ஆள்சேர்ப்புத் திட்டங்களை முன்கூட்டி செயல்படுத்துக

கொவிட்-19 தாக்­கத்­தில் இருந்து மீண்டு ஊழி­யர்­க­ளின் சம்­ப­ளத்தை பழைய நிலையை நோக்கி சீரமைக்க முயலும் அல்­லது முன்­னேற்­றத்தை நோக்­கி இயங்கும் நிறு­வனங்களின் முத­லா­ளி­கள் அனை­வ­ரும் தற்­போ­தைய வர்த்­த­கச் சூழலை மறு­ம­திப்­பீடு செய்வதோடு ஊழியருக்கு நியாயமான வெகுமதி வழங்கவும் ஆள்நியமனத் திட்டங்களை முன்கூட்டியே செயல்படுத்தவும் தேசிய சம்­பள மன்­றம் வலி­யு­றுத்தியுள்­ளது.

இருப்­பி­னும், இன்­னும் செல­வுச் சிக்­க­லில் மூழ்கி, வர்த்­தக முன்­னேற்­றம் காணாத நிறு­வ­னங்­க­ளின் முத­லா­ளி­கள், தங்களது ஊழி­யர்­

க­ளின் வேலை­யைத் தக்­க­வைக்­கும் பொருட்டு, தற்­கா­லிக சம்­ப­ள வெட்டு நட­வ­டிக்­கை­யை தொடர்ந்து அமல்­ப­டுத்­த­லாம் என்­றும் மன்­றம் தெரி­வித்துள்­ளது.

இவை தற்­போ­தைய வழி­காட்­டிக் குறிப்­பு­களில் பிற்சேர்க்கையாக இணைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு வெளி­யி­டப்­பட்ட இந்த வழி­காட்­டிக் குறிப்­பு­கள் தற்­போ­தைய பொரு­ளி­யல் நில­வ­ரத்­திற்­குப் பொருந்­தும் வகை­யில் தொடர்ந்து நடப்­பில் இருக்­கும் வகை­யில் நவம்­பர் 30 வரை அவை நீட்­டிக்­கப்­ப­டு­வ­தாக உயர்­மட்ட மன்­றம் தெரி­வித்­தது. இதற்கு முன்­னர் அந்­தக் காலக்­கெடு ஜூன் 30 ஆக இருந்­தது. உல­க­ளா­விய பொரு­ளி­யல் சூழல் பின்­ன­டை­வைச் சந்­திக்­கும் என்ற கருத்­து­க­ளுக்கு மாறாக சிங்­கப்­பூ­ரின் மொத்த உள்­நாட்டு உற்­பத்தி இவ்­வாண்டு 6 விழுக்­காட்­டை­யும் தாண்டி வளர்ச்சி அடை­யக்­கூ­டும் என்ற நிலை­யில் மன்­றத்­தின் அறி­விப்­பு­கள் வெளி­வந்­துள்­ளன.

முன்­னு­ரைக்­கப்­பட்டுள்ள இந்த வளர்ச்சி, இதற்கு முன்­னர் வர்த்­தக தொழில் அமைச்சு கணித்­தி­ருந்த 4 விழுக்­காட்­டுக்­கும் 6 விழுக்­காட்­டுக்­கும் இடைப்­பட்ட அள­வைக் காட்­டி­லும் அதி­கம்.

அர­சாங்­கம், முத­லா­ளி­கள், தொழிற்­சங்­கங்­கள் ஆகி­ய­வற்­றின் பிர­தி­நி­தி­களை உள்­ள­டக்­கிய தேசிய சம்­பள மன்­றம், பொரு­ளி­யல் மீட்சி என்­பது துறை­க­ளுக்கு ஏற்ப மாறு

­ப­டு­வதை ஒப்­புக்­கொண்­டுள்­ளது. சில நிறு­வ­னங்­கள் மற்­ற­வற்­றைக் காட்­டி­லும் விரை­வா­கவே மீண்டு வரு­வதை அது குறிப்­பிட்­டது.

