உள்ளூர் பண்ணைகளின் நிலைத்தன்மையான, பாதுகாப்பான உற்பத்திக்கு வழிகாட்டி நெறிமுறை

சுத்­த­மான, பசு­மை­யான உள்­ளூர் உற்­பத்­தியை உறுதி செய்­வ­தற்­கான புதிய வழி­காட்டி நெறி­மு­றை­கள் நேற்று அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்டன.

உள்­ளூர் காய்­கறி பண்­ணை­களி­லி­ருந்து உற்­பத்தி செய்­யப்­படும் காய்­க­றி­கள் புதி­தா­னவை, செயற்கை பூச்­சிக்­கொல்­லி­கள் பயன்­ப­டுத்­தப்­ப­டா­தவை, நிலை­யா­கக் கிடைக்­கக்­கூ­டி­யவை,

சுற்­றுச்­சூ­ழல் பாரா­ம­ரிப்பை விட்­டுக்­கொ­டுக்­கா­மலே, வளங்­க­ளைத் திறம்­பட பயன்­ப­டுத்தி உற்­பத்தி செய்­யப்­ப­டு­பவை என்­பதை பய­னீட்­டா­ளர்­க­ளுக்கு உறு­தி­ய­ளிக்க, இந்த வழி­காட்­டி நெறி­மு­றை­கள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன.

"எஸ்­எஸ் 661: சுத்­த­மான, பசு­மை­யான நகர்ப்­பு­றப் பண்­ணை­க­ளுக்­கான விவ­ரக்­கு­றிப்பு - வேளாண்மை", என்ற இந்த வழி­காட்­டி நெறி­மு­றை­கள் உள்­ளிட்ட தர­நி­லையை சிங்­கப்­பூர் உணவு முகவை (எஸ்­எ­ஃப்ஏ) என்­டர்­பிரைஸ் சிங்­கப்­பூர், சிங்­கப்­பூர் உற்­பத்தி சம்­மே­ள­னம், தர மேம்­பாட்டு அமைப்பு, ரிபப்­ளிக் பல­து­றை­தொழில் கல்­லூரி ஆகி­யவை இணைந்து அறி­வித்­துள்­ளன.

சுத்­த­மான, பசு­மை­யான உற்­பத்தி முறையை அடை­வ­தற்கு பண்ணை மேலாண்மை, நுட்­பங்­கள், நடை­மு­றை­கள் ஆகி­ய­வற்­றின் அடிப்­ப­டை­யில் நகர்ப்­புற காய்­க­றிப் பண்­ணை­கள் பெற்­றி­ருக்க வேண்­டிய தகு­தி­வி­தி­கள் இதில் உள்­ளன.

சுத்­த­மான பண்ணை உற்­பத்தி முறை என்­பது செயற்கை பூச்­சிக்­கொல்­லி­கள் போன்ற சுற்­றுச்­சூ­ழலை மாசு­ப­டுத்­தும் பொருட்­க­ளைப் பயன்­ப­டுத்­தா­தது. மேலும் பய­னா­ளர்­க­ளுக்­கும் சுற்­றுச்­சூ­ழ­லுக்­கும் விரும்­பத்­த­காத கழி­வு­களை உற்­பத்தி செய்­யா­தது.

பசு­மைப் பண்ணை உற்­பத்தி முறை­யா­னது, இயற்கை வளங்­க­ளை­யும் பண்ணை உற்­பத்­திப் பொருட்­க­ளை­யும் திறம்­ப­டப் பயன்­படுத்­து­வதை உறு­தி­செய்­கிறது. சுற்­றுச்­சூ­ழ­லி­லும் சுற்­றுச்­சூ­ழல் கட்­ட­மைப்­பி­லும் தாக்­கத்தை குறைக்க பண்­ணைக் கழி­வு­களை மறு­சு­ழற்சி செய்­வது, பண்ணை உற்­பத்­தியை அதி­க­பட்­சம் அதி­க­ரிப்­பது ஆகி­ய­வற்றை உறுதி செய்­கிறது.

பண்ணை ஊழி­யர்­க­ளுக்­கான குறைந்­த­பட்ச தகு­தித் தேவை­கள், வளங்­களை பொறுப்­பாக நிர்­வ­கிப்­ப­தற்­கான திட்­டங்­கள், பசு­மைக் கொள்­மு­தல் நடை­மு­றை­கள், பண்ணை செயல்­பா­டு­கள், அத்­து­டன் வாடிக்­கை­யா­ளர் புகார்­க­ளைக் கையாள்­வ­தற்­கான வழி­முறை­கள், பண்­ணைப் பொருட்­க­ளைத் திரும்­பப் பெறு­தல், உள் தணிக்­கை­களை நடத்­து­தல் ஆகி­யவை இந்த அள­வு­கோல்­களில் அடங்­கும்.

