மார்ச் 29ஆம் தேதி முதல் தேசிய பள்ளி விளையாட்டுப் போட்டிகள்

தேசிய பள்ளி விளை­யாட்­டுப் போட்டி­கள் இம்­மா­தம் 29ஆம் தேதி தொடங்கி, மே 27ஆம் தேதி வரை நடை­பெ­றும் என்று கல்வி அமைச்சு அறி­வித்­துள்­ளது.

ஆயி­னும், மாண­வர்­க­ளுக்கு இடை­யி­லான தொடர்­பும் ஒன்­று­கலப்­ப­தும் குறை­வாக இருக்­கும் 12 விளை­யாட்­டு­களில், 'ஏ', 'பி', 'சீனி­யர்' பிரிவு ஆகிய நிலை­களில் மட்­டுமே போட்­டி­கள் இடம்­பெ­றும் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

'சி' மற்­றும் 'ஜூனி­யர்' பிரிவு மாண­வர்­க­ளுக்­கான விளை­யாட்­டுப் போட்­டி­கள் மூன்­றாம் பரு­வத்­தில் இடம்­பெ­றும் என எதிர்­பார்க்­கப்­படு­கிறது.

உயர்­நிலை 3, 4, 5 மாண­வர்­கள் 'பி' பிரி­வி­லும் உயர்­நிலை 1, 2 மாண­வர்­கள் 'சி' பிரி­வி­லும் பங்­கேற்­பர். 'ஏ' பிரிவு போட்­டி­கள் தொடக்­கக் கல்­லூரி மாண­வர்­களுக்­கா­னது. 12-13 வயது தொடக்­கப் பள்ளி மாண­வர்­கள் 'சீனி­யர்' பிரி­வி­லும் 9-11 வயதினர் 'ஜூனி­யர்' பிரி­வி­லும் போட்­டி­யி­டு­வர்.

பூப்­பந்து, உருட்­டுப்­பந்து, குழிப்­பந்து, சீரு­டற்­ப­யிற்சி, கயிறு தாண்டு­தல், செப்­பாக் தக்­ராவ், துப்­பாக்கி சுடு­தல், மேசைப்­பந்து, டேக்­வாண்டோ, டென்­னிஸ், தரப்­பிற்கு மூவர் பங்­கேற்­கும் கைப்­பந்து, வூஷு ஆகிய விளை­யாட்­டு­களில் போட்டி­கள் நடை­பெ­றும்.

நீச்­சல், காற்­பந்து, கூடைப்­பந்து, ஹாக்கி உள்­ளிட்ட மற்ற 17 விளை­யாட்­டுப் போட்­டி­கள் தற்­கா­லி­க­மாக நிறுத்தி வைக்­கப்­படும்.

"மூன்­றாம் கட்­டத் தளர்­வின்­போ­தும் கொவிட்-19 பர­வும், புதிய கிரு­மித்­தொற்­றுக் குழு­மங்­கள் உரு­வா­கும் அபா­யம் நீடிக்­கிறது. அத­னால்­தான் பல்­வேறு பள்­ளி­க­ளைச் சேர்ந்த மாண­வர்­கள் ஒன்­று­க­லப்­பதைக் குறைக்க அமைச்சு முயன்று வரு­கிறது.

"அத்­து­டன், பெரிய அள­வி­லான கிரு­மித்­தொற்­றுக் குழு­மங்­கள் உரு­வா­வ­தைத் தவிர்ப்­ப­தற்­காக எல்­லாப் பள்­ளி­க­ளி­லும் பாது­காப்பு இடை­வெளி நட­வ­டிக்­கை­கள் வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்­றன," என்று கல்வி அமைச்சு தெரி­வித்­தது.

அனு­ம­திக்­கப்­பட்ட 12 விளை­யாட்­டு­க­ளி­லும் பாது­காப்பு நிர்­வாக நட­வ­டிக்­கை­கள் கடைப்­பி­டிக்­கப்­படும். போட்­டி­க­ளின்­போது அதி­க­பட்­சம் எட்டு விளை­யாட்­டா­ளர்­கள் மட்­டுமே ஒன்­று­க­லக்க முடி­யும்.

உருட்­டுப்­பந்து போன்ற விளை­யாட்­டு­க­ளின்­போது, மாணவ விளை­யாட்­டா­ளர்­கள் தங்­க­ளுக்­குள் குறைந்­தது 2 மீட்­டர் இடை­வெ­ளி­யைப் பேண வேண்­டும்.

ஒரு நேரத்­தில், ஒரு போட்­டி­ய­ரங்­கில் அதி­க­பட்­சம் 50 பங்­கேற்­பா­ளர்­கள் மட்­டுமே அனு­ம­திக்­கப்­படு­வர். எல்­லாப் போட்­டி­களும் மூடிய அரங்­கிற்­குள் நடத்­தப்­படும்.

வழக்­க­மாக, ஜன­வரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை இடம்­பெ­றும் தேசிய பள்ளி விளை­யாட்­டுப் போட்டி­களே சிங்­கப்­பூ­ரின் ஆகப் பெரிய விளை­யாட்டு நிகழ்ச்சி. ஏறக்­கு­றைய 60,000 மாண­வர்­கள் அப்­போட்­டி­களில் பங்­கேற்­பர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!