தொழில்முனைவராவதில் சிங்கப்பூரர்கள் ஆர்வம்

சிங்­கப்­பூ­ரின் புதிய தொழில்­நுட்ப நிறு­வ­னங்­கள் இவ்­வாண்­டின் முதல் பாதி­யில் $5.3 பில்­லி­யன் திரட்­டி­யுள்­ளன. கடந்த ஆண்­டின் முதல் பாதி­யில் பதி­வான $3.4 பில்­லி­ய­னைக் காட்­டி­லும் இது அதி­கம்.

கொவிட்-19 கொள்­ளை­நோ­யால் பல்­வேறு சவால்­கள் ஏற்­பட்­ட­போதும் சிங்­கப்­பூ­ரின் புதிய நிறு­வ­னங்­களுக்­கான கட்­ட­மைப்பு அதிக மீள்­தி­றன் உடை­ய­தாக இருப்­பதை இது காட்டு­வ­தாக 'என்­டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூர்' (இஎஸ்ஜி) அமைப்­பின் தலை­வர் பீட்­டர் ஓங் நேற்று கூறி­னார். நிதித் திரட்டு நிகழ்­வு­க­ளின் எண்­ணிக்­கை­யும் இவ்­வாண்­டின் முதல் ஆறு மாதங்­களில் 355 என்­றும் கடந்த ஆண்டு இது 317ஆக இருந்­தது என்­றும் அவர் குறிப்­பிட்­டார். கொள்­ளை­நோய் சூழ­லில் தொழில்­மு­னை­வர் ஆவ­தில் சிங்­கப்­பூ­ரர்­கள் கூடு­தல் ஆர்­வம் காட்டு­வ­தை­யும் அவர் சுட்­டி­னார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்­கி­யது முதல் இஎஸ்­ஜி­யின்­கீழ் 680க்கும் மேற்­பட்­டோர் தங்­களின் தொழில்­மு­னைப்­புத் திட்­டங்­கள் மூலம் பயிற்சி பெற்­றுள்­ள­தா­கக் கூறப்­பட்­டது. இவர்­களில் கிட்­டத்­தட்ட 50 விழுக்­காட்­டி­னர் பணி­யி­டைக்­கால பட்­டத்­தொ­ழி­லர்­கள், மேலா­ளர்­கள், நிர்­வா­கி­கள் மற்­றும் தொழில்­நுட்­பர்­கள் ஆவர்.

இந்த வளர்ச்­சி­யைத் தொடர்ந்து தக்­க­வைத்­துக்­கொள்­ள­வும் மேலும் அதிக தர­மான புதிய நிறு­வ­னங்­களுக்கு ஆத­ரவு வழங்­க­வும் இஎஸ்­ஜி­யின் முத­லீட்­டுப் பிரிவு 'சீட்ஸ் கேப்­பிட்­டல்' அதன் இணை முத­லீட்­டுப் பங்­கா­ளி­க­ளாக 13 புதிய தொழில்­மு­னைப்பு நிறு­வ­னங்­களை நிய­மிக்­க­வுள்­ளது.

இதன்­மூ­லம் பங்­கா­ளி­க­ளின் எண்­ணிக்கை 46ஆக உய­ரும் என்று கூறப்­பட்­டது. நிறு­வ­னங்­கள் மூலம் பெறப்­படும் முத­லீ­டு­க­ளின் மதிப்பு $150 மில்­லி­ய­னுக்கு மேல் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

நிதி வழங்­கு­வ­து­டன் இந்­தப் பங்­காளி நிறு­வ­னங்­கள் வழி­காட்­ட­வும் புதிய நிறு­வ­னங்­க­ளின் வணி­க­மய முயற்­சி­க­ளுக்­குக் கைகொடுக்­க­வும் உள்­ளன.

 

சிங்­கப்­பூ­ருக்கு நான்­கா­வது இடம்

 

புதி­தாக தொடங்­கப்­படும் நிறு­வனங்­கள் துரி­த­மாக வளர்ந்து $1 பில்­லி­ய­னுக்கு மேல் மதிப்பு பெற்று­வி­டு­வ­தன் தொடர்­பில் உல­கி­லேயே தலை­சி­றந்த பொரு­ளி­யல் சூழல் கொண்­ட­தற்­காக சிங்­கப்­பூர் நான்­கா­வது இடத்­தைப் பிடித்­துள்­ளது. பிரிட்­டிஷ் விலை ஒப்­பீட்டு இணை­யத்­த­ளம் ஒன்று வெளி­யிட்ட இப்­பட்­டி­ய­லில் இது தெரி­ய­வந்­துள்­ளது.

சிங்­கப்­பூ­ரின் ஆறு புதிய நிறு­வனங்­கள், சரா­ச­ரி­யாக ஆறு ஆண்டு­கள் 11 மாதங்­களில் $1 பில்­லி­யன் அமெ­ரிக்க டாலர் (S$1.35 பி.) மதிப்­பைத் தாண்­டி­ய­தா­கக் கூறப்­பட்­டது.

பட்­டி­ய­லின் முத­லி­டத்தை சீனா பிடித்­தி­ருந்­தது. அதன் 155 புதிய நிறு­வ­னங்­கள் சரா­ச­ரி­யாக ஐந்­தாண்டு­கள் பத்து மாதங்­களில் அதே ஒரு பில்­லி­யன் குறி­யீட்­டைத் தாண்­டி­ய­தா­கக் கூறப்­பட்­டது.

இரண்­டாம் இடத்­தில் ஹாங்­காங் என்­றும் மூன்­றாம் இடத்­தில் ஜப்­பான் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

சிங்­கப்­பூ­ரு­டன் நான்­காம் இடத்­தைப் பிடித்­தி­ருந்­தன 378 புதிய நிறு­வ­னங்­க­ளு­டைய அமெ­ரிக்கா மற்­றும் ஆறு நிறு­வ­னங்­க­ளு­டைய ஆஸ்­தி­ரே­லியா.

இதற்­கி­டையே $1 பில்­லி­யன் மதிப்­பைத் தாண்­டிய ஆக அதி­க­மான புதிய நிறு­வ­னங்­க­ளைக் கொண்ட நாடாக அமெ­ரிக்கா உள்­ளது. அதற்கு அடுத்த நிலை­யில் 155 நிறு­வ­னங்­க­ளு­டன் சீனா­வும் அடுத்து 34 நிறு­வ­னங்­க­ளு­டன் இந்­தி­யா­வும் இடம்­பெற்­றுள்­ளன.

உல­கி­லேயே இத்­த­கைய மதிப்­பு­டைய புதிய நிறு­வ­னங்­கள் அரி­தா­னவை என்­றும் 750 மட்­டுமே உள்­ளன என்­றும் பட்­டி­யலை வெளி­யிட்ட தளம் குறிப்­பிட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!