வளங்­கள் விர­ய­மா­வ­தைக் குறைப்­ப­தற்­கும், அவற்­றின் வள நிர்­வா­கத்­தில் சுற்­ற­றிக்­கையை இணைத்­துக்­கொள்­வ­தற்­கும், செயல்­பாட்டுத் தி­றனை அதி­க­பட்­சம் மேம்­ப­டுத்­து­வ­தற்­கும் காய்­கறி பண்­ணை­கள் அறி­வார்ந்த விவ­சாய நுட்­பங்­க­ளை­யும் நடை­மு­றை­க­ளை­யும் பின்­பற்ற உத­வும்.

பரு­வ­நிலைமாற்­றத்­தி­னால் அதி ­க­ரித்து வரும் சவால்­க­ளைக் கருத்­தில்­கொண்டு, இந்த வழி­காட்­டு­தல்­கள் தக்க நேரத்­தில் வெளியிடப்­பட்டு உள்­ளன என்­றார் சிங்­கப்­பூர் சிங்­கப்­பூர் உணவு முக­வை­யின் உணவ நிர்­வாக தலைமை இயக்­கு­ந­ரும் துணைத் தலைமை நிர்­வா­கி­யு­மான டாக்­டர் டான் லீ கிம்.

"பரு­வ­நிலை மாற்­றம், சிங்­கப்­பூ­ரின் உள்­ளூர் உணவு உற்­பத்தி உட்­பட உணவு விநி­யோ­கத் தொடரில் அழுத்­தத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டும். நிலப் பற்­றாக்­குறை உள்ள சிங்­கப்­பூ­ரில் வளங்­களை திறம்­பட பயன்­ப­டுத்­தக்­கூ­டிய விவ­சாய நடை­மு­றை­களை உள்­ளூர் பண்­ணை­கள் செயல்­ப­டுத்­து­வதை உறுதி செய்­வ­தில் தர­நிலை முக்­கி­ய­மா­ன­தாக இருக்­கும். அத்­து­டன் நீண்ட காலத்­திற்கு உற்­பத்தி நிலை­யா­ன­தாக இருக்­க­வும் உத­வும்," என்றார் டாக்­டர் டான்.

"இதன் விளை­வாக, உள்­ளூர் நகர்ப்­புற பண்­ணை­கள், வளங்­க­ளைப் பயன்­ப­டுத்­து­வ­தில் திற­மை­யான நடை­மு­றை­க­ளைப் பின்­பற்றி, சுத்­த­மான, நிலை­யான சூழ­லில் பாது­காப்­பான, தர­மான உணவு உற்­பத்­தி அங்­கீ­க­ரிக்­கப்­படும். இது உள்­ளூர் உற்­பத்­தியை வேறு­ப­டுத்தி, தனி முத்­தி­ரை­யைப் பதிக்­கும். மேலும் தர­மான உற்­பத்­திக்­கான சிங்­கப்­பூ­ரின் நற்­பெ­யரை மேலும் வலுப்­ப­டுத்­து­வ­து­டன், '30 இல் 30' இலக்கை அடைய செயல்­ப­டு­வோம்," என்­றார் டாக்­டர் டால்.

"30 இல் 30" இலக்கு என்­பது சிங்­கப்­பூர் அதன் ஊட்­டச்­சத்து தேவை­களில் 30 விழுக்­காட்டை 2030க்குள் உள்­நாட்­டில் உற்­பத்தி செய்­வ­தா­கும்.

சிங்­கப்­பூர் உணவு ஆணை­யம் உள்­ளூர் விவ­சா­யி­கள், தொழில்­துறை செயல்­பாட்­டா­ளர்­க­ளு­டன் இணைந்து தரம் பற்­றிய விழிப்­பு­ணர்வை ஊக்­கு­விக்­கும்.

தரத்தை பின்­பற்­று­வ­தில் பண்­ணை­க­ளுக்கு உதவ ஏப்­ரல் முதல் மூன்று நாள் பயிற்சி வகுப்பை ரிபப்­ளிக் பல­து­றை­தொ­ழில் கல்­லூரி நடத்­தும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!