு வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுப்பர்.

வெற்றியாளர்கள் டிசம்பர் 9ஆம் தேதியன்று ‘ஸீ தமிழ் ஆசிய பசிபிக்’ ஒளிவழியில் அறிவிக்கப்படுவர். அவர்கள் ஸ்ரீநிவாஸ், விஜய் பிரகாஷ், அபிராமி, சைந்தவி பிரகாஷ் ஆகிய நடுவர்களின் முன்னிலையில் பாடுவது டிசம்பர் 17ஆம் தேதி, சிங்கப்பூர், மலேசியா மக்களுக்கு சிறப்பு அரைமணி நேர அங்கமாக ஒளிபரப்பாகும்.

“நாங்கள் மக்களுக்குப் பொழுதுபோக்கு வழங்குவதற்காக மட்டும் செயல்படவில்லை; பலரது இதயங்களையும் தொடவிரும்புகிறோம்.

“அதனால் ஆசிய பசிபிக் மக்களுக்கென உருவாக்கப்பட்ட நிகழ்ச்சிகளை வழங்கி, திறன்களை வளர்த்து, சமூகத்திற்கு எங்கள் கடமையை ஆற்றிவருகிறோம்,” என்றார் ஸீ ஒளிவழியின் ஆசிய பசிபிக் தலைவர் சன்மேஷ் தாகூர்.

ஸீ தமிழ் ஆசிய பசிபிக், ‘சரிகமப’, ‘தமிழா தமிழா’, ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’, ‘சர்வைவர்’, ‘ஸீ ரீல்’ போன்றவற்றோடு, நற்பணிக் கேளிக்கை விழா, சொற்போர், பொங்கல் முதலான உள்ளூர் நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி ஆசிய பசிபிக் திறனாளர்களை உலகத்திற்கு அடையாளம் காட்டி வருகிறது.

@zeetamilapac இன்ஸ்டகிராம் தளத்திலும் நிகழ்ச்சிகளைக் காணலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!