புத்தாண்டே சிறகசைப்பாய்…

துப்பாக்கி முனைகள்

பூக்களைத் தூவ

கலக வெளிகளின்

காயங்கள் மறைய…

மதவாதங்கள்

மண்ணுக்குள் மடிய

மனிதநேயம்

மலர்ச்சியாய் உயிர்க்க…

மரபும் புதுசும்

வழக்கம்போல் சீண்டிக்கொள்ள

எம்மொழியான் சங்கங்கள்

எந்நாளும் ஒன்றாக…

அவளுக்கும் எனக்கும்

ஆயுள் சமமாக

அர்த்தப்படும் கனவுகளாய்

இரவுகள் உருவாக…

வன்முறைத் தாண்டவங்கள்

வற்றிக் கருக

வாழ்நாளின் இனிமையை

வையகம் சுவைக்க…

வல்லரசு சிற்றரசு

பேதம் பொடியாக

வளரும் நாட்களில்

வசந்தமழை வரவாக…

இனிமேலும்

ஒருபோதும்

இல்லாமைத்

துயர் நீங்க…

பெற்றோரைத்

தவிர்க்கின்றப்

பிள்ளைகள்

உளம் மாற…

உறவுகளின்

தூர்களில்

ஈரமண்

வேர்ப் பிடிக்க…

பசித்த புலிகளின்

புல்வெளியில்

பசுத்தோல் போர்த்தியப்

புலிகளின்றி…

புறாக்களின்

சிரிப்போடு

புத்தாண்டே

சிறகசைப்பாய்…

நெப்போலியன்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!