உதா­ர­ண­மாக, உற்­பத்தி, மொத்த வர்த்­த­கம், நிதி மற்­றும் காப்­பீடு, தக­வல் தொடர்பு போன்ற துறை­கள் வளர்ச்சி காணும் என்று எதிர்­பார்க்­கப்­படும் அதே நேரம் பய­ணத் துறை, விமா­னப் போக்­கு­வ­ரத்­துத் துறை போன்­ற­வற்­றின் வளர்ச்சி மேலும் தாம­த­ம­டை­யக்­கூ­டும் என்­பது மன்­றத்­தின் கணிப்பு.

கடந்த ஆண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் பல்­வேறு முத­லா­ளி­க­ளின் சூழ்­நி­லை­கள் கணி­ச­மாக மாற்­றம் கண்­டி­ருப்­ப­தாக மன்­றத்­தின் தலை­வர் பீட்­டர் சீ தெரி­வித்­தார். எனவே அவர்­க­ளின் வர்த்­த­கச் சூழலை மறு­ம­திப்­பீடு செய்ய வேண்­டிய அவ­சி­யம் எழுந்­தி­ருப்­ப­தாக ஹேவ்­லாக் ரோட்­டில் உள்ள மனி­த­வள அமைச்­சின் கட்­ட­டத்­தில் பேசும்­போது அவர் குறிப்­பிட்­டார்.

தேசிய சம்­பள மன்­றத்­தின் வரு­டாந்­தி­ரக் கூட்­டம் வழக்­க­மாக ஏப்­ரல் அல்­லது மே மாதம் நடை­

பெ­றும். இருப்­பி­னும் கொரோனா கிரு­மிப் பர­வல் சூழ­லில் கடந்த ஆண்டு முன்­கூட்டி மார்ச் மாதமே கூட்­டம் நடத்­தப்­பட்­டது. அப்­போது வெளி­யி­டப்­பட்ட அதன் வரு­டாந்­திர பரிந்­து­ரை­களில், நிறு­வன முத­லா­ளி­கள் தொடக்­க­மாக சம்­ப­ள­மற்ற செல­வு­க­ளைக் குறைப்­ப­தில் கவ­னம் செலுத்­து­மா­றும் அதற்கு அர­சாங்க ஆத­ர­வுத் திட்­டங்­க­ளைப் பயன்­ப­டுத்­திக்­கொள்­ளு­மா­றும் கேட்­டுக்கொள்­ளப்­பட்­ட­னர்.

அத­னைத் தொடர்ந்து அக்­டோ­பர் மாதம் உத­வி­களை உள்­ள­டக்­கிய வழி­காட்­டிக் குறிப்­பு­கள் வெளி­யி­டப்­பட்­டன.

ஆட்­கு­றைப்­பைக் குறைப்­ப­தற்­கான யோச­னை­கள் அதில் தெரி­விக்­கப்­பட்­டன. மேலும் நீக்­குப்­போக்­கான சம்­பள முறையை அமல்­ப­டுத்த அந்­தக் குறிப்­பு­கள் ஊக்­கு­வித்­தன.

பின்­னர் அந்­தக் குறிப்­பு­கள் புதுப்­பிக்­கப்­பட்டு கடந்த ஆண்டு நவம்­பர் 1 முதல் இவ்­வாண்டு ஜூன் 30 வரை அவை நடப்­பில் இருக்­கும் என்று அறி­விக்­கப்­பட்­டது. வேலை­யைக் காப்­பாற்­று­வ­தற்­காக ஊழி­யர்­க­ளின் சம்­ப­ளத்­தைக் குறைக்க அந்த வழி­காட்­டிக் குறிப்­பு­கள் அனு­ம­தித்­த­போ­தி­லும் அதற்கு ஊழி­யர்­க­ளின் ஆத­ரவை முத­லா­ளி­கள் பெற வேண்­டும் என்­றும் அவ­சி­ய­மான குறைப்­பு­களை மட்­டுமே மேற்­கொள்ள வேண்­டும் என்­றும் கேட்­டுக்­கொள்­ளப்­பட்­டது.

மீட்சி காணும் துறைகளுக்கு தேசிய சம்பள மன்றம் பரிந்துரை

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!