நவீன பெண்களைச் சுண்டியிழுக்கும் ‘டிசைனர்’ ரவிக்கை மோகம்

ஆண்களின் சட்டை போன்ற ரவிக்கை. படம்: ஊடகம்
முதுகின் சிறு பகுதியில் மட்டும் பிளவுஸ் அணிவது வசதியாக இருந்தால், உங்கள் முதுகைப் பளிச்சிட இந்த ‘பேக் நெக் டிசைன்’ பொருத்தமாக இருக்கும்.   படம்: ஊடகம்
டபுள் ஸ்ட்ரைப் பேக், பேக்லெஸ் லேன்யார்ட், குறுக்குவெட்டு, பட்டர்ஃபிளை மாடல் போன்ற ரவிக்கை வடிவமைப்புகள் புதிய தோற்றத்தைத் தரும். படம்: ஊடகம்

காலம்காலமாகவே ரவிக்கை அணிவதில் தனிக்கவனம் செலுத்தி வருகின்றனர் பெண்கள்.

நவீன கால இளம்பெண்கள் முதல் மூத்த பெண்மணிகள் வரை சேலைகளுக்குச் செலவழிப்பது போல ரவிக்கைகளுக்கும்(பிளவுஸ்) பணத்தைத் தண்ணீராகச் செலவு செய்யத் தயங்குவதில்லை. விதவிதமான வடிவமைப்புகளுடன் ரவிக்கைகளை அணிந்துகொள்ளும் மோகம் பெண்களிடம் அதிகரித்து வருவதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

பெண்கள் பொதுவாகத் தங்களை அழகாக காட்டிக்கொள்ள விரும்புவர். இதன் காரணமாக, மற்றவர்களிடத்தில் இருந்து தங்களை வேறுபடுத்திக் காட்டிக்கொள்வதற்காகவே ரவிக்கைகளை விதவிதமாக, புதுப்புது வேலைப்பாடுகளுடன் அணிந்துகொள்ள விரும்புகின்றனர்.

அதிலும், குறிப்பாக மணப்பெண் அணியும் ரவிக்கைகள் காண்போரின் கண்களைக் கட்டிப்போடச் செய்கின்றன.

மணப்பெண் ரவிக்கைகளுக்கென்றே பிரத்யேகமான வடிவமைப்புகளும் அதைத் தைப்பதற்கென்றே சிறப்பான தையல் கலைஞர்களும் தற்போது பெருகி வருகின்றனர்.

முந்தைய காலங்களில் குறிப்பிட்ட சில வகை கழுத்து வகைகள் (நெக்) மட்டுமே பிரபலமாக இருந்தன. கழுத்தை மூடும் ‘ரூபா’ கழுத்து, ‘வி’ கழுத்து ரவிக்கைகளை பெண்கள் விரும்பி அணிவர். ஆனால், இப்போது அப்படி அல்ல.

புதிது புதிதான கழுத்து வகைகளையும் முதுகில் அழகழகான வடிவமைப்புகளைக் காட்டும் வகையிலும் பெண்கள் ரவிக்கைகள் அணிய ஆசைப்படுவதால், நாளும் விதவிதமான ரவிக்கை வகைகள் அறிமுகமாகி வருகின்றன.

கூடவே கையுள்ள சட்டை, கையில்லாத சட்டை, கைகளை மூடும் நீளக் கை சட்டை வகைகளும் நடைமுறையில் பயன்பாட்டில் உள்ளது.

திருமணங்கள், விழாக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளும் பெண்கள், ஆரி வேலைப்பாடுகள் கொண்ட பிளவுஸ் வகைகளையே அதிகம் விரும்புகிறார்கள்.

ஆரி வேலைப்பாடுகளில் மெஷின் வேலைப்பாடு, கைகளில் செய்யப்படும் வேலைப்பாடு என சட்டையின் மதிப்பும் தரமும் வேறுபடும். சில சட்டைகளில் மினுமினுக்கும் கற்கள் கோர்க்கப்பட்டு ரவிக்கையின் அழகை பன்மடங்கு கூட்டும்.

இவற்றுடன் பெயிண்டிங், எம்ப்ராய்டரி வேலைப்பாடுகளும் இப்போது பிளவுஸ்களை அலங்கரிக்கின்றன.

அதிக வேலைப்பாடுடைய ரவிக்கைகளுக்கு பிளைன் கான்ட்ராஸ்ட் வண்ணச் சேலைகளை அணிந்து செல்வதே ஒரு சிலரது விருப்பமாகவும் இருந்து வருகிறது.

முடிச்சு பிளவுஸ்: இவ்வித ரவிக்கைகளை நடிகைகள் அதிகம் அணிந்து பார்த்திருப்போம். இந்த ரவிக்கையின் பின்புறத்தில் கொக்கி இருக்காது. அதற்குப் பதில் முடிச்சு போட வேண்டும். அந்த முடிச்சை பலவகைகளில் வெவ்வேறு விதமாகப் போடலாம்.

ஹால்டர் நெக் பிளவுஸ்: சந்தையில் தனக்கான இடத்தைப் பிடித்துள்ளது. பல ஆண்டுகளாக பெண்கள் விரும்பி அணிகின்றனர் இது புடவை அல்லது லெஹெங்காவுடன் இணையும்போது சிறப்பான தோற்றத்தைத் தரும்.

சட்டை போன்ற ரவிக்கை: சட்டை போன்ற ரவிக்கை இந்திய, மேற்கத்திய உடைகளின் சரியான கலவையாகும். இது காலர்கள், பொத்தான்களுடன் நேர்த்தியாக தோற்றம் அளிக்கிறது. இது உங்கள் புடவை அல்லது லெஹங்காவுடன் இணைந்தால் பார்க்க மிகவும் அழகாக இருக்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!