தேசிய கபடி குழுவை அமைப்பது இந்த வெளிநாட்டு ஊழியரின் கனவு

கபடியில் விளையாட்டில் ஆர்வம் உள்ள வெளிநாட்டு ஊழியர் அண்ணாதுரை சுந்தர் (மேற்கண்ட காணொளியைப் பார்க்கவும்).

குளிரூட்டி தொழில்நுட்பராகப் பணிபுரிந்து வரும் இவர், சிங்கப்பூரில் தேசிய அளவில் நடந்த கபடிப் போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்றவர்.

சிங்கப்பூருக்காக தேசிய கபடிக் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்பதே இவரது கனவு.

குடும்பங்களைப் பிரிந்து வாழும் வெளிநாட்டு ஊழியர்கள், தங்களுக்கு உள்ள உணர்வுபூர்வமான ஆர்வங்களை விளையாட்டு, நடனம், கவிதை, சமையல் போன்றவற்றில் வெளிப்படுத்துவதன் மூலம் சமூக ஊடகங்களில் தங்கள் அன்புக்குரியவர்களுடன் தொடர்பில் இருந்து வருகின்றனர்.

சிங்கப்பூரில் வாழும் வெளிநாட்டு ஊழியர்கள் குறித்த காணொளித் தொடர் ‘சிங்கப்பூர் சோனெட்ஸ்’ என்ற பெயரில் ஆறு பாகங்களாக வெளியாகியுள்ளது.

ஆறு பகுதிகளைக் கொண்ட இந்தக் காணொளித் தொடரில் கபடி விளையாட்டில் தங்கப் பதக்கங்களை வென்ற ஒரு குளிரூட்டி தொழில்நுட்பர், யூடியூப் ஒளிவழியில் கவிதை வாசிக்கும் கட்டுமானத் தொழிலாளி மற்றும் ‘ராக் பேண்ட்’ அமைத்த ஒரு சேவைப் பொறியாளர் உள்ளிட்ட வெளிநாட்டு ஊழியர்களின் கதைகளும் கூறப்படுகின்றன.

இந்தத் தொழிலாளர்கள் சிங்கப்பூரில் வாழ்வது குறித்தும் இந்தியாவிலும் பங்ளாதேஷிலும் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றியும் பேசுகிறார்கள்.

காணொளித் தொடரில் ஊழியர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் அவர்களது சொந்த ஊர்களில் நடத்தப்பட்ட நேர்காணல்களும் அடங்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!