சீனப் புத்தாண்டு கொண்டாட்டம்

அன்று தமிழ் வகுப்பில் நாங்கள் சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தைப்பற்றியும் நியென் என்ற கொடூர விலங்கின் கதையைப்பற்றியும் கற்றுக்கொண்டோம்.

அதோடு சிங்க நடனம் மற்றும் கடல் நாக நடனத்தைப்பற்றியும் நிறைய தகவல்களை அறிந்துகொண்டோம்.

அன்று பாடத்திற்குச் சிறப்பு சேர்க்க நாங்கள் வகுப்பறையைச் சீனப் புத்தாண்டுக்காக அலங்கரித்தோம்.

சிவப்பு அதிர்ஷ்ட எழுத்துகளைச் சுவரில் ஒட்டினோம். மேசையில் மாண்டரின் ஆரஞ்சுப் பழங்களையும் மிட்டாய்களையும் வைத்தோம்.

பின்பு, சீனர்கள் குடும்ப ஒன்றுகூடல் விருந்தின்போது உண்ணும் சீனப் பாரம்பரிய உணவான யீஷெங்கை செய்து சாப்பிட்டோம்.

யீஷெங்கைச் செய்யும்போது நாங்கள் அதிர்ஷ்டம், மகிழ்ச்சி, இன்பம், அமைதி, உயர்வு, நற்பண்பு, உடல் ஆரோக்கியம், சிறந்த கல்வி போன்ற சொற்களைச் சத்தமாகக் கூறினோம். இவ்வாறு சீனப் புத்தாண்டைத் தமிழ் வகுப்பில் கொண்டாடியது ஒரு புது அனுபவமாக இருந்தது.

மறுநாள், சீனப் புத்தாண்டை முன்னிட்டு நாங்கள் சீனப் பாரம்பரிய உடையை அணிந்துகொண்டு பள்ளிக்குச் சென்றோம்.

பள்ளியில் சீனப் புத்தாண்டுப் பாடல்கள் எங்களை வரவேற்றன. நாங்கள் நண்பர்களுக்கு வணக்கம் கூறிவிட்டு உட்கார்ந்தோம்.

தேசிய கீதம் பாடி முடித்ததும் காதைப் பிளக்கும் சீன முரசொலி சத்தம் எங்கள் கவனத்தை ஈர்த்தது.

நாங்கள் உற்சாகம் அடைந்தோம். அப்போது கண்ணைக் கவரும் பளபளப்பான ஆடைகளை அணிந்துகொண்டு நால்வர் சிங்க நடனத்தை ஆடிக்கொண்டே எங்களை நோக்கி வந்தனர்.

அவர்களைத் தொடர்ந்து பத்துக்கும் மேற்பட்டோர் குச்சிகளை வைத்துக்கொண்டு கடல்நாக நடனத்தை ஆடி பல வித்தைகளைக் காட்டினர். அந்த இரு நடனங்களையும் பார்க்க எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. நாங்கள் கூச்சலிட்டு ஆரவாரம் செய்தோம்.

அடுத்து, பள்ளி மண்டபத்தில் ஒரு கலை நிகழ்ச்சியைப் பார்த்தோம். எங்கள் சீன நண்பர்கள் சீனப் புத்தாண்டு பாடல்களைப் பாடி நடனம் ஆடினார்கள்.

மேலும், எங்கள் ஆசிரியர்கள் ஃபூ, லூ, ஷோ - சீனக் கடவுள்களைப்போல் வேடம் பூண்டு அனைவருக்கும் தங்க நிறச் சாக்லேட் நாணயங்களைத் தந்தார்கள்.

நாங்கள் கை நிறைய சாக்லெட்டுகளைப் பெற்றுக்கொண்டோம். நாங்கள் மகிழ்ச்சியில் மானைப்போல் துள்ளிக் குதித்தோம். பின்பு அதே ஆனந்தத்தோடு நாங்கள் எங்கள் சீன நண்பர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வாழ்த்து கூறி வீடு திரும்பினோம்.

ஷே, தேவ், ஆனந்த்ராஜ், ப்ரண்ஷி, நிலா, அத்விக், ருத்திக்ஹா, அமெல்தியா, சுபாஷ், நவிலன், நிவன், சுவானிக்கா, ஹொஷானா.
தொடக்கநிலை 5
கேஸ்வெரீனா தொடக்கப்பள்ளி